உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய உடைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமதாபாத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடும் கர்பா நாட்டியம்

இந்திய உடைகள் (clothing in India) அப்பகுதியின் இனம், நிலவியல், பண்பாடு மற்றும் தட்பவெப்பம் பொறுத்து மாறுபடுகிறது. முதல் மனிதன் இலைகளை பயன்படுத்தி ஆடைகளை உருவாக்கினான். நாகரீக வளர்ச்சியின் காரணமாக இன்று பருத்தி, கம்பளி போன்ற பலவற்றை கொண்டு ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவிலும் நெய்தல், இழை, வண்ணம் மற்றும் ஆடை வகைகளில் மிகப் பெரிய மாறுபாடு இருக்கிறது. தனிப்பட்ட மத மற்றும் சடங்கை பொறுத்து உடுத்தும் ஆடையின் வர்ணம் அமைகிறது. உதாரணமாக இந்து மதப் பெண்கள், துக்கத்தை குறிக்க வெள்ளை நிற ஆடைகளை அணிய அதுவே பார்சிகள் மற்றும் கிறித்துவர்கள் திருமணங்களில் வெள்ளை ஆடை அணிகிறார்கள்.

வரலாறு

[தொகு]
திதர்கஞ்ச் யக்‌ஷி காட்சிக்கும் வேட்டி மடிப்பு

இந்திய உடைகளின் வரலாறு , கிமு 5வது பத்தாயிரத்திற்கு முன்னர் சிந்துவெளி நாகரிகத்தில் பருத்தியை சுழற்தல், நெய்தல் மற்றும் சாயமிடல் ஆகியவற்றிலிருந்து தொடங்குகிறது. எலும்பு ஊசிகள் மற்றும் மர சுழல்களை தளத்தில் உள்ள அகழ்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டன.[1]. பண்டைய இந்தியர் பருத்தித் தொழிலை நன்கு மேம்படுத்தினர் மற்றும் அவற்றின் பல முறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன. எரோடோட்டசு, ஒரு பண்டைய கிரேக்க வரலாற்றாளர் இந்திய பருத்தியை இவ்வாறு விவரிக்கிறார்: "ஒரு கம்பளி, ஆட்டின் அழகையும் நற்குணத்தையும் விட மேலானது".[2] இந்திய பருத்தி ஆடை அத்துணைக்கண்டத்தின் உலர்ந்த, வெப்பமான கோடை காலங்களுக்கு ஏற்றது. 3000-4000 கி.மு. இடையே எழுதப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ள பெரும் இதிகாசமான மகாபாரதத்தில், திரௌபதியின் கண்ணியத்தை பாதுகாக்க முடிவிலா சேலையை பரிசளித்தாக ஒரு குறிப்பு உள்ளது..[3] பண்டைய இந்திய ஆடையைப்பற்றிய தற்போதைய அறிவு எல்லோரா போன்ற குகை நினைவு சின்னங்களில் இருக்கும் கற்சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில் இருந்து கிடைக்கப்பெற்றது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள நடன கலைஞர்கள் மற்றும் பெண் தெய்வங்களின் படிமானங்களில் அணிந்திருக்கும் வேட்டி மடிப்பு, இன்றைய புடவையின் முன்னோடி. மேல்சாதியினர் மென்துகில் ஆடைகளை உடுத்தி, தங்க ஆபரணங்களை அணிந்தனர்.[4] மணிகளில் உள்ள ஹரப்பா பட்டு இழைகளின் சமீபத்திய ஆய்வு, பட்டு நூற்பு என்னும் செயல்முறைப்படி பட்டு செய்யப்பட்டது என்று தெரிவிக்கின்றன. இம்முறை கி.பி. ஆரம்ப நூற்றாண்டுகளில் சீனா மட்டுமே அறியப்படும் செயல்பாடாகும்.[5]

கிரேக்க வரலாற்றாளர் ஏரியனின் [6] கூற்று படி

புத்தர், கிரேக்க புத்த பாணியில், கிபி 1ம் - 2ம் நூற்றாண்டு, காந்தாரா (நவீன கிழக்கு ஆப்கானிஸ்தான்).

