உள்ளடக்கத்துக்குச் செல்

வஜ்ராயுதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வஜ்ஜிராயுதம்

வஜ்ஜிராயுதம், (Vajra) தொன்மவியலின் படி இந்திரனின் ஆயுதமாகும். இவ்வாயுதம் மிகவும் வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொன்ம சுருக்கம்

[தொகு]

இந்திரனைக் கொல்ல விருத்திராசூரன் எனும் அரக்கன் முயன்று பொழுது வலிமையான ஆயுதமொன்று வேண்டுமென இந்திரன் எண்ணினான். பாற்கடலை கடைய தேவர்களும் அசுரர்களும் முனைந்த பொழுது அவர்களுடைய ஆயுதங்கள் அனைத்தையும் ததீசி முனிவர் விழுங்கி பாதுகாத்தார். அவ்வாயுதங்கள் அனைத்தும் அவர் முதுகுத் தண்டியில் இணைந்து இருந்தன.எனவே ததீசி முனிவரிடம் யாசகமாக அவருடைய முதுகுத் தண்டினைப் பெற்று அதனைக் கொண்டு வலிமையான ஆயுதத்தினை இந்திரன் அகத்திய முனிவரின் துணையுடன் பெற்றுக் கொண்டார். இந்த ஆயுதம் வஜ்ஜிராயுதம் என்று அழைக்கப்படுகிறது.[1][2]


வஜ்ராயுதம்: தேவர்களின் தலைவன் இந்திரனின் சக்தி மிக்க ஆயுதம். இந்த வஜ்ராயுத்தைக் கொண்டு அசுரர்கள் பலரை இந்திரன் போரில் வீழ்த்தினார்.

இந்திரனுக்கு வஜ்ராயுதம் கிடைத்த கதை

[தொகு]

தேவர்கள் படைக்கலங்களை தசீசி முனிவரிடம் ஒப்படைத்தல்

[தொகு]

ஒருமுறை அசுரர்களை போரில் வென்ற தேவர்கள், தங்களின் சக்தி மிக்க படைக்கலங்களை பாதுகாக்கும் பொருட்டு, கடிதவ முனி தசீசியிடம் ஒப்படைத்தனர். தசீசி முனி இரத்தக்கறை படிந்த படைக்கலங்களை புனித ஆற்றில் சுத்தம் செய்து, சுத்தி செய்த நீரின் சிறிதை பருகினார். அதனால் அப்படைக்கலங்கள் தங்களின் சக்தி முழுவதும் தன் உடலில் சேர்ந்தது.

மீண்டும் தேவ-அசுரப் போர்

[தொகு]

பல காலம் கழித்து மீண்டும் தேவாசுர போர் மூண்டது. எனவே தசீசி முனிவரிடம் பாதுகாப்பிற்காக ஒப்படைத்த படைக்கலங்களைத் திரும்பப் பெற்று, தேவர்கள், அசுரர்களுடன் போரிட்டனர். போரின் முடிவில் தேவர்கள் படுதோல்வி அடைந்தனர்.

தங்கள் சக்திமிக்க படைக்கலங்களின் உதவியால் அசுரர்க்ளை வெல்ல முடியாது, போரில் தோற்று வந்த செய்தியை தேவர்கள் தசீசி முனிவரிடம் கூறினார்கள். கடிமுனி தசீசி தனது ஞானக்கண்னால், தேவர்களின் படைக்கலங்களின் வலிமை போனதற்கான காரணத்தை உணர்ந்தார்.

வஜ்ராயுதம் உருவாதல்

[தொகு]

தனது செயலால் தேவர்களின் ஒட்டுமொத்த படைக்கலங்களின் சக்தி தன் உடலில் இருப்பதை உணர்ந்த தசீசி முனிவர், தான் உண்ணாநோன்பு இருந்து மரணம் அடைந்த பின்பு, தன் உடலின் நீண்ட முதுகெலும்பை வஜ்ராயுதம் எனும் மிகச்சக்தி மிக்க படைக்கலன் செய்து, அது தேவராசன் இந்திரன் கைவசம் இருக்கட்டும் என்றும், கை, கால், மற்றும் தொடை எலும்புகள் மூலம் உண்டு செய்த ஆயுதங்கள் மற்ற தேவர்கள் வசம் இருக்கட்டும் என்றும், வஜ்ராயுதம் முதலிய படைக்கலங்கள் தேவர்களை என்றும் அசுரர்களிடமிருந்து காக்கும் என்று கூறி மரணமடைந்தார்.

தசீசி முனிவரி கூறியபடி, அவரின் மறைவுக்குப் பின்பு, தேவர்களின் சிற்பியான விஸ்வகர்மா, முனிவரின் நீண்ட முதுகெலும்பைக் கொண்டு வஜ்ராயுதம் செய்து தேவராசன் இந்திரனிடம் வழங்கினார்.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The story of Sage Dadhichi and Vajrayudha – Dadeechi Rushigalu and Narayana Varma Japa ~ Hindu Blog".
  2. http://devanga.org/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF/devanga-kothiras-history-of-dhadheesi-maharishi.html ததீசி மகரிஷி வரலாறு