பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான்
பாக்கித்தானிய டெகரிக்-இ-தாலிபான் | |
---|---|
வட மேற்கு பாக்கித்தானியப் போர் | |
பாக்கிதானின் கூட்டாட்சியால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பகுதிகள் (FATA) | |
இயங்கிய காலம் | திசம்பர் 2007 – இன்றளவில் |
தலைவர்கள் | பைதுல்லா மெகசூத் (திச. 2007 – ஆக. 2009) ஹாக்கிமுல்லா மெகசூத் (ஆக. 2009 – இன்றளவில்) |
தலைமையகம் | தெற்கு வசிரித்தான் |
செயற்பாட்டுப் பகுதி |
நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் (FATA) கைபர்-பக்தூன்க்வா ஆப்கானித்தானம் |
Strength | ஆயிரக்கணக்கில்[1] |
கூட்டு | அல் காயிதா ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி டெகரீக்-எ-நஃபாசு-எ-சாரியத்-எ-மொகமதி ஆப்கானிய தாலிபான் (குறிப்பு: ஆப்கானித்தானியப் போர்) |
எதிராளிகள் | பாக்கித்தானிய இராணுவம் ஐக்கிய அமெரிக்க இராணுவம் நடுவண் ஒற்று முகமை (சிஐஏ) சேவைகளிடை உளவுத்துறை (ஐஎஸ்ஐ) |
சண்டைகள்/போர்கள் | வட மேற்கு பாக்கித்தானியப் போர் |
பாக்கித்தானிய டெகரிக் இ தாலிபான் (Tehrik-i-Taliban Pakistan, the TTP) (உருது: تحریک طالبان پاکستان; பாக்கித்தானின் மாணவர் இயக்கம்), பரவலாக பாக்கித்தானிய தாலிபான், என்பது பாக்கித்தானின் ஆப்கானித்தானின் எல்லையோரமாக அமைந்துள்ள பாக்கிதானின் கூட்டாட்சியால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பகுதிகளில் இயங்கும் பழமைவாத இசுலாமியக் கொள்கைகளை உடைய பல்வேறு தீவிரவாதக் குழுக்களின் குடை அமைப்பாகும்.[2] திசம்பர் 2007இல் ஏறத்தாழ 13 குழுக்கள் பைதுல்லா மெகசூத்தின் தலைமையில் ஒன்றுபட்டு பாக்கித்தானிய டெகரிக் இ தாலிபானை உருவாக்கினர்.[1][3] இந்த இயக்கத்தின் குறிக்கோள்களில் பாக்கித்தானிய அரசாண்மைக்கு எதிர்ப்பு, இசுலாமியச் சட்ட முறைமையை அவர்களது புரிதலின்படி கட்டாயமாகச் செயல்படுத்துவது மற்றும் ஆப்கானித்தானில் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு படைகளுடனானப் போருக்குத் துணை புரிதல் முதன்மையாக உள்ளன.[1][3][4]
பாக்கித்தானிய தாலிபான்கள் ஆப்கானித்தானிய தாலிபான்களுடன் நேரடியாக இணைந்திருக்கவில்லை. இரண்டுமே தங்களது வரலாறு, நோக்கங்கள் மற்றும் விருப்பங்களில் நிறைய வேறுபட்டுள்ளன. இருப்பினும் இசுலாமிய முறைமைகளைக் குறித்தான புரிதல்களில் ஒன்றுபடுகின்றனர். மேலும் இரு இயக்கங்களிலும் பெரும்பான்மையோர் பசுதூனியர்கள் ஆவர்.[4][5] பாக்கித்தான் அரசின் ஆதரவுடன் பன்னாட்டு படைகளுடனும் ஆப்கானியப் படைகளுடனும் போர் புரிவதாக நம்பப்படும் ஆப்கானிய தாலிபான் பாக்கித்தானைத் தாக்குவதில்லை என முடிவாக உள்ளது.[5] ஆனால் பாக்கித்தானிய தாலிபானோ பாக்கித்தானிய அரசுக்கு எதிராகப் போராடுகிறது.
தாக்குதல்கள்
[தொகு]- 2014 ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத் தாக்குதல் நிகழ்வுக்கு பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.[6]
- பாக்கிஸ்தானின் பெஷாவர் நகரில் நடந்த தாக்குதலுக்கு பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.[7]
- 2015 பெசாவர் பள்ளிவாசல் தாக்குதல் நிகழ்வுக்கு பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.[8]
சான்றுகோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Bajoria, Jayshree (6 February 2008). "Pakistan's New Generation of Terrorists". Council on Foreign Relations. Archived from the original on 14 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 30 March 2009.
- ↑ Yusufzai, Rahimullah (22 September 2008). "A Who's Who of the Insurgency in Pakistan's North-West Frontier Province: Part One – North and South Waziristan". Terrorism Monitor 6 (18). http://www.jamestown.org/programs/gta/single/?tx_ttnews%5Btt_news%5D=5169&tx_ttnews%5BbackPid%5D=167&no_cache=1. பார்த்த நாள்: 30 March 2011.
- ↑ 3.0 3.1 Abbas, Hassan (January 2008). "A Profile of Tehrik-I-Taliban Pakistan" (PDF). CTC Sentinel (West Point, NY: Combating Terrorism Center) 1 (2): 1–4. http://belfercenter.ksg.harvard.edu/publication/17868/profile_of_tehrikitaliban_pakistan.html. பார்த்த நாள்: 8 November 2008.
- ↑ 4.0 4.1 Carlotta Gall, Ismail Khan, Pir Zubair Shah and Taimoor Shah (26 March 2009). "Pakistani and Afghan Taliban Unify in Face of U.S. Influx". New York Times. http://www.nytimes.com/2009/03/27/world/asia/27taliban.html. பார்த்த நாள்: 27 March 2009.
- ↑ 5.0 5.1 Shane, Scott (22 October 2009). "Insurgents Share a Name, but Pursue Different Goals". The New York Times (The New York Times Company). http://www.nytimes.com/2009/10/23/world/asia/23taliban.html. பார்த்த நாள்: 26 January 2011.
- ↑ Lynch, Dennis (2014-06-08). "Militants Attack Karachi Airport In Pakistan: Live Stream And Updates". International Business Times. http://www.ibtimes.com/militants-attack-karachi-airport-pakistan-live-stream-updates-video-1595961. பார்த்த நாள்: 8 June 2014.
- ↑ http://www.dawn.com/news/1133796/ttp-claims-peshawar-attack-targeting-senior-army-officer
- ↑ http://www.dawn.com/news/1163374/20-killed-as-taliban-storm-peshawar-imambargah