ஆர்சனிக் முப்புரோமைடு
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Arsenic tribromide | |
முறையான ஐயூபிஏசி பெயர்
டிரைபுரோமோ ஆர்சேன் | |
வேறு பெயர்கள்
ஆர்சனிக்(III) புரோமைடு
ஆர்சனசு புரோமைடு | |
இனங்காட்டிகள் | |
7784-33-0 | |
ChemSpider | 22973 |
EC number | 232-057-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24569 |
வே.ந.வி.ப எண் | CG1375000 |
| |
பண்புகள் | |
AsBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 314.634 கி/மோல் |
தோற்றம் | வெண்மையும் வெளி மஞ்சளும் கலந்த படிகத் திடப்பொருள் |
அடர்த்தி | 3.54 கி/செ.மீ3 |
உருகுநிலை | 31.1 °C (88.0 °F; 304.2 K) |
கொதிநிலை | 221 °C (430 °F; 494 K) |
சிதைவடையும் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆர்சனிக் முப்புரோமைடு (Arsenic tribromide ) என்பது AsBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இந்த பட்டைக்கூம்பு மூலக்கூறு மட்டுமே அறியப்பட்டுள்ள இருபடி ஆர்சனிக் புரோமைடு சேர்மமாகும். மிகவுயர் ஓளிவிலகல், தோராயமாக 2.3 பெற்றிருப்பதாலும், உயர் எதிர்காந்த ஏற்புத்திறன் கொண்டிருப்பதாலும்[1] AsBr3 மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. நிறமற்றதாகவும் நீர் ஈர்க்கும் படிகங்களாகவும் காணப்படுகின்ற இச்சேர்மம் ஈரமான காற்றில் புகையும் தன்மை கொண்டிருக்கிறது.
தயாரிப்பு
[தொகு]ஆர்சனிக் தூளை நேரடியாக புரோமினேற்றம் செய்வதன் மூலமாக ஆர்சனிக் முப்புரோமைடு தயாரிக்கலாம். தனிமநிலை கந்தகத்தின் முன்னிலையில் ஆர்சனிக்(III) ஆக்சைடை முன்னோடியாகக் கொண்டும் மாற்று வழியாகவும் இதைத் தயாரிக்கலாம்:[2]
- 2 As2O3 + 3 S + 6 Br2 → 4 AsBr3 + 3 SO2.
இதர ஆர்சனிக் புரோமைடுகள்
[தொகு]ஆர்சனிக்கை ஒத்த பாசுபரசின் ஐம்புரோமைடு நன்கு அறியப்பட்டிருந்தாலும் ஆர்சனிக்கின் ஐம்புரோமைடு எதுவும் அறியப்படவில்லை. மீ இணைதிறன் புரோமோ ஆர்சனேட்டு எதிரயனி வகைச் சேர்மங்களின் வரிசை [As2Br8]2−, [As2Br9]3−, மற்றும் [As3Br12]3− என்ற வரிசை ஆர்சனிக் முப்புரோமைடில் இருந்தே தொடங்குகின்றன.[3]
கரிம ஆர்சனிக் புரோமைடுகளான (CH3)2AsBr மற்றும் (CH3)AsBr2 போன்றவை , தாமிர வினையூக்கியின் முன்னிலையில் சூடான ஆர்சனிக் உலோகத்துடன் மெத்தில் புரோமைடு சேர்த்து வினைப்படுத்துவதால் உருவாகின்றன. இத்தயாரிப்பு முறையானது நேரடிச் செயல்முறையில் மெத்தில் குளோரோசிலேன் தயாரிக்கும் முறையை ஒத்திருக்கிறது.
பாதுகாப்பு
[தொகு]பொதுவாக ஆர்சனிக் சேர்மங்கள் அனைத்தும் நச்சுத்தன்மை கொண்டவை என்பதால் ஆர்சனிக் முப்புரோமைடும் ஒரு நச்சாகவே இருக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ CRC handbook of Chemistry and Physics, CRC Press
- ↑ "Arsenic Tribromide" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 597.
- ↑ Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.