"இந்தியர்கள் பயன்படுத்திய மெல்லிய ஆடை, நியார்க்கஸ் சொல்வது போல், மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆளியால் செய்யப்பட்டதைப் பற்றி நான் ஏற்கனவே பேசிவிட்டேன். ஒன்று அந்த ஆளி மற்றெந்த ஆளியை விட வெண்மையாக இருக்க வேண்டும் அல்லது இந்த கருப்பு மக்கள் அந்த ஆளியை வெண்மையாக தோன்றச் செய்ய வேண்டும். அவர்களின் மெல்லிய கவுன் கீழே முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் பாதி வரை நீள்கிறது மற்றும் ஒரு துணி ஓரளவுக்கு தோள்களில் தூக்கி சுற்றி பிறகு பாதி தலையை சுற்றிச் சுற்றப்படுகிறது. இந்தியர்களில் செல்வந்தர் யானை தந்த்தால் ஆன காதணிகளை அணிந்துகொள்கின்றனர். அதனை அனைவரும் அணிந்துகொள்வதில்லை. நியார்க்கஸ் கூறுகிறார், இந்தியர்கள் தங்கள் தாடிக்கு பல்வேறு நிறங்களில் மைப் பூசுகிறார்கள். சிலர் வெள்ளை, பலர் கரு நீலம், சிலர் சிகப்பு, சிலர் ஊதா மற்றும் சிலர் பச்சை. அங்கு அனைவரும் கோடைக்கு குடை பிடித்துக்கொள்கிறார். அவர்கள் நன்றாக அலங்கரிக்கப்பட்ட வெள்ளைத் தோல் காலணியை அணிகிறார் மற்றும் காலணியின் உள் அட்டை பல நிறங்களில் உள்ளன. அவர்கள் உயரமாக தோன்ற வேண்டி காலணி அட்டையை உயர எழுப்பப்படுகின்றன."

கி.பி. 1-ஆம் நூற்றாண்டின் ஆதாரங்கள் கிரேக்கர்களிடம் சில கலாச்சார பரிவர்த்தனையை காட்டுகிறது. இந்திய கிரேக்கத் தாக்கம் கிரேக்க புத்த கலையில் காணப்படுகிறது. புத்தர்கள் கிரேக்க ஹிமேஷன் (ஒரு வகை கிரேக்க ஆடை) அணிந்ததாக சித்தரிக்கப்பட்டது, இந்த ஆடை புத்த துறவிகளின் காசாயாவின் ஒரு பகுதியான நவீன சம்கதியின் முன்னோடி ஆகும்.[7]மௌரியர் மற்றும் குப்தா காலத்தில், மக்கள் வேத காலத்தைப் போல தைக்கப்படாத மூன்று துனைகளைக் கொண்டு ஆடைகளை அணிந்தனர். ஆடைகளின் முக்கிய உருப்படி வெள்ளை பருத்தி அல்லது மெல்லிய துணியால் செய்யப்பட்ட அந்தரியா. அதை இடுப்பில் காயாபந்த் என்னும் இடைக்கச்சையால் கட்டி, மேல் உடலை உத்தரியா என்னும் தாவணியால் மூடினர்.

கடல்வழி மற்றும் தரைவழி வர்த்தக பாதைகள் மூலம், மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே கலாச்சார பரிமாற்றம் நடைபெற்றது. ரோமர் சாயம்மேற்ற கருநீலத்தையும் (இண்டிகோ) பருத்தி துணிகளையும் ஆடைக்காக வாங்கினார். பட்டுப் பாதையின் வழியாக சீனாவுடனான வர்த்தகம், இந்தியாவுக்கு பட்டு ஜவுளிகளை அறிமுகப்படுத்தியது. சீன பட்டு வர்த்தகத்தில் தனியுரிமைக் கொண்டது. ஆதலால் அதன் உற்பத்தி செயலாக்கத்தை இரகசியமாக காத்து வந்தது. எனினும் இந்த ஏகபோக உரிமை ஒரு சீன இளவரசியின் மூலம் முடிவுக்கு வந்தது. கோடான் (தற்போதைய சிஞ்சியாங்) அரசனை திருமணம் செய்து கொள்ள அனுப்பிய போது சீன இளவரசி முசுக்கொட்டை விதைகளையும் பட்டுப் புழுக்களையும் அவரது தலை பாகையில் கடத்தப்பட்டது. ]]).[8] அங்கு இருந்து பட்டு உற்பத்தி ஆசியா முழுவதும் பரவியது, கி.பி. 140இல் இந்திய நடைமுறையில் நிறுவப்பட்டன. சாணக்கியரின் பொது நிர்வாகம் மீதான ஆய்வு அர்த்தசாஸ்திரம் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது) பட்டு நெசவு தொடர்பான விதிமுறைகளை விவரிக்கிறது.[9]

