நையோபியம் மோனாக்சைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நையோபியம்(II) ஆக்சைடு, கொலம்பியம் மோனாக்சைடு, நையோபியம் ஓராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12034-57-0 | |
ChemSpider | 74751 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82838 |
| |
பண்புகள் | |
NbO | |
வாய்ப்பாட்டு எடை | 108.906 கி/மோல் |
தோற்றம் | திண்மம், சாம்பல் நிறம் |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 7.30 கி.செ.மீ3 |
உருகுநிலை | 1,940 °C (3,520 °F; 2,210 K) |
கரைதிறன் | ஐதரோகுளோரிக் அமிலத்தில் குறைவாகக் கரைகிறது நைட்ரிக் அமிலத்தில் கரையாது. |
வெப்பவேதியியல் | |
வெப்பக் கொண்மை, C | 41.25 யூ/மோல் கெல்வின் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நையோபியம் மோனாக்சைடு (Niobium monoxide) என்பது NbO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். நையோபியம் ஓராக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம். சாம்பல் நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் உலோகம் சார்ந்த கடத்தும் தண்மையைக் கொண்டுள்ளது[1].
கட்டமைப்பு
[தொகு]பாறை உப்பில் இருப்பதைப் போல வழக்கத்திற்கு மாறான கனசதுர கட்டமைப்பை நையோபியம் மோனாக்சைடு ஏற்கிறது. ஆனால், இங்கு நையோபியம் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் இரண்டும் நான்கு ஒருங்கிணைவு சதுரத்தளத்தில் உள்ளன [1]. மேலும், நையோபியம் மையங்கள் எண்முக வடிவில் அடுக்கப்பட்டுள்ளன, கீழ்நிலை நையோபியம் ஆலைடுகளில் காணப்படும் எண்முக நையோபியம் தொகுதிகள் போன்ற கட்டமைப்பு ஒற்றுமையையும் இது கொண்டுள்ளது [1]. நையோபியம் மோனாக்சைடில் Nb-Nb பிணைப்பின் பிணைப்பு நீளம் 298 பைக்கோ மீட்டர்களாகும். உலோக மையங்களுக்கு இடையில் வலிமையாகவும் கிட்டத்தட்ட சகப்பிணைப்பும் உள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது [2].
1.38 கெல்வின் வெப்பநிலையில் இச்சேர்மம் ஒரு மீக்கடத்தியாகச் செயல்படுகிறது. NbO மணிகளை சூழ்ந்து Nb2O5 அடுக்கு உருவாகியுள்ள மின்தேக்கிகளில் மின்காப்புப் பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது [3][4][5].
தயாரிப்பு
[தொகு]நையோபியம் பென்டாக்சைடை ஐதரசன் வாயுவுடன் வினைபுரியச் செய்து நையோபியம் மோனாக்சைடு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக ஒத்தவிகிதசமயிணைப்பு முறை வினையில் இது தயாரிக்கப்படுகிறது [1] More typically, it is prepared by comproportionation:[6]
- Nb2O5 + 3 Nb → 5 NbO.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Electronic band structure and bonding in Nb3O3, Physical Review B (Condensed Matter), 48, 23, 1993, 16986-16991 எஆசு:10.1103/PhysRevB.48.16986
- ↑ C. Nico et al. Sintered NbO powders for electronic device applications The Journal of Physical Chemistry C 2011, Volume 115(11), Pages: 4879–4886 எஆசு:10.1021/jp110672u
- ↑ C. Nico et al. NbO/Nb2O5 core–shells by thermal oxidation Journal of the European Ceramic Society 2013, Volume 33(15-16), Pages: 3077–3083 எஆசு:10.1016/j.jeurceramsoc.2013.06.020
- ↑ Kazumi Naito, Isao Kabe,(Showa Denko K.K.) Production method of solid electrolytic capacitor US patent 6882522(2005)
- ↑ T. B. Reed, E. R. Pollard "Niobium Monoxide" Inorg. Synth. 1995, vol. 30, pp. 108–110. எஆசு:10.1002/9780470132616.ch22
.