ஜவுன்பூர் மாவட்டம்
ஜவுன்பூர் மாவட்டம் जौनपुर ज़िला جون پور ضلع | |
---|---|
ஜவுன்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | வாரணாசி கோட்டம் |
தலைமையகம் | ஜவுன்பூர் |
பரப்பு | 4,038 km2 (1,559 sq mi) |
மக்கட்தொகை | 4,476,072 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,108/km2 (2,870/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 333,649 |
படிப்பறிவு | 73.66% |
பாலின விகிதம் | 1018 |
வட்டங்கள் | பத்லாபூர், ஷாகஞ்சு, மச்சாலி ஷாகர், ஜவுன்பூர், மரியாஃகு, கேராகத் |
மக்களவைத்தொகுதிகள் | ஜவுன்பூர், மச்சிலிஷாகர் |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 987 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ஜவுன்பூர் மாவட்டம் இந்திஹ்ய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. இதன் தலைமையகம் ஜவுன்பூர் நகரில் அமைந்துள்ளது. இது வாராணசி கோட்டத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. இதன் பரப்பளவு 4038 சதுர கி.மீ.
பொருளாதாரம்
[தொகு]இந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் உழவுத் தொழில் பெரும்பங்கு கொண்டுள்ளது. இந்த மாவட்டம் இந்தியாவில் உள்ள வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியைப் பெறுகிறது. [1] அரசி, சோளம், உளுந்து ஆகியவை விளைகின்றன. இங்கு தொழிற்சாலைகள் ஏதுமில்லை.
மக்கள்
[தொகு]2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 4,476,072 மக்கள் வாழ்ந்தனர். 73.66 சதவிகிதம் பேர் கல்வி கற்றிருந்தனர். பால் விகிதக் கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 1018 பெண்கள் இருப்பது தெரிய வந்தது. [2]
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இது மூன்று மக்களவைத் தொகுதிகளைக் கொண்டது. ஜவுன்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் இந்த மாவட்ட எல்லைக்கு உட்பட்டிருக்கின்றன. பிற இரண்டு தொகுதிகளில் பிற மாவட்டங்களில் அமைந்துள்ளன. பத்து சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டது. கீழ்க்கண்ட ஆறு வட்டங்களைக் கொண்டது.
- ஷாகஞ்சு
- பத்லாபூர்
- மச்சாலி ஷாகர்
- ஜவுன்பூர்
- மரியாஃகு
- கேராகத்
சான்றுகள்
[தொகு]- ↑ Ministry of Panchayati Raj "A note on the Backward Regions Grant Fund Programme." பரணிடப்பட்டது 2012-04-05 at the வந்தவழி இயந்திரம் National Institute of Rural Development. 8 September 2009. Accessed 27 September 2011.
- ↑ Jain H. K. "Census 2011." Website accessed 4 December 2013.
இணைப்புகள்
[தொகு]