மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு
Ministry of Science, Technology and Innovation Kementerian Sains, Teknologi dan Inovasi (MOSTI) | |
மலேசிய அறிவியல், தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகம் | |
அமைச்சு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1973 |
முன்னிருந்த அமைச்சு |
|
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | Level 1-7, Block C4 & C5, Complex C, Federal Government Administration, 62662, புத்ராஜெயா 02°56′03″N 101°41′31″E / 2.93417°N 101.69194°E |
பணியாட்கள் | 3,530 (2023)[1] |
ஆண்டு நிதி | MYR 1,114,249,000 (2022 - 2023)[1] |
அமைச்சர் |
|
அமைச்சு தலைமை |
|
வலைத்தளம் | www |
அடிக்குறிப்புகள் | |
முகநூலில் மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு |
மலேசிய அறிவியல், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு (மலாய்: Kementerian Sains, Teknologi dan Innovatif Malaysia; ஆங்கிலம்: Ministry of Science, Technology and Innovation Malaysia) (MOSTI) என்பது அறிவியல், தொழினுட்பம் மற்றும் புத்தாக்கங்களின் மேம்பாட்டுக்குப் பொறுப்பு வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.
இந்த அமைச்சு புத்ராஜெயாவில் மத்திய அரசாங்க நிர்வாக வளாகத்தில் (Federal Government Administration Complex) உள்ளது. 2023-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்த அமைச்சில் 3,530 பேர் பணியாற்றுகின்றனர்.[1]
பொது
[தொகு]ஏழாவது மகாதீர் அமைச்சரவையில், அறிவியல், தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் (Ministry of Science, Technology and Innovation) (MOSTI) அனைத்துப் பிரிவுகளும் மறுசீரமைக்கப்பட்டன.
பின்னர் அந்த அமைச்சு எரிசக்தி, அறிவியல், தொழினுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் (Ministry of Energy, Science, Technology, Environment & Climate Change) (MESTECC) எனும் அமைச்சாக மாற்றம் செய்யப்பட்டது.
அன்வார் இப்ராகிம் அமைச்சரவை
[தொகு]மலேசியாவின் 2020-ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடிக்கு (2020–2022 Malaysian Political Crisis) பிறகு, முகிதீன் அமைச்சரவை உருவான பிறகு, எரிசக்தி, அறிவியல், தொழினுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சு (Ministry of Energy, Science, Technology, Environment & Climate Change) (MESTECC) மறுசீரமைக்கப்பட்டது. அதன் பெயர் அறிவியல், தொழினுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சு (Ministry of Science, Technology and Innovation) (MOSTI) என மாற்றப்பட்டது.[2]
அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில், அந்த அமைச்சகத்தின் பெயரில் இருந்து புத்தாக்கத் துறை (Innovation Portfolio) இடைக்காலத்திற்கு நீக்கப்பட்டது; மலேசிய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சு என மறுபெயரிடப்பட்டது. 2022 டிசம்பர் 3-ஆம் தேதி முதல் சாங் லி காங் (Chang Lih Kang) என்பவர் மலேசிய அறிவியல், தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சராக உள்ளார்.
துறைகளும் பிரிவுகளும்
[தொகு]திட்டமிடல் துறைகள்
[தொகு]- உத்திசார் திட்டமிடல் பிரிவு (Strategic Planning Division)
- உத்திசார் தரவு மற்றும் தொலைநோக்கு தொழில்நுட்பப் பிரிவு (Strategic Data and Foresight Technology Division)
- மலேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகவல் மையம் (Malaysian Science and Technology Information Centre) (MASTIC)
- கலாசாரச் சேவைகள் பிரிவு (STI and Culturation Services Division)
- தேசிய கோளரங்கம் (National Planetarium)
- தேசிய அறிவியல் மையம் (National Science Centre)
தொழில்நுட்ப மேம்பாடு, வணிகமயமாக்கல் சேவைகள் துறை
[தொகு]- உத்திசார் தொழினுட்பம் மற்றும் S&T பயன்பாடுகள் பிரிவு (Strategic technology and S&T Applications Division)
- தேசிய நானோ தொழில்நுட்ப மையம் (National Nanotechnology Centre) (NNC)
- வணிகமயமாக்கல் பிரிவு (Commercialization Division)
- நிதிப் பிரிவு (Fund Division)
மேலாண்மைத் துறை
[தொகு]- மனிதவள மேலாண்மை பிரிவு (Human Resource Management Division)
- நிதிப் பிரிவு (Finance Division)
- வளர்ச்சிப் பிரிவு (Development Division)
- கணக்குப் பிரிவு (Account Division)
- தகவல் தொழில்நுட்ப மேலாண்மை பிரிவு (Information Technology Management Division)
- நிர்வாகப் பிரிவு (Administration Division)
பொதுச் செயலாளரின் கீழ் உள்ள பிரிவுகள்
[தொகு]- சட்டப் பிரிவு (Legal Unit)
- பெரு நிறுவன தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
- உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
- ஒழுங்கமைவு பிரிவு (Integrity Unit)
- பன்னாட்டுப் பிரிவு (Account Division)[3]
துறைகளும் நிறுவனங்களும்
[தொகு]- அணுசக்தி உரிம வாரியம்
- (Atomic Energy Licensing Board) (LPTA)
- (Lembaga Perlesenan Tenaga Atom)
- Atomic Energy Licensing Board பரணிடப்பட்டது 2021-01-17 at the வந்தவழி இயந்திரம்
- மலேசிய வேதியியல் துறை
- (Department of Chemistry Malaysia)
- (Jabatan Kimia Malaysia)
- Department of Chemistry Malaysia
- மலேசிய அணுசக்தி நிறுவனம்
- (Malaysian Nuclear Agency)
- (Agensi Nuklear Malaysia)
- Malaysian Nuclear Agency பரணிடப்பட்டது 2020-11-30 at the வந்தவழி இயந்திரம்
- மலேசிய விண்வெளி நிறுவனம்
- (Malaysian Space Agency) (MYSA)
- (Agensi Angkasa Malaysia)
- Malaysian Space Agency பரணிடப்பட்டது 2020-08-10 at the வந்தவழி இயந்திரம்[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Ministry of Science, Technology and Innovation (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 16 March 2023.
- ↑ "About Us". MOSTI. பார்க்கப்பட்ட நாள் 21 June 2020.
- ↑ "Division & Section". MOSTI. பார்க்கப்பட்ட நாள் 21 June 2020.
- ↑ "Departments/Agencies". MOSTI. பார்க்கப்பட்ட நாள் 21 June 2020.