தண்டன் ஆயிலிக்கில் ஆரல் ஸ்டீன் கண்டுபிடித்த மரப் பலகை மீதான ஓவியம், சீன இளவரசி மல்பெரி விதைகளையும் பட்டுப் புழுக்களையும் அவரது தலைப் பாகையில் கோடான் நாட்டுக்கு கடத்தப்பட்டதை மொழிகிறது.

பண்டைய இந்தியாவில் பல்வேறு நெசவு நுட்பங்களை பயன்படுத்தினர், அவற்றில் பல இன்றும் நடைமுறையில் உள்ளன. பட்டையும் பருத்தியையும் பல்வேறு முறைகளாகவும் அடவுகளாகவும் நெசவித்தனர். ஒவ்வொரு பகுதிக்கென்று தனிப்பட்ட பாணியிலும் உத்தியிலும் உருவாக்கப்பட்டது. அவற்றில் ஜாம்தானி, வாரணாசியின் "காசித்துணி", புட்டிடார் மற்றும் இல்க்கல் சேலை பிரபலமான நெசவு நடைகளாகும். தங்கம் மற்றும் வெள்ளி நூல்களைக் கொண்டு சித்திரப் பூவேலை பொறித்த பட்டுதுணியில் பிணைத்தனர். அவற்றில் பாரசீக வடிவமைப்புகளின் தாக்கம் ஆழமாக இருந்தது. முகலாயர்களும் நெசவுக் கலையின் விரிவாக்கத்தில் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளனர். அதற்கு பெய்ஸ்லி மற்றும் லதீழஃபா பூதி எடுத்துக்காட்டாகும்.[10]

பண்டைய இந்தியாவில் துணிகளில் சாயமேற்றல் என்பது ஒரு கலைவடிவமாகவே நடைமுறையில் இருந்தது. ஐந்து முதன்மையான நிறங்களை (சுத்த-வர்ணங்கள்) கண்டறியப்பட்டு, அவற்றின் பல வண்ணச்சாயல்கள் மூலம் சிக்கலான நிறங்களை ( மிஸ்ரா - வர்ணங்கள்) வகைப்படுத்தப்பட்டன. கூர்ந்து அறியும் திறன் மூலம் மிகவும் நுண்ணிய வண்ணங்களையும் எய்தினர். பண்டைய ஆய்வான விஷ்ணு தர்மோத்திரம் ஐந்து வகையான வெள்ளை நிறத்தைப்பற்றி கூறுகிறது. அவை யானைத் தந்தம், மல்லிகை, ஆகஸ்ட் நிலவு, மழைக்குப் பின் வரும் ஆக்ஸ்ட் மேகங்களாகும்.[11]கருநீலம் (நிலா), மஞ்சிட்டி சிவப்பு மற்றும் செந்தூரம் பொதுவாக பயன்படுத்தப்படும் சாயங்கள் ஆகும்.[12][a] இரண்டாவது பத்தாயிரம் கி.மு. முதல் இந்தியாவில் நிறமூன்றியாக சாயமேற்றல் நிறைந்து காணப்பட்டதாய் இருந்தது.[13] ரெஸிஸ்ட் டையிஙும் காலம்காரியும் மிகவும் பிரபலமான சாயமேற்றல் தொழில்நுட்பமாக இருந்தது மற்றும் அத்தகைய ஆடைகள் பிரதான ஏற்றுமதிகளாக விளங்கியது.

