உள்ளடக்கத்துக்குச் செல்

கர்னைல் கில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்னைல் கில்
இயற்பெயர்கர்னைல் சிங் கில்
ਕਰਨੈਲ ਸਿੰਘ ਗਿੱਲ
பிறப்பு(1942-02-13)பெப்ரவரி 13, 1942
பிரித்தானிய பஞ்சாபில் லயல்பூர் (பைசலாபாத் என மறுபெயரிடப்பட்டது) மாவட்டத்தில் உள்ள குருசார் (சக் எண். 259) கிராமம்
பிறப்பிடம்லூதியானா
இறப்புசூன் 24, 2012(2012-06-24) (அகவை 70)
ஜமால்பூர், லூதியானா, கிழக்கு பஞ்சாப்
இசை வடிவங்கள்நாட்டுப்புற இசை
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம்
இசைத்துறையில்1964–2012

கர்னைல் கில் ( பஞ்சாபி மொழி: ਕਰਨੈਲ ਗਿੱਲ ) பஞ்சாபின் நாட்டுப்புற பாடகர் [1] ஆவார். அவர் நரிந்தர் பிபா, சுரிந்தர் கவுர், ஜக்மோகன் கவுர், மோஹ்னி நருலா, ஸ்வரன் லதா, ரஞ்சித் கவுர், குமாரி வீணா, குல்தீப் கவுர், குல்ஷன் கோமல், ப்ரிதி பாலா, உஷா கிரண், ஹர்னீத் நீது, சுக்வந்த் சுகி, சுசேத் பாலா, சர்ப்ஜித் சீமா, ராக்கி ஹண்டால், நவ்தீப் கவுர் மற்றும் பலருடன், இருவர் இணைந்து பாடும் பாடல்களுக்காக மிகவும் பிரபலமானவர். சிறுவயதில் இருந்தே இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் 1962 முதல் 1964 வரை மக்கள் தொடர்புத் துறையில் பணிபுரிந்தார். 1964 இல் எச்எம்வி நிறுவனத்தில் முதல் இசைப்பதிவுடன் தனது இசைப்பயணத்தைத் தொடங்கினார். அவர் 1962 முதல் 2012 வரை (கிட்டத்தட்ட 50 ஆண்டுகள்) பாடியுள்ளார்.

முதுகெலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் ஜூன் 24, 2012 அன்று இறந்தார்,[2] அவரது மனைவி சுக்ஜிந்தர் கவுர், மகன் குர்தேஜ் சிங் மற்றும் இரண்டு மகள்கள் கன்வர்தீப் கவுர் மற்றும் கிரண்தீப் கவுர் மற்றும் மாணவர்கள் ராக்கி ஹண்டால், அனூப் சித்து ஆகியோர் அவரது குடும்பமாக கருதப்படுகிறார்கள். லூதியானா மாவட்டத்தில் உள்ள அவரது கிராமமான ஜமால்பூரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.அவரது கடைசி ஆல்பம் சீக்கிய மதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட "கல்சா பந்த்" ஆகும்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

கில், பிப்ரவரி 13, 1942 இல் ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார், தந்தை எஸ். மெஹர் சிங் கில் (லம்பர்தார்) மற்றும் தாய் குர்டியல் கவுர், பிரித்தானிய பஞ்சாபில் லயல்பூர் (பைசலாபாத் என மறுபெயரிடப்பட்டது) மாவட்டத்தில் உள்ள குருசார் (சக் எண். 259) கிராமத்தில் பிறந்தார். பஞ்சாப் பிரிவினைக்குப் பிறகு, அவரது கிராமம் மேற்கு பஞ்சாபில் (பாகிஸ்தான் பஞ்சாப்) போய்விட்டது மற்றும் அவரது குடும்பம் இந்திய பஞ்சாபிற்கு, இப்போது லூதியானா மாவட்டத்தின் கீழ் வரும் ஜமால்பூர் அவானா கிராமத்தில் குடியேறியது. பின்னர், பாடகர் தீதர் சந்துவுடன் இணைந்து,பஞ்சாப் மக்கள் தொடர்பு துறையில் பாடகராக 1962 முதல் 1964 வரை ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். அவர் 1970 ம் ஆண்டில் சுக்ஜிந்தர் கவுரை மணந்தார்; இத்தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

