உள்ளடக்கத்துக்குச் செல்

கோரக்பூர் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரக்பூர் கோட்டம்
ஆணையர் அலுவலகம்
அரசு
 • கோட்ட ஆணையர்செயந்து நர்லிக்கர்[1][2]

கோரக்பூர் கோட்டம் (Gorakhpur division) வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் நிர்வாக புவியியல் அலகு ஆகும். கோரக்பூர் இந்த கோட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். கோரக்பூர் கோட்டம் நான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ளது::[3]

மாவட்டங்கள்

[தொகு]

வரலாறு

[தொகு]

1801 ஆம் ஆண்டில், அவாத்து நவாப்பால் இப்பகுதி கிழக்கிந்திய கம்பெனிக்கு மாற்றப்பட்டது. கோரக்பூர் ஒரு மாவட்டமாக உயர்த்தப்பட்டது. 1829 ஆம் ஆண்டில், கோரக்பூர், காச்சிபூர் மற்றும் அசம்கர் மாவட்டங்களை உள்ளடக்கிய அதே பெயரில் ஒரு பிரிவின் தலைமையகமாக கோரக்பூர் ஆனது. ஆர்.எம். பயாட் முதலில் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இப்போதெல்லாம், கோரக்பூர் ஆயத்த ஆடைகளுக்கான மையமாக மாறியுள்ளது மற்றும் சுடுமண் பாண்டப் பொருள்களுக்கும் பெயர் பெற்றது.[4]

தற்போது, கோரக்பூர் கோட்டத்திற்கு தெற்கே அமைந்துள்ள அசம்கர் ஒரு தனி கோட்டமாகும். அதே சமயம் இன்றைய காசிபூர் மாவட்டம் வாரணாசி கோட்டத்தின் ஒரு பகுதியாகவும், காச்சிப்பூரிலிருந்து பிரிக்கப்பட்ட பல்லியா மாவட்டம் இப்போது அசம்கர் பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "जयंत नार्लिकर बने गोरखपुर कमिश्नर". IndiaTimes. https://navbharattimes.indiatimes.com/metro/lucknow/other-news/jayant-narlikar-becomes-gorakhpur-commissioner/articleshow/68603608.cms. 
  2. "Department of Appointment & Personnel, Government of Uttar Pradesh". http://niyuktionline.upsdc.gov.in/ias-posting-detail.htm?303. 
  3. "Basic Statistics: Gorakhpur division". gkpdiv.up.nic.in. Archived from the original on 28 June 2018. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017.
  4. "Gorakhpur division: History". gorakhpur.nic.in. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017.