உள்ளடக்கத்துக்குச் செல்

காட்மியம் புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்மியம் புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காட்மியம் புளோரைடு
வேறு பெயர்கள்
காட்மியம்(II) புளோரைடு, காட்மியம் டைபுளோரைடு
இனங்காட்டிகள்
7790-79-6 Y
ChemSpider 23036 Y
EC number 232-222-0
InChI
  • InChI=1S/Cd.2FH/h;2*1H/q+2;;/p-2 Y
    Key: LVEULQCPJDDSLD-UHFFFAOYSA-L Y
  • InChI=1/Cd.2FH/h;2*1H/q+2;;/p-2
    Key: LVEULQCPJDDSLD-NUQVWONBAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24634
71356118 டைஐதரேட்டு
  • F[Cd]F
பண்புகள்
CdF2
வாய்ப்பாட்டு எடை 150.41 கி/மோல்
தோற்றம் சாம்பல் நிறம் அல்லது வெண்ணிறப் படிகங்கள்
அடர்த்தி 6.33 கி/செமீ3, திண்மம்
உருகுநிலை 1,110 °C (2,030 °F; 1,380 K)
கொதிநிலை 1,748 °C (3,178 °F; 2,021 K)
4.35 கி/100 மிலி
கரைதிறன் அமிலத்தில் கரையும்
எத்தனால், திரவ அம்மோனியா மற்றும் ஆல்ககால் ஆகியவற்றில் கரையாது
-40.6·10−6 செமீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு புளோரைட்டு (கனசதுரம்), cF12
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-167.39 ± 0.23 கிகலோரி. மோல்-1 298.15 (கெ, செ?)இல்
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H330, H340, H350, H360, H372, H400, H410
P201, P202, P260, P264, P270, P271, P273, P281, P284, P301+310, P304+340, P308+313, P310, P314
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
[1910.1027] TWA 0.005 மிகி/மீ3 (as Cd)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
Ca[1]
உடனடி அபாயம்
Ca [9 மிகி/மீ3 (as Cd)][1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் காட்மியம் குளோரைடு,
காட்மியம் புரோமைடு
காட்மியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் துத்தநாக புளோரைட்டு,
பாதரச (II) புளோரைடு,
தாமிர(II) புளோரைடு,
வெள்ளி(II) புளோரைடு,
கால்சியம் புளோரைடு,
மக்னீசியம் புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

காட்மியம் புளோரைடு (Cadmium fluoride) (CdF2) அதிகளவில் நீரில் கரையாத காட்மியத்தின் மூலச்சேர்மாகும்.இச்சேர்மம் ஆக்சிசனுக்கு எளிதில் துலங்கக்கூடிய பயன்பாடுகளான கலப்புலோகங்கள் தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. மிகக்குறைவான செறிவுகளில்(இவொவ),இச்சேர்மமும், இதர புளோரைடு சேர்மங்களும் மருத்துவ சிகிச்சை நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது.புளோரைடு சேர்மங்கள் தங்கள் வசத்திலும் பல தொகுப்பு முறை கரிம வேதியியலில் குறிப்பிடத்தக்க பயன்களைக் கொண்டுள்ளன.[2] திட்ட அடக்க வெப்பமானது -167.39 கி.கலோரி.மோல்−1ஆகவும் இச்சேர்மம் உருவாதலின் கிப்ஸ் கட்டிலா ஆற்றலானது -155.4 கி.கலோரி.மோல்−1, மற்றும் பதங்கமாதலின் வெப்பமானது 76 கி.கலோரி.மோல்−1ஆகவும் உள்ளது.[3][4]

தயாரிப்பு

[தொகு]

காட்மியம் புளோரைடானது வாயு நிலையிலுள்ள புளோரின் அல்லது ஐதரசன் புளோரைடுடன் காட்மியம் உலோகம் அல்லது காட்மியத்தின் உப்பினை (காட்மியம் குளோரைடு, காட்மியம் ஆக்சைடு அல்லது காட்மியம் சல்பேட்டு போன்றவை) வினைப்படுத்துவதன் மூலம் கிடைக்கப் பெறுகிறது.

இச்சேர்மமானது காட்மியம் கார்பனேட்டை 40% ஐதரோபுளோரிக் காடியில் கரைத்து, கரைசலை ஆவியாக்கி 150 °செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் உலர்த்துவதன் மூலமும் தயாரிக்கப்படுகிறது.

