அமேதி மாவட்டம்
அமேதி மாவட்டம் | |
---|---|
அமேதிமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பைசாபாது கோட்டம் |
தலைமையகம் | கௌரிகஞ்சு |
பரப்பு | 3,063 km2 (1,183 sq mi) |
வட்டங்கள் | 4 |
மக்களவைத்தொகுதிகள் | அமேதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 5 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அமேதி மாவட்டம் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 72 மாவட்டங்களில் ஒன்றாகும். இது பைசாபாது கோட்டத்திற்கு உட்பட்டது. இதன் தலைமையகம் கௌரிகஞ்சு நகரில் உள்ளது. நேரு குடும்பத்தினரில் பலரும் அமேதி மக்களவைத் தொகுதியின் சார்பாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். சில ஆண்டுகளுக்கு, "சத்திரபதி சாகுஜி மகராஜ் நகர்" என்ற பெயரில் இயங்கியது. பின்னர், அமேதி என்ற பழைய பெயருக்கே மாற்றப்பட்டது.
மக்கள் தொகை
[தொகு]2013 ஆம் ஆண்டில் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்தனர்.[1]
போக்குவரத்து
[தொகு]உத்தரப் பிரதேசத்தின் ஏனைய பெருநகரங்களுடன் அமேதி இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி, லக்னோ, கான்பூர், டேராடூன், ஹரித்துவார், அலகாபாது, வாரணாசி, கல்கத்தா, பூரி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில் போக்குவரத்து வசதி உள்ளது.
சில உத்தரப் பிரதேச சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இங்கிருந்து இயங்குகின்றன. [2]
பிரிவுகள்
[தொகு]இது கௌரிகஞ்சு, அமேதி, முசாபிர்கானா, சலோன், திலோய் ஆகிய ஐந்து வட்டங்களைக் கொண்டது. [3] இந்த மாவட்டத்தின் பெரிய நகரமாக அமேதி விளங்குகிறது.
இது கௌரிகஞ்சு, ஜகதீஷ்பூர், அமேதி, திலோய், சலோன் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. இவை அனைத்தும் அமேதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [3]
சான்றுகள்
[தொகு]- ↑ Verma, Lalmani (7 June 2013). "Amethi to remain district, but with one less tehsil". The Indian Express. http://archive.indianexpress.com/news/amethi-to-remain-district-but-with-one-less-tehsil/1126137/. பார்த்த நாள்: 1 June 2014.
- ↑ "Rahul Gandhi never raised Amethi's problems in Parl: Kumar Vishwas". One India News. 12 January 2014. http://news.oneindia.in/lucknow/rahul-gandhi-never-raised-amethi-s-problems-in-parl-kumar-vishwas-1375215.html. பார்த்த நாள்: 5 March 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 3.0 3.1 Khan, Atiq (1 July 2010). "Uttar Pradesh gets one more district". The Hindu இம் மூலத்தில் இருந்து 20 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121020074821/http://www.thehindu.com/news/states/other-states/article495340.ece. பார்த்த நாள்: 18 August 2010.