காஷ்மீரி சால்வை இந்திய ஆடை வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். புகழ்பெற்ற வளையச் சால்வை என்று அழைக்கப்படும் ஷாஹ்டூஷ் மற்றும் வரலாற்று ரீதியாக பஷ்ம் என்று அழைக்கப்படும் பாஷ்மினா கம்பளி போர்வைகள் காஷ்மீரி சால்வை வகைகளுல் அடங்கும். காஷ்மீருக்கும் கம்பளி துணிகளுக்கும் உடனான தொடர்பைப் பற்றிய குறிப்பு வேதக் காலங்களிலேயே காணப்படுகிறது. சிந்துப் பள்ளத்தாக்கில் செம்மறியாடுகள் ஏராளமாக இருப்பதாக ரிக் வேதம் குறிக்கிறது. [சான்று தேவை] [b]கடவுள் பார்வோனை(பூஷன்) 'உடை நெசவாளர்' என அழைத்தனர்.[14] ஆகவே அப்பகுதியில் கம்பளிக்கு பஷ்ம் என்னும் பெயர் உருவானது. கம்பளி போர்வைகள் பற்றியக் குறிப்பு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஆப்கானிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், காஷ்மீர் வேலையைப் பற்றிய குறிப்பு கி.பி. 16 ம் நூற்றாண்டில் உள்ளது. காஷ்மீர் சுல்தான், ஜெயின் உல் அபிடின் இத்தொழில் நிறுவப்பட்டதில் பாராட்டப்படுகிறார்.[15] ரோமானிய பேரரசர் அரேலியன், மிகச் சிறந்த தரமான ஆசிய கம்பளியால் செய்யப்பட்ட ஊதா பால்லியத்தை ஓர் பாரசீக மன்னனிடம் இருந்து பெற்றார் என்று கதை கூறுகிறது.[சான்று தேவை] சால்வைகள், சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் சாயமிடப்பட்டது. சிவப்புச் சாயம் இறந்த பூச்சி வகையில் இருந்து எடுக்கப்படும் செஞ்சாய் பொருளில் இருந்து பெறப்பட்டவை. சிவப்பு மற்றும் கருநீலத்தில் இருந்து பெறப்பட்ட நீல கலவையின் மூலம் ஊதா நிறம் பெறப்படுகிறது.[16]ஜமாவர் மற்றும் வண்ண நூல் கொண்டு நெசவு சுழலைப் பயன்படுத்தி நெய்த கனி என்னும் கனிகா ஜமாவர் மிகவும் விலையுயர்ந்த காஷ்மீரி சால்வைகளாகும். ஒரு சால்வையை நெய்து முடிக்க ஒரு வருடத்திற்கும் மேலாகும் மற்றும் அதன் விரிவாக்கத்தின் அளவை பொறுத்து 100இல் இருந்து 1500 கனி வரை தேவைப்படும்.[14]