இச்சேர்மத்தை தயாரிக்க உதவும் மற்றொரு முறையானது, காட்மியம் குளோரைடு மற்றும் அம்மோனியம் புளோரைடு கரைசல்களை கலந்து, பின்னர் படிகமாக்குதலுக்கு உட்படுத்தும் செயல்முறையைக் கொண்டுள்ளது. நீரில் கரையாத தன்மையையுடைய காட்மியம் புளோரைடானது கரைசலிலிருந்து வடிகட்டி பிரித்தெடுக்கப்படுகிறது.[5]

காட்மியம் புளோரைடானது புளோரினை காட்மியம் சல்பைடுடன் வினைக்குட்படுத்துவதன் மூலமும் தயாரிக்கப்படுகிறது. இந்த வினையானது, இச்சேர்மத்தின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் மற்ற வினைகளை விட மிக விரைவாகவும், கிட்டத்தட்ட தூய்மையான புளோரைடையும் மிகக்குறைந்த வெப்பநிலையிலேயே உருவாக்குகிறது.[6]

பயன்கள்

[தொகு]

மின்னணுவியல் கடத்தி

[தொகு]

CdF2 ஆனது இட்ரியம்  அல்லது சில குறிப்பிட்ட அருமண் தனிமங்கள் ஆகியவற்றோடு கலப்பு செய்யப்பட்டு அதிகமான வெப்பநிலையில் காட்மியத்தின் ஆவிக்குள் செலுத்தப்படும் போது மின்னணுவியல் கடத்தியாக மாற்றம் செய்யப்படலாம். இந்தச் செயல்முறையானது, கலப்பு செய்யப்படும் உலோகங்களின் செறிவிற்கேற்ப, வேறுபட்ட உறிஞ்சு குணகங்களை உடைய, ஊதா நிறப்படிகங்களைத் தருகின்றன. காட்மியம் அணுக்கள் இடையீட்டு F - அயனிகளுடனான வினையைக் கொண்டு, இந்தப் படிகங்களின் மின்னணுவியல் கடத்து திறன் குறித்து விளக்கமளிக்க ஒரு வினைவழிமுறையானது முன்மொழியப்பட்டுள்ளது. இதன் அதிக CdF 2 மூலக்கூறுகளை உருவாக்குவதுடன் இவை n- வகை கடத்துத்திறன் மற்றும் ஒற்றை எதிர்மின்அயனி ஈனி நிலையின் விளைவாக மூவிணைதிறன் கொண்ட கலப்பு அயனிகளுடன் வலிமை குறைந்த பிணைப்பில் ஈடுபட்டுள்ள எதிர்மின்னிகளை விடுவிக்கவும் செய்கிறது.[7]

பாதுகாப்பு

[தொகு]

காட்மியம் புளோரைடும், இதர காட்மியம் சேர்மங்களைப் போலவே, நச்சுத்தன்மை கொண்டுள்ளதால் கவனத்துடன் கையாளப்பட வேண்டும். ஒப்பீட்டளவில் புளோரைடானது மிதமான நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது. காட்மியம் புளோரைடானது, முறையாயாக கையாளப்படாவிட்டால், தீவிரமான உடல் நம் சார்ந்த பிரச்சனைகளை விளைவிக்கக் கூடும். இச்சேர்மம் கண்கள் மற்றும் தோலில் எரிச்சலைத் தோற்றுவிக்குமாகையால் கையுறைகள் மற்றும் கண்களுக்கான கண்ணாடி போன்ற அணிகலன்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.  பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் இச்சேர்மம் பயன்படுத்தும் போது உட்கொண்டாலோ, சுவாசித்தாலோ செய்யப்பட வேண்டிய எச்சரிக்கைக் குறிப்புகளைக் கொண்டுள்ளன. அமில நிலையிலோ, உயர் வெப்ப நிலையிலோ, மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையிலோ, ஐதரசன் புளோரைடு மற்றும் காட்மியம் ஆவியானது காற்றில் வெளியிடப்படலாம். இதன் மணத்தை சுவாசிக்கும் போது சுவாச மண்டலம் மற்றும் நாசித்தளைகளில் எரிச்சல், புளோரோசிஸ் மற்றும் நுரையீரல் நீர்க்கட்டு (மிகத்தீவிரமான நிலையில்) போன்றவை கூட ஏற்படலாம். காட்மியம் மற்றும் புளோரைடு ஆகியவற்றால் ஏற்படும்ஆபத்துகள் காட்மியம் புளோரைடினாலும் ஏற்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0087". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. "Cadmium Fluoride". பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
  3. Rudzitis, Edgars; Feder, Harold; Hubbard, Ward (November 1963). "Fluorine Bomb Calorimetry. VII. The Heat of Formation of Cadmium Difluoride.". Journal of Physical Chemistry. doi:10.1021/j100805a031. 
  4. Besenbruch, G.; Kana'an, A. S.; Margrave, J. L. (March 3, 1965). "Knudson and Langmuir Measurements of the Sublimation Pressure of Cadmium (II) Fluoride". Journal of Physical Chemistry. doi:10.1021/j100893a505. 
  5. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
  6. Haendler, Helmut; Bernard, Walter (November 1951). "The Reaction of Fluorine with Cadmium and Some of its Binary Compounds. The Crystal Structure, Density and Melting Points of Cadmium Fluoride.". Journal of the American Chemical Society. doi:10.1021/ja01155a064. 
  7. Weller, Paul (June 1, 1965). "Electrical and Optical Properties of Rare Earth Doped Cadmium Fluoride Single Crystals". Inorganic Chemistry. doi:10.1021/ic50033a004. 
  8. "Cadmium Fluoride [CdF2]". MSDS Solutions Center. Advance Research Chemicals Inc. / A.R.C. 2011-04-01. பார்க்கப்பட்ட நாள் 2014-12-12.[தொடர்பிழந்த இணைப்பு]