உள்ளடக்கத்துக்குச் செல்

டெ'ஆலம்பர்ட் முரண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட்(1717-1783)

பாய்ம இயக்கவியலில், டெ'ஆலம்பர்ட் முரண்பாடு (D'Alembert's paradox) என்பது 1752-ஆம் ஆண்டில் பிரெஞ்சு கணிதவியலாளரான ழான் லி ராண்ட் டெ'ஆலம்பர்ட்[1] என்பவரால் கணிக்கப்பட்ட முரண் ஆகும். அமுக்கவியலாத மற்றும் பிசுக்குமையற்ற நிலைப்பண்புப் பாய்ம ஓட்டத்தில், பாய்மத்தைச் சார்ந்து நிலையான திசைவேகத்தில் செல்லும் பொருள்மீதான இழுவை விசை சுழியம் (பூச்சியம்) என்று டெ'ஆலம்பர்ட் நிரூபணம் செய்தார்.[2] பூச்சிய இழுவை என்ற முடிவானது, இயல்பில் காணக்கூடிய நிலைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது; காற்று மற்றும் நீர் போன்ற பாய்மங்களில் குறிப்பிட்ட திசைவேகத்தில் செல்லும் பொருட்களின் மீது, முக்கியமாக அதிக ரேய்னால்ட்ஸ் எண் ஓட்டங்களில், கணிசமான அளவு இழுவை விசை செயல்பட்டது இயல்பாக உணரப்பட்டது எனினும் கணிதச் சமன்பாடுகள் மூலம் தருவிக்கப்பட்ட முடிவு வேறுபட்டதாகவிருந்தது.

உசாத்துணைகள்

[தொகு]
  1. Jean le Rond d'Alembert (1752).
  2. Grimberg, Pauls & Frisch (2008).