சீனா, தென்கிழக்கு ஆசியா மற்றும் உரோமப் பேரரசுகளுடன் பண்டைய காலத்தில் இருந்து இந்திய உடைகளைக் கொண்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன. ஊதா நிறத் துணி, மெல்லிய துணி மற்றும் கரடுமுரடான பருத்தியைப் பற்றிய குறிப்பு செங்கடல் செலவு (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்னும் கையேடில் உள்ளது.[17][c]மச்சிலிப்பட்டினம் மற்றும் பாரிகாசா போன்ற துறைமுக நகரங்கள் மெல்லிய மற்றும் நயமான துணிகளின் உற்பத்தியால் புகழ்பெற்றிருந்தது. இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயான வாசனை திரவிய வணிகத்தின் இடைத்தரகர்களாக இருந்த அரேபியர்கள், இந்திய ஆடைகளை ஐரோப்பாவிற்கு எடுத்துச்சென்றனர். 17 ஆம் - 18 ஆம் நூற்றாண்டில் அங்கு இந்திய ஆடைகளுக்கு உயரிய ஆதாய உரிமை கொடுக்கப்பட்டது.[18] டச்சு, பிரஞ்சு மற்றும் பிரித்தானிய கிழக்கு இந்திய நிறுவனங்கள் இந்திய பெருங்கடலில் மசாலா பொருள் வணிகத்தின் ஏகபோக உரிமைக்காக போட்டியிட்டனர். ஆனால் வாசனைப்பொருட்களின் விலை தங்க அல்லது வெள்ளியில் இருந்ததால் சிக்கலை உண்டாக்கியது. இச்சிக்கலைத் தீர்க்க பொன்னை, இந்தியாவிற்கு சவுளி வணிகம் செய்ய அனுப்பப்பட்டது. ஆனால் அதில் ஒரு பெரும் பங்கை வாசனைப்பொருள் வணிகத்திற்கு செலவிட்டனர். பிறகு இந்த வாசனைப்பொருட்களை சவுளிகளுடன் இணைத்து லண்டனில் வர்த்தகம் செய்தனர். அச்சிடப்பட்ட இந்திய காலிகோக்கள், சிற்றாடை, மெல்லிய துணி மற்றும் வடிவமைக்கப்பட்ட பட்டு சவுளிகள் ஆங்கில சந்தையில் வெள்ளப்பெருக்கெடுத்தன. பின்னர் ஆங்கிலம் ஆடை உற்பத்தியாளர்கள் இந்தியாவை சார்ந்திருப்பதை குறைக்க, இந்திய வடிவமைப்புகளை பிரதிபலிப்பு தடங்களால் நகலெடுத்தனர்.[19]

இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியும் அடக்குமுறையும் 1905இல் நடந்த வங்காளப் பிரிவினை, நாடு தழுவிய சுதேசி இயக்கத்தை தூண்டியது. தன்னிறைவு அடைதலும், இந்திய பொருட்களை ஊக்குவிக்க சந்தையில் பிரித்தானிய பொருட்களை புறக்கணித்தலும் இயக்கத்தின் ஒருங்கிணைந்த நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.[20] இந்த லட்சியம் தான் காதியின் உற்பத்திக்கு வித்திட்டது. காதி மற்றும் அதன் தயாரிப்புகளை தேசியவாத தலைவர்கள் ஊக்குவித்தனர். அதே நேரத்தில் கிராமப்புற கைவினைஞர்களை பலப்படுத்துவதற்கும் ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது.[21]

ஆண்களின் ஆடைகள்

[தொகு]

வேட்டி

[தொகு]
வேட்டி மற்றும் சட்டையுடன் ஒருவர்

வேட்டியை ஆண்கள் இடுப்பில் அணிகின்றனர். வேட்டிகள் பொதுவாக வெள்ளை நிறத்தில் ஒளிபுகும் தன்மையுடன் இருப்பதால் இரண்டாக மடித்து கட்டப்படுகிறது. வேட்டி இந்தியாவின் பாரம்பரிய உடையாகும்.

சட்டை

[தொகு]

முழுகாற்சட்டை

[தொகு]

முண்டு அல்லது சாரம்

[தொகு]

பலவண்ணங்களில் இருக்கும் முண்டு அல்லது சாரத்தை ஆண்கள் மேலாடையாக அணிகின்றனர்.

பெண்ணின் ஆடை

[தொகு]

இந்தியா பெண்கள் பெரும்பாலும் புடவையை பாரம்பரிய மற்றும் முக்கிய ஆடையாக அணிகின்றனர். தற்பொழுது மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் மேற்கத்திய உடைகளை அணியும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போதைய இளைய தலைமுறை பெண்கள் பெரும்பாலும் சுடிதார் அணிகின்றனர்.

புடவை

[தொகு]
நடிகை வித்யா பாலன் ஒரு பட்டு புடவையை அணிந்துகொண்டிருக்கிறார்.

