உள்ளடக்கத்துக்குச் செல்

பெண் கொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலியில் பெண் கொலைக்கு எதிராக கூட்டரசு சட்டம் 2010இல் அறிவிக்கப்படுதல்

பெண்கொலை (Femicide அல்லது Feminicide) பெண்கள் கொலை செய்யப்படுவதற்கான பெண்ணியச் சொல் ஆகும். இது பண்பாடுகளுக்கேற்ப வெவ்வேறாக வரையறுக்கப்படுகின்றது.[1] இதனை முதலில் பயன்படுத்திய பெண்ணிய எழுத்தாளர் டயானா ஈ. எச். இரசல் "ஆண்கள் பெண்களை பெண்கள் என்பதற்காகக் கொல்வது " என வரையறுத்துள்ளார். மற்ற பெண்ணியவாதிகள் பெண்கள் என்பதால் கொலையின் நோக்கம் அல்லது குறிக்கோள் பெண்கள் மீதிருப்பது பெண்கொலை என்கின்றனர். பிறர் பெண்களைக் பெண்கள் கொல்வதும் பெண்கொலையே என வாதிடுகின்றனர். பொதுவான கொலையிலிருந்து பெண்கள் கொலையை மட்டும் வேறுபடுத்த வேண்டியதன் தேவையை கேள்விக்குட்படுத்துபவர்களும் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் நடைபெறும் கொலைகளில் 80% க்கும் மேற்பட்டவர்கள் ஆண்கள் என்றும் மிகக் குறைந்த அளவிலுள்ள பெண்களின் கொலைக்கு முக்கியத்துவம் தர வேண்டுவதன் காரணம் என்ன என்றும் கூறுகின்றனர். வேறு சிலர் பாலினக் கொலை என்ற பொதுவான இருதரப்பையும் உள்ளடக்கிய சொல்லை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும் பெண்ணியவாதிகள் இக்கருத்துக்களை ஏற்பதில்லை. பெண்கொலை பற்றி விவாதிக்க எழும் மனத்தயக்கமே பொதுச்சொற்களையும் பொதுவான வரையறைகளையும் நாடுவதாக குறை கூறுகின்றனர். பெண்கொலைக்கான நோக்கங்கள் கொலைக்கான நோக்கங்களிலிருந்து வேறுபட்டவை. தெரு வன்முறையில் மையப்படாது வீட்டுக்குள் வன்முறையில் பெண்கொலைக்கான நோக்கம் அமைந்துள்ளது.

மேற்சான்றுகள்

[தொகு]