பேச்சு:காந்தி குல்லாய்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 12, 2011 அன்று வெளியானது. |
இது ஏன் காந்தி குல்லாய் என அழைக்கப்பட்டது என ஏதேனும் புறச்சான்று கிடைத்தால் சுவையாக இருக்கும். காந்தி இத்தொப்பியை மிக அரிதாகவே அணிந்திருந்ததாகத் தெரிகிறது. மராட்டியர்கள் வழமையாகவே இதனை அணிகிறார்கள்; மற்ற மாநிலத்தவர் காந்தியக் கொள்கையை பின்பற்றுவதை அறிவிக்கவே அணிகிறார்கள். --மணியன் 13:55, 19 ஆகத்து 2011 (UTC)
http://books.google.com/books?id=39wzrWv2WY4C&pg=PA424&dq=gandhi+cap&hl=en&ei=DW9OTqT5OI_TgQeF_N3eBg&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CEgQ6AEwBA#v=onepage&q=gandhi%20cap&f=true பக்கம் 423 --குறும்பன் 14:56, 19 ஆகத்து 2011 (UTC)
1921 வரை அணிந்திருந்தாரெனத் தெரிகிறது.
--சோடாபாட்டில்உரையாடுக 15:13, 19 ஆகத்து 2011 (UTC)
- இதை.. இதைத்தான் எதிர்பார்த்தேன்..நன்றி!! உங்களது சான்றுகள் கட்டுரையில் இடம் பெறச்செய்துள்ளேன்.--மணியன் 17:07, 19 ஆகத்து 2011 (UTC)
அருமையான ஆதாரங்களைச் சேர்த்தமைக்கு நன்றி பாலா! எங்கள் ஊர்ப்பக்கம் வந்த காந்தி வயலில் வேலை செய்யும் உழவர்கள் (? தங்கள் வசதியின் பொருட்டு) உடையின்றி இருப்பதைப் பார்த்து விட்டு தானும் இனி அதிக உடையுடன் இருக்கப் போவதில்லை என முடிவு செய்து விட்டார். அன்றில் இருந்து தான் தொப்பிக்கெல்லாம் விடை கொடுத்தார். முடிவு செய்த இடம் சோழவந்தான். முடிவுக்கு செயல் வடிவம் கொடுத்த இடம் மதுரை என்று நினைக்கிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:06, 20 ஆகத்து 2011 (UTC)
- ஆம் செயல் வடிவம் கொடுத்த இடம் தான் இன்று கோரிப்பாளையத்தில் உள்ள காந்தி அருங்காட்சியகம் (அப்படித் தான் அங்கு போட்டிருப்பதாக நினைவு)--சோடாபாட்டில்உரையாடுக 07:16, 20 ஆகத்து 2011 (UTC)