புடவை[22][23] இந்தியத் துணைக்கண்டத்தில் பெண்களின் முக்கியமான ஆடை ஆகும்.[24] ஒரு சேலை, நான்கிலிருந்து ஒன்பது மீட்டர் வரை இருக்கும் தைக்கப்படாத துணியை பல்வேறு பாணிகளில் உடல் மீது சுற்றப்படும் ஆடை ஆகும். சேலை பல்வேறு பாரம்பரிய பாணியில் உடுத்தப்படுகிறது. கிழக்கில் இருந்து சம்பல்பூரி புடவை, மேற்கில் இருந்து பைதானி, தெற்கில் இருந்து காஞ்சிபுரம் மற்றும் வடக்கில் இருந்து பனாரஸி புடவை பிரசித்திபெற்றவை.[25] பொதுவாக புடவை இடுப்பைச் சுற்றி சுற்றப்பட்டு பின்னர் ஒரு முனையைக் கொண்டு வயிற்றை மறைத்து தோள் மேது போர்த்தப்படும்.[24] புடவை பாவாடை மற்றும் இரவிக்கை மேல் அணியப்படுகிறது.[26] இரவிக்கையை மார்பு பகுதியை மறைக்கவும், பாவாடை கால்பகுதியை மறைக்கவும் இடை ஆடையாக உள்ளாடைகளான ஜட்டி மற்றும் பிராவின் மேல் அணியப்படுகிறது. ஆயுதப்படைகளில் பெண்கள், சேலையை சீருடையாக அணியும் பொழுது, மேல் உடுத்தும் அரைக்கைச் சட்டையை இடுப்புடன் சொருகிக்கொள்வர். இளவயது பெண்கள் பாவாடை, சட்டை மற்றும் அதன் மேல் சேலையைப் போல் சுற்றிக் கொள்ளும் தாவணியை அணிவர்.

புடவைகள் பொதுவாக வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. கேரளாவில் காவானிஸ் எனப்படும் தங்க இழைகள் பொருத்திய வெள்ளை புடவையை சிறப்பு சந்தர்ப்பங்களில் அணியப்படுகிறது. தினசரி அணியும் வெள்ளை புடவையை முண்டு என அழைக்கப்படுகிறது. கருநாடகாவில், புடவைகளை குப்சாஸ் என அழைக்கப்படுகின்றன.[27]

காக்ரா சோளி

[தொகு]
ஒரு முழுமையாக சித்திர தையல் வேலை செய்யப்பட்ட இளஞ்சிவப்பு காக்ரா சோளியை இந்திய நடிகை ஸ்ரேயா சரண் அணிந்துகொண்டிருக்கிறார்

காக்ரா சோளி அல்லது லெஹெங்கா சோளி என்பது இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள பெண்கள் அணியும் பாரம்பரிய உடை ஆகும். பஞ்சாபியர்கள் அவற்றை அணிந்து தங்களது சில நாட்டுப்புற நடனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது லெஹெங்கா, ஒரு இறுக்கமான சோளி மற்றும் ஒத்ஹானியின் ஒரு கலவையாக உள்ளது. லெஹெங்கா என்பது மடிப்புகள் கொண்ட நீண்ட பாவாடை ஆகும். இது பொதுவாக எம்பராய்டரி செய்யப்பட்டிருக்கும் அல்லது கீழே அடர்த்தியான ஓரம் கொண்டிருக்கும். ஒரு சோளி என்பது உடல் பொருந்தும் வகையில் வெட்டப்பட்ட குறுகிய சட்டை மற்றும் குறைவான கழுத்து உள்ள ஒரு அங்கியாகும்.

தினசரி அணியும் எளிய பருத்தி லெஹெங்கா சோளியில் இருந்து பொதுவாக நவராத்திரியின் போது நடக்கும் கர்பா நடனத்திற்காக அணிந்துகொள்ள கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட பாரம்பரியமான காக்ரா சோளி அல்லது திருமண வைபவங்களின் போது மணமகள் அணிந்துகொள்ளும் முழுமையாக எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்ட லெஹெங்கா வரை பல்வேறு வடிவங்களில் காக்ரா சோளி பெண்களால் அணியப்படுகிறது.

