ராம்லீலா
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ இராமலீலை உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) Proposed since மார்ச் 2024. |
ராம்லீலா (Ramlila) நவராத்திரிக்கு அடுத்த நாளான விஜயதசமி அன்று மக்கள் முன்னிலையில் கலைஞர்கள் இராமனின் வரலாற்று நிகழ்வுகளை நாடகமாகவும், நாட்டிய நாடகமாகவும் நடித்து காண்பிப்பர். இறுதியில் தீய சக்திகளாகக் கருதப்படும் அரக்கர்களான இராவணன், கும்பகர்ணன் மற்றும் இந்திரஜித் ஆகியோர்களின் உருவப் பொம்மைகளை, இராமர் அம்பெய்து எரிப்பதாக அமையும்.
இராமனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் துளசிதாசர் எழுதிய ராமசரிதமானஸ் [1])[2][3] [4] [5] எனும் இராம காதையை, நவராத்திரியின் போது மக்கள் முன்னிலையில் நாட்டிய நாடகமாக அரங்கேற்றுவர்.[6] தீயசக்திகளுக்கும் (அதர்மம்), நற்சக்திகளுக்கும் (தருமம்) இடையே நடைபெறும் போரில், இறுதியாக தீயசக்திகள் முற்றிலுமாக அழிக்கப்படுவதை நினைவு கூறுமுகமாக, நவராத்திரியின் இறுதி நாளான, விஜயதசமி அன்று இரவில் புதுதில்லி ராம்லீலா மைதானத்தில் தீயசக்திகளான இராவணன், கும்பகர்ணன் மற்றும் இந்திரஜித் ஆகியோர்களை பெரிய அளவில் பொம்மைகளாக நிறுத்தி வைத்து, இராமர் வேடமிட்ட கலைஞர் அம்பெய்து எரிப்பர்.[2][7]
ராம்லீலா பண்டிகை போன்று மேற்கு வங்காளத்தில் அன்னை துர்கை, கொடுங்குணம் கொண்ட எருமைத் தலைக் கொண்ட மகிசாசூரன் போன்ற அரக்கர்களை அழிக்கும் நிகழ்வை, துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.[4]
2008ல் யுனெஸ்கோ நிறுவனம் ராம்லீலா பண்டிகையை மனிதகுலத்தின் தொன்மையான பண்பாட்டு நிகழ்வாக அறிவித்துள்ளது. வரலாற்று புகழ் வாய்ந்த அயோத்தி, வாரணாசி, பிருந்தாவனம், மதுரா, அல்மோரா மற்றும் மதுபனி ஆகிய நகரங்களில் ஆண்டுதோறும் ராம்லீலா பண்டிகை வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [2][8]
வாரணாசியில் ராம்லீலா
[தொகு]விஜயதசமி அன்று ராம்லீலா விழா வண்ணமயமான அலங்காரங்களுடன் ஆரம்பமாகும் போது காசி நாட்டு மன்னர் பளபளக்கும் பட்டுப் பீதாம்பரங்களை அணிந்து, ராம் லீலா ஊர்வலத்துக்குத் தலைமையேற்று யானையில் வலம் வருவார்.[9]பின்னர் வாரணாசியின் ராம்நகரில் ஒரு மாத காலம் நடக்கும் ராம்லீலா நாடகத்தை துவக்கி வைப்பார்.[9]
துளசிதாசர் எழுதிய ராமாயணமான ராமசரித மானசில் கூறப்பட்டுள்ள ராமபிரானின் கதையை நடித்துக் காட்டும் நாடகமாகும்.[9] இராம நாடகம், ராம்நகரில் மாலை நேரத்தில், தொடர்ந்து 31 நாட்களுக்கு நடைபெறும்.[9] விழாவின் இறுதிநாளில் இது உச்சகட்டத்தை அடையும். இதன்போது ராமர் வேடமிட்ட கலைஞர், ராவணன் வேடமிட்ட கலைஞரை அம்பெய்து அழிப்பார்.[9] 19ம் நூற்றாண்டில், மகாராஜா உதித் நாராயண் சிங் என்பவரே ராம்நகரில் ராம்லீலாவை அரங்கேற்றும் வழக்கத்தை துவக்கினார்.[9]
காசி மன்னரால் நடாத்தப்படும் விழாவைக் காண ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவர்.[10]
வெளி நாடுகளில்
[தொகு]தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேசியாவின் பாலித் தீவு]]களில் கிபி 1000 ஆண்டுக்களுக்கு முன்னரே இராமகாதை நாட்டிய நாடகமாக அரங்கேற்றப்பட்டுவருகிறது.[11] தற்போது மேற்குலக நாடுகளிலும் இராம லீலை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[12]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jennifer Lindsay (2006). Between Tongues: Translation And/of/in Performance in Asia. National University of Singapore Press. pp. 12–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9971-69-339-8.
- ↑ 2.0 2.1 2.2 Ramlila, the traditional performance of the Ramayana, UNESCO
- ↑ Constance Jones & James D. Ryan 2006, ப. 457.
- ↑ 4.0 4.1 James G. Lochtefeld 2002, ப. 389.
- ↑ Schechner, Richard; Hess, Linda (1977). "The Ramlila of Ramnagar [India]". The Drama Review: TDR (The MIT Press) 21 (3): 51-82. doi:10.2307/1145152.
- ↑ Encyclopedia Britannica 2015.
- ↑ Ramlila Pop Culture India!: Media, Arts, and Lifestyle, by Asha Kasbekar. Published by ABC-CLIO, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85109-636-1. Page 42.
- ↑ James G. Lochtefeld 2002, ப. 561-562.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 Mitra, Swati (2002). Good Earth Varanasi city guide. Eicher Goodearth Limited. pp. 216 (at p 126). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87780-04-5.
- ↑ Banham, Martin (second edition, 1995). The Cambridge Guide to Theatre. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 1247. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-43437-9.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ Mandakranta Bose (2004). The Ramayana Revisited. Oxford University Press. pp. 342–350. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-516832-7.
- ↑ Ramlila - The traditional performance of Ramayana - Part I & II பரணிடப்பட்டது 2017-08-14 at the வந்தவழி இயந்திரம் Indira Gandhi National Centre for the Arts
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Cynthia Bradley (2012). Denise Cush; Catherine Robinson; Michael York (eds.). Encyclopedia of Hinduism. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-18979-2.
- Alain Daniélou (1991). The Myths and Gods of India: The Classic Work on Hindu Polytheism from the Princeton Bollingen Series. Inner Traditions / Bear & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89281-354-4.
- Constance Jones; James D. Ryan (2006). Encyclopedia of Hinduism. Infobase Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7564-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - David Kinsley (1988). Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-90883-3.
- David R. Kinsley (1989). The Goddesses' Mirror: Visions of the Divine from East and West. State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88706-835-5.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: N-Z. The Rosen Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8239-2287-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Rocher, Ludo (1986). The Puranas. Otto Harrassowitz Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3447025225.
- "Navratri – Hindu festival". Encyclopedia Britannica. 2017-02-21. பார்க்கப்பட்ட நாள் 2017-02-21.
- Actors, Pilgrims, Kings And Gods: The Ramlila of Ramnagar, by Anuradha Kapur, Seagull, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-905422-20-2.
- "Peasants in the Pacific: A Study of Fiji Indian Rural Society," Adrian C. Mayer, Routledge & Kegan Paul, London, 1973.
- "The Cambridge Guide to Asian Theatre," James R. Brandon, Cambridge University Press, 1997.