வாலாசாபேட்டை
வாலாசாபேட்டை (இரண்டாம் நிலை நகராட்சி) | |
ஆள்கூறு | 12°55′31″N 79°21′51″E / 12.9254°N 79.3641°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராணிப்பேட்டை |
வட்டம் | வாலாஜாபேட்டை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஜெ. யூ. சந்திரகலா, இ. ஆ. ப |
நகராட்சி தலைவர் | |
மக்கள் தொகை | 47,498 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 184.7 மீட்டர்கள் (606 அடி) |
இணையதளம் | https://ranipet.nic.in |
வாலாசாபேட்டை அல்லது வாலாஜாபேட்டை (ஆங்கிலம்: Walajapet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தின் 4 வட்டங்களில் ஒன்றாகும். வாலாஜா வட்டம் மற்றும் வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். வாலாஜாபேட்டை நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
[தொகு]வாலாஜாப்பேட்டையிலிருந்து சென்னை 107 கிமீ; வேலூர் 30 கிமீ; அரக்கோணம் 50 கிமீ; காஞ்சிபுரம் 40 கிமீ, வேலூர் 40 கிமீ மற்றும் ஆரணி 35 கிமீ தொலைவில் உள்ளது.
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 12°55′31″N 79°21′51″E / 12.9254°N 79.3641°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 184.7 மீட்டர்கள் (606 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 25 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,289 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 47,498 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.6% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,028 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4940 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 916 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,027 மற்றும் 102 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.2%, இசுலாமியர்கள் 12.26%, கிறித்தவர்கள் 1.21% , தமிழ்ச் சமணர்கள் 011%, பிறர் 0.21% ஆகவுள்ளனர்.[4]
புகழ் பெற்றவர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Walajapet". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ வாலாஜாப்பேட்டை நகர மக்கள்தொகை பரம்பல்