உள்ளடக்கத்துக்குச் செல்

கொசு உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொசு உள்ளான்
Little Stint
இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் முதிர்ந்த கொசு உள்ளான், எகிப்து
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Charadriiformes
குடும்பம்:
Scolopacidae
பேரினம்:
Calidris
இனம்:
C. minuta
இருசொற் பெயரீடு
Calidris minuta
Leisler, 1812
Synonyms

Erolia minuta

Range of C. minuta     Breeding      Passage      Non-breeding      Vagrant (seasonality uncertain)

கொசு உள்ளான் (Little Stint) என்பது கரைப்பறவைகள் (shore birds or waders) வகையைச் சார்ந்த ஒரு சிறிய பறவை. இது ஆர்க்டிக் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இனப்பெருக்கம் செய்கிறது. இது குளிர்காலத்தில் நீண்ட தொலைவு தெற்கே ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவிற்கு வலசை போகிறது. இது எப்போதாவது வட அமெரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் அலைந்து திரிந்து வருகிறது.

விளக்கம்

[தொகு]

இது அளவில் காடையைவிட அளவில் சிறியது. இது சிறிய, கூரான, கருமை நிற அலகு, நடுத்தரமான நீளங்கொண்ட கருங்கால்களையும் உடையது; வேகமாக இயங்கக்கூடியது. இனப்பெருக்கம் செய்யும் முதிர்ந்த பறவைகளின் நெஞ்சில் ஒரு ஆரஞ்சு சாயமும், வெள்ளை தொண்டையும், முதுகில் வலுவான வெள்ளை V அடையாளமும் இருக்கும். குளிர்காலத்தில் வலசை போகும் இவற்றின் உடலின் மேற்பகுதி சாம்பல் பழுப்பாகக் கறைகளும் புள்ளிகளும் கொண்டதாயும் அடிப்பாகம் தூய வெண்மையாகவும் இருக்கும்.[1]

நடத்தை

[தொகு]

இந்தப் பறவை மற்ற கடற்கரை சார்ந்த பறவைகளோடு சிறு கூட்டமாகவும், அபூர்வமாக நூறு வரையான பெருங் கூட்டமாகவும் சேர்ந்து திரியும். இரை தேடும்போது பிரிந்து செல்லும் இவை ஓய்வாக இருக்கும்போது மீண்டும் ஒன்று சேர்ந்துவிடும். எப்போதும் அங்கும் இங்கும் தாவித் தாவி ஓடி அலைந்தபடி இருக்கும். அச்சுறுத்தலுக்கு உள்ளானால் எல்லா பறவைகளும் சொல்லிவைத்தாற்போல அப்படி இப்படி என திரும்பி இறக்கையில் உள்ள வெள்ளைநிறம் பளிச்சிடப் பறந்து சென்று வெகு தொலைவில் தரை இறங்கும்.[1]

இனப்பெருக்கம்

[தொகு]

இந்த பறவை வெற்று நிலத்தில் ஒரு குழிவான இடத்தில் கூடும். அதில் 3-5 முட்டைகளை இடுகிறது. ஒரு ஆண் பறவை பல துணைகளைக் கொண்டிருக்கும். மேலும் ஆணும் பெண்ணும் தனித்தனியாக அடைகாக்கும்.

ஜெர்மனியின் வைஸ்பேடன் அருங்காட்சியகத்தில் உள்ள முட்டை சேகரிப்பு

உணவு

[தொகு]

இவை நத்தைகள், நண்டுகள், கடற்கரையில் காணப்படும் புழு பூச்சிகள், தாவர விதைகள் போன்றவற்றை உணவாகக் கொள்ளும்.[1]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 168–169.