திருமணமாகாத பெண்கள் மத்தியில் சல்வார் கமீசைத் தவிர பிரபலமான ஆடை காக்ரா சோளி மற்றும் பாவாடை தாவணி ஆகும்.[28]

சல்வார்-கமீஸ்

[தொகு]
சல்வார்-கமீஸில் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா

சல்வார் என்பது நீளமான காற்சட்டை ஆகும். சிந்தி சுதன், டோக்ரி பஜம்மா மற்றும் காஷ்மீர் சுதனும் சல்வாரின் உள்ளடக்கம்.

சல்வார் கமீஸ் பஞ்சாப், அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் பெண்களின் பாரம்பரிய உடைகள். சல்வாரைப் போல் இருக்கும் சுதான் (ஒரு வகை ஆடை) சிந்து மற்றும் காஷ்மீர் இல் பொதுவாக அணியப்படுகின்றன.[29] சல்வார் கமீஸ் பெண்களிலையே மிகவும் பிரபலமான ஆடையாக மாறிவிட்டது. இது கணுக்கால் அருகே குறுகிய தளர்வான கால்சட்டையும் (சல்வார்), மேலே மூடப்படும் அங்கியும் (கமேஸ்) கொண்டுள்ளது.[29] இது வடக்கு இந்தியாவில் பஞ்சாபி உடை அல்லது சல்வார் என்றும் தெற்கு இந்தியாவில் சுரிதார் என்றும் அழைக்கப்படுகிறது.[30] பெண்கள் துப்பட்டா அல்லது ஒடானி (முக்காடு) அணிந்து தோள்களையும் தலையையும் மறைத்துக்கொள்கின்றனர்.[29] இது எப்பொழுதும் துப்பட்டா என்னும் தாவணி போன்ற துணியை கொண்டு தலையையும் மார்பையும் மறைக்கின்றனர். துப்பட்டாவின் துணி வகை அதன் அங்கியின் துணி வகையை பொருத்தது மற்றும் பருத்தி, ஜியார்ஜட், பட்டு, சிஃபானிலும் கிடைக்கிறது.[சான்று தேவை] இந்த ஆடை மேற்கத்திய உடைகளிக்கு ஈடாக கிட்டத்தட்ட எல்லா இளம் பெண்களும் அணிகின்றனர். சல்வார் கமீஸ் வடமேற்கு இந்தியாவில் மிகவும் பொதுவானது. பல நடிகைகள் பாலிவுட் திரைப்படங்களில் சல்வார் கமீஸை அணிந்து கொள்கின்றனர். [சான்று தேவை]

சுடிதார் குர்தா

[தொகு]
Girl in plain churidaar kurta
Anarkali style Churidaar kurta
எளிய சுடிதார் குர்தா (இடது பக்கம்) அனார்கலி சுடிதார் குர்தா (வலது பக்கம்)

சுடிதார் சல்வாரின் பதிப்பு ஆகும். இது முழங்கால் வரை தளர்வாகவும் பிறகு கீழே கெண்டைத்தசை வரை சற்று இருக்கமாகவும் இருக்கும். சல்வார் மடிப்புகளுடன் கீழே தளர்வாக தொங்கி பிறகு கணுக்கால் அருகே பொருந்துகின்ற பைஜாமா ஆகும், அதுவே சுடிதார் முழங்காலுக்கு கீழே கணுக்காலில் கிடைமட்டமாக சேகரித்து சற்று இருக்கமாக பொருந்துகிறது. .[31] பொதுவாக முழங்காலுக்கு கீழே நீளமாக தொங்கும் குர்தாவை சுடிதாருடன் அணிகின்றனர்.

பட்டுப்பாவாடை/ரேஷ்மேலங்கா

[தொகு]
ஒரு சிறிய பெண் பட்டுப்பாவாடையை உடுத்தியிருக்கிறாள்

பட்டுப்பாவாடை அல்லது ரேஷ்மேலங்கா என்பது தென் இந்தியா மற்றும் ராஜஸ்தானில் பொதுவாக இளம் மற்றும் சிறு பெண்கள் அணியும் ஒரு பாரம்பரிய ஆடை ஆகும். பொதுவாக பட்டால் செய்யப்பட்ட, கூம்பு வடிவிலான பாவாடை இடுப்பில் கட்டப