உள்ளடக்கத்துக்குச் செல்

பகீரதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகீரத தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்
பகீரதனின் கடும் தவத்தால், வானிலிருந்து பூமியில் இறங்கி வரும் கங்கை, மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள், தமிழ்நாடு, இந்தியா

பகீரதன் சூரிய குலத்து திலீபனின் மகன். இராமரின் முன்னோரும் கங்கையும் பூலோகத்திற்கு வரக் காரணமானவர். கங்கை பூமிக்கு வந்த நாள் வைகாசி மாத வளர்பிறை பத்தாம் நாள் என வழங்கப்படுகின்றது.[1] கங்கையை பகீரதன் கொண்டு வந்ததால், கங்கைக்கு பகீரதி என்றும் பாகீரதி என்றும் பெயர் ஏற்பட்டது.[2]

தொன்மம்

[தொகு]

ஆதியில் அயோத்தி நாட்டரசர் இசுவாகு குலத்து சகரர் என்பவர் குழந்தைப்பேறின்மையால் இறைவனிடம் வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது மனைவியான சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும், கேசினிக்கு ஒரே ஒரு குழந்தையும் பிறந்தனர்.

பின்னர், அசுவமேத யாகம் செய்வதற்காக சகரர் அனுப்பிய குதிரை காணாமல் போயிற்று. 60 ஆயிரம் மகன்களும் குதிரையைத் தேடி வருகையில் கபில முனிவர் குகை வாயிலில் குதிரை நிற்பதைக் கண்டு கபிலரே குதிரையைப் பிடித்து வைத்திருப்பதாகக் கருதி சண்டைக்குப் போனதால் கபிலரால் சபிக்கப்பட்டு சாம்பலானார்கள்.

இதன்பின் கேசினியின் மகன் அரசுரிமைக்கு வந்து அவருக்குப் பின்னர் அவரது மகனான பகீரதன் அரசாண்டபோது தமது முன்னோர்களுக்கு நிகழ்ந்ததைத் தெரிந்துகொண்டார்.[3]

தன் அறுபதாயிரம் முன்னோர்களுக்கு கபில முனிவரால் உண்டான சாபத்தை நீக்குவதற்காக சிவபெருமானை நோக்கி தவமிருந்து சிவபெருமானின் அருளுடன் கங்கை ஆற்றை பூமியில் இறக்கினார். கங்கை நீர் பட்டவுடன் பகீரதனின் முன்னோர்கள், பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சாபத்திலிருந்து விடுபட்டு வீடுபேறு எனும் முக்தி அடைந்தனர்.

விடாமுயற்சி

[தொகு]

பகீரதப் பிரயத்தனம் (கடுமையான விடாமுயற்சி) எனும் சொல்லும் இவரது கடினமான விடாமுயற்சியைக் குறித்து, செய்வதற்கு அரியது எனக்கருதப்படும் செயலுக்கு வழங்கப்படலாயிற்று.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-07. பார்க்கப்பட்ட நாள் 2014-10-19.
  2. http://www.tamilvu.org/slet/l5100/l5100pd1.jsp?bookid=87&pno=139
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2014-10-19.

மேலும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகீரதன்&oldid=3801620" இலிருந்து மீள்விக்கப்பட்டது