ஐக்கிய சபா தேசிய அமைப்பு
ஐக்கிய சபா தேசிய அமைப்பு United Sabah National Organisation Pertubuhan Kebangsaan Sabah Bersatu | |
---|---|
சுருக்கக்குறி | USNO |
நிறுவனர் | முசுதபா அருன் (Mustapha Harun) |
தொடக்கம் | December 1961 |
கலைப்பு | 1996 |
இணைந்தது | அம்னோ சபா |
பின்னர் | ஐக்கிய சபா தேசிய அமைப்பு (புதிது) (2013) |
தேசியக் கூட்டணி | சபா கூட்டணி (1963-1976) பாரிசான் நேசனல் (1973-1975, 1976-1981, 1986-1993) சபா முன்னணி (1981-1986) |
ஐக்கிய சபா தேசிய அமைப்பு அல்லது அசுனோ (ஆங்கிலம்: United Sabah National Organisation; மலாய்: Pertubuhan Kebangsaan Sabah Bersatu) (USNO) என்பது வடக்கு போர்னியோவிலும்; பின்னர் மலேசியாவின் சபா மாநிலத்திலும் செயல்பாட்டில் இருந்த ஓர் அரசியல் கட்சியாகும்.
சபாவின் முசுலிம் பழங்குடியினர்; குறிப்பாக சுலுக்-பஜாவு மக்கள் சார்ந்த இன அடிப்படையிலான அந்தக் கட்சி, சபாவின் மூன்றாவது முதலமைச்சர் முசுதபா அருன் (Mustapha Harun) அவர்களால் டிசம்பர் 1961-இல் உருவாக்கப்பட்டது. 35 ஆண்டுகளுக்குப் பின்னர், 1996-ஆம் ஆண்டில் இந்தக் கட்சி கலைக்கப்பட்டது.[1]
பொது
[தொகு]16 செப்டம்பர் 1963-இல் மலேசியா உருவாவதற்கு முன்பு, டொனால்டு இசுடீபன்ஸ் (Donald Stephens) தலைமையிலான ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்புடன் (United Pasokmomogun Kadazandusun Murut Organisation) (UPKO) (உப்கோ) இணைந்து பிரித்தானியர்களிடம் இருந்து விடுதலை பெறுவதில் ஐக்கிய சபா தேசிய அமைப்பு (அசுனோ) முக்கிய பங்கு வகித்தது.
ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு பின்னர் கலைக்கப்பட்டு 1967-இல் ஐக்கிய சபா தேசிய அமைப்பு (USNO) கட்சியுடன் இணைக்கப்பட்டது.[2]
1967 மாநிலத் தேர்தல்
[தொகு]1967-ஆம் ஆண்டு சபா மாநிலத் தேர்தலில் அசுனோ கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அசுனோ கட்சி 1975 வரை முசுதபா அருன் தலைமையிலும், 1976 வரை முகமது சையட் கெருவாக்கின் (Mohammad Said Keruak) தலைமையிலும் ஆட்சியில் இருந்தது.
1975-ஆம் ஆண்டில், அசுனோ கட்சியின் பொதுச் செயலாளர் அரிஸ் சாலே அசுனோ கட்சியை விட்டு வெளியேறி, முன்னாள் உப்கோ தலைவர் டொனால்டு இசுடீபன்சுடன் இணைந்து சபா ஆளுநர் பதவியை ஏற்றார். மற்றும் சபா மக்கள் ஐக்கிய முன்னணி (BERJAYA) என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.[2]
கட்சி கலைப்பு
[தொகு]இந்தப் புதிய கட்சி 1976 மாநிலத் தேர்தலில் அசுனோவைத் தோற்கடித்து 1985-ஆம் ஆண்டு வரை மாநில அரசாங்கத்தை அமைத்தது. அசுனோ தொடர்ந்து 1981, 1985, 1986, 1990 மாநிலத் தேர்தல்களில் பங்கேற்று வெற்றி பெற்றது. இருப்பினும் மீண்டும் ஆட்சி அமைக்க போதுமான ஆதரவைப் பெறவில்லை.[3][4]
1996-இல், அசுனோ பதிவு நீக்கம் செய்யப்பட்டது. அதன் சட்டமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் சபா அம்னோவில் இணைந்தனர்; மீதமுள்ளவர்கள் எதிர்க்கட்சியான ஐக்கிய சபா கட்சியில் (PBS) சேர்ந்தனர்.[5]
மேலும் காண்க
[தொகு]- மலேசிய ஒப்பந்தம்
- ஐக்கிய சபா கட்சி
- சபா மக்கள் கூட்டணி
- சபா முற்போக்கு கட்சி
- ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stockwell, A. J. (2004). British Documents on The End of Empire : Malaysia. Institute of Commonwealth in University of London. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780112905813.
- ↑ 2.0 2.1 "UPKO/PDS". Archived from the original on 30 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ James Chin, pp. 22-25
- ↑ "The United Malays National Organisation (UMNO) in Sabah, East Malaysia: An Overview 1990-1994 International" (PDF). Hamdan Aziz (Ph.D) & Syahrin Said, Department of Nationhood and Civilization Studies, Centre for Fundamental and Liberal Education, Universiti Malaysia Terengganu (UMT). Journal of Academic Research in Business and Social Sciences, Vol. 7, No. 12. 2017. பன்னாட்டுத் தர தொடர் எண் 2222-6990. பார்க்கப்பட்ட நாள் 25 September 2021 – via HR Mars.
- ↑ James Chin, 31