கவுதமி வேம்புநாதன்
கௌதமி வேம்புநாதன் என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் 2010 இல் வெளிவந்த நகரம் மறுபக்கம் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் நகைச்சுவை வேடத்தில் நடித்து புகழடைந்தார்.[1] ஸ்டைல் பாண்டியாக வருகின்ற வடிவேலுவின் வீட்டு முதலாளியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் சுந்தர் சியும் கௌதமியும் சாடையில் பேசும் காட்சியில் 'இரண்டா மாமி' என வடிவேலு இவரைப் பார்த்து கேட்கும் கேள்வி பிரபலமாக இணையத்தில் வலம் வந்தது.
பிறப்பும் குடும்பமும்
[தொகு]தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தார்.
திரை வாழ்க்கை
[தொகு]கவுதமி ராஜீவ் பிரசாத் இயக்கிய அகல்யா என்ற தொலைக்காட்சி நாடகத்தில் அறிமுகமானார். இத்தொடரில் ஷியாம் கணேஷுடன் இணைந்து நடித்தார். ஜீ தமிழில் முரளியுடன் இணைந்து நிறம் மாறாத பூக்கள் தொடரில் எதிர் நாயகியாக நடித்து வருகிறார் .
திரைப்படங்களின் பட்டியல்
[தொகு]- ஸ்ரீ ராமானுஜர்,
- அமர,
- ஜம்புலிங்கம் 3டி,
- மருள் (குறும்படம்),
- மைனா குஞ்சு காணோம்,
- தந்தனை துறமில்லை,
- மாலினி 22 பாளையங்கோட்டை,
- விந்தை,
- ஆரம்பமே அட்டகாசம்
- கலகலப்பு
- நகரம்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Correspondent, Vikatan. "சினிமா விமர்சனம் : நகரம் மறுபக்கம்". https://www.vikatan.com/.
{{cite web}}
: External link in
(help)|website=