பலராம்பூர் மாவட்டம்
Appearance
- சத்தீஸ்கரில் பலராம்பூர் மாவட்டம் என்றொரு மாவட்டம் உள்ளது!
பலராம்பூர் மாவட்டம் बलरामपुर जिला | |
---|---|
பலராம்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | தேவிபட்டான் கோட்டம் |
தலைமையகம் | பலராம்பூர் |
பரப்பு | 3,457 km2 (1,335 sq mi) |
மக்கட்தொகை | 2,149,066 (2011) |
படிப்பறிவு | 51.76% |
மக்களவைத்தொகுதிகள் | சிராவஸ்தி மக்களவைத் தொகுதி |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பலராம்பூர் மாவட்டம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் ஒன்று, இதன் தலைநகர் பலராம்பூர். இது அவத் பகுதியில் உள்ளது. சக்தி பீடங்களில் ஒன்றான பாடேசுவரி தேவி கோயில் இங்குள்ளது. இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. வரலாற்று அடிப்படையில், இது பழங்கால கோசலை ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இதன் பரப்பளவு 3,457 சதுர கி.மீ. இதி மொழியில் பேசுகின்றனர். பிரபல இந்தி, ஆங்கில நாளேடுகள் இங்கு கிடைக்கின்றன. முன்னணி செல் சேவை நிறுவனங்களின் சேவைகள் இங்கு கிடைக்கிறது.