பிரபல பஞ்சாபி பாடகர் உஸ்தாத் ஹர்சரண் கிரேவால், ஷௌகின் ஜாட், மாஸ்டர் பீர் சந்த் ஆகியோரிடம் நாட்டுப்புற இசையையும், உஸ்தாத் ஜஸ்வந்த் பன்வ்ரா ஆகியோரிடம் பாரம்பரிய இசையையும் கற்றுக்கொண்ட கர்னைல் சிங், தனது முதல் பாடல் பதிவை எச்எம்வி நிறுவனத்தில் பதிவு செய்தார், 1963 ம் ஆண்டில் ஹர்தேவ் தில்கிர் ( தேவ் தாரிகே வாலா என்றும் அழைக்கப்படு) எழுதி வெளியிடப்பட்டது.[3]

பாடல்கள் மற்றும் இசையமைப்புகள்

[தொகு]
  • லாம்ப்ரஹான் டா முண்டா போலி ஹோர் போல்டா
  • சத் விச் லக்கி ஏ கச்சேரி
  • டீன் வாங்கு லாங்கே நே தின் மித்ரா
  • பஞ் பதோன் நு அயின் வெ லைன் தருஜா
  • லட்டு கா கே துர்தி பானி
  • ரேஷ்மி ருமால் வாங்கு ரக் முந்தியா
  • தேரா கல்கல் வர்க ரங் ஜாட்டியே
  • Eh Keehne Qaid Kare
  • சுதிய தூ ஜாக் பாண்டியா
  • சத்குரு ஹோயே தியால்[4]
  • ஜோர்ஹே புத்ரன் தே கௌம் லேகே லா கே பாட்ஷா
  • அம்பியன் நு தர்செங்கி சாட் கே தேஷ் தோபா
  • மால் லட் லியா ஜம்மு காஷ்மீர் டா
  • ஜட்டி ஃபைஷ்னா பாட்டி
  • ஜடோன் டீ ஹோகி சத்னி
  • தேரே ஜட்டி நா பசந்த் வே ஷரப் வர்கி
  • நதியான் குவாரியன் தே ஷௌக் பூர்தா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ਦੋਗਾਣਾ ਗਾਇਕੀ ਦੀਆਂ ਲੰਮੀਆਂ ਵਾਟਾਂ ਦਾ ਪਾਂਧੀ ਰਿਹਾ ਗਾਇਕ ਕਰਨੈਲ ਗਿੱਲ" (in Punjabi). News article (Chandigarh). June 25, 2012 இம் மூலத்தில் இருந்து January 16, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130116084024/http://www.ajitjalandhar.com/20120625/punjab.php. பார்த்த நாள்: July 26, 2012. 
  2. "Celebrated Punjab folk singer Karnail Gill passed away, cremated in native village". Death news. PunjabNewsExpress (Ludhiana). June 25, 2012 இம் மூலத்தில் இருந்து June 28, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120628020703/http://www.punjabnewsexpress.com/news/3903-Celebrated-Punjab-folk-singer-Karnail-Gill-passed-away-cremated-in-native-village.aspx. பார்த்த நாள்: July 26, 2012. 
  3. "Karnail Gill —A gem of folk singing world". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. June 26, 2012 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 4, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130104003637/http://articles.timesofindia.indiatimes.com/2012-06-26/ludhiana/32424011_1_folk-festival-gem-shamsher-sandhu. பார்த்த நாள்: July 26, 2012. 
  4. "Punjabi folk singer Karnail Gill passes away". Death news. June 25, 2012 இம் மூலத்தில் இருந்து June 29, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120629103520/http://www.hindustantimes.com/Punjab/Chandigarh/Punjabi-folk-singer-Karnail-Gill-passes-away/SP-Article1-878528.aspx. பார்த்த நாள்: July 26, 2012. 

</references>