மிடல் ரோக் தீவு
புவியியல் | |
---|---|
அமைவிடம் | சிங்கப்பூர் நீரிணை, தென் சீனக் கடல் ஜொகூர் மலேசியா தென் கிழக்கு ஆசியா |
ஆள்கூறுகள் | 1°19′17″N 104°24′32″E / 1.32139°N 104.40889°E |
தீவுக்கூட்டம் | தீபகற்ப மலேசியா; மலேசியா |
மொத்தத் தீவுகள் | 1 |
நிர்வாகம் | |
மிடல் ரோக் தீவு அல்லது மிடல் ரோக்ஸ் (மலாய்: Batuan Tengah; ஆங்கிலம்:Middle Rocks; சாவி: باتون تڠه ; சீனம்: 中岩礁; பின்யின்: Zhōngyánjiāo) என்பது மலேசியா, ஜொகூர், தென் சீனக் கடலின், சிங்கப்பூர் நீரிணையில் உள்ள ஒரு தீவு. 250 மீட்டர் (820 அடி) திறந்தவெளி நீரால் பிரிக்கப்பட்ட இரண்டு பாறைகளைக் கொண்ட நிலவியல் அமைப்பு.
இந்தப் பாறைத் தீவுகள், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே சர்ச்சைக்குரிய பிரதேசமாக உள்ளது. அந்தச் சர்ச்சை (பெத்ரா பிராங்கா சர்ச்சை (Pedra Branca Dispute) என அழைக்கப்படுகிறது. 23 மே 2008 அன்று, அனைத்துலக நீதிமன்றம்; ஒன்றுக்கு 15 வாக்குகள் வேறுபாட்டில் மிடல் ராக்ஸ் தீவின் மீதான இறையாண்மை மலேசியாவிற்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியது.
புவியியல்
[தொகு]மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தின் தென்கிழக்கில் 8.0 கடல் மைல்கள் (14.8 கிமீ; 9.2 மைல்) தொலைவிலும்; மற்றும் பெத்ரா பிராங்காவிற்கு தெற்கே 0.6 கடல் மைல்கள் (1.1 கிமீ; 0.69 மைல்) தொலைவிலும்; கடல் மட்டத்திலிருந்து 1.0 மீட்டர் (3.3 அடி) உயரத்திலும் மிடல் ரோக் தீவு உள்ளது.[1]
இறையாண்மை சர்ச்சை
[தொகு]பெத்ரா பிராங்கா; மற்றும் சவுத் லெட்ஜ் என அழைக்கப்படும் மற்றொரு பாறை விளிம்பு; மற்றும் மிடல் ரோக் தீவு ஆகியவை மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே பெத்ரா பிராங்கா சர்ச்சைக்கு உட்பட்ட பிரதேசங்கள் ஆகும்.
மிடல் ரோக் தீவு மற்றும் சவுத் லெட்ஜ் பாறை விளிம்பு; இரண்டு தீவுகளையும் 1993-இல் சிங்கப்பூர் உரிமை கொண்டாடியபோது பெத்ரா பிராங்கா சர்ச்சை எழுந்தது.[2]
2008-ஆம் ஆண்டு அனைத்துலக நீதிமன்றத்தால் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டது. மிடல் ரோக் தீவு மலேசியாவுக்கும், பெத்ரா பிராங்கா தீவு சிங்கப்பூருக்கும் சொந்தமானவை என்று அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[3] இருப்பினும் சவுத் லெட்ஜ் பாறை விளிம்பு பிரச்சினை இதுவரையிலும் தீர்க்கப்படாமல் உள்ளது.[4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ V. Anbalagan (25 May 2008). "Pulau Batu Puteh decision: Fishermen can access Middle Rocks". New Straits Times. AsiaOne. பார்க்கப்பட்ட நாள் 22 June 2018.
- ↑ "Malaysia files new application to ICJ on Pedra Branca ruling; Singapore says it's 'without merit'". Channel NewsAsia. 1 July 2017. Archived from the original on 1 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 22 June 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Coalter G. Lathrop (2008). "Sovereignty over Pedra Branca/Pulau Batu Puteh, Middle Rocks and South Ledge". The American Journal of International Law 102 (4): 828–834. doi:10.2307/20456682. https://scholarship.law.duke.edu/faculty_scholarship/1910.
- ↑ "Court leaves sovereignty over South Ledge open". New Straits Times. AsiaOne. 24 May 2008. பார்க்கப்பட்ட நாள் 21 May 2014.
- ↑ "Malaysia inaugurates new maritime base on Middle Rocks, near Pedra Branca". Today Online. The Malay Mail. 5 August 2017. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.
- ↑ "Malaysia deploys first warship to maritime base near Pedra Branca". Today Online. 11 August 2017. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
மேலும் காண்க
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- "Malaysians can now go fishing off Middle Rocks". The Star. 24 May 2008. Archived from the original on 28 June 2011.
- "Don't go to Middle Rocks yet, police warn Malaysians". AsiaOne. 25 May 2008. Archived from the original on 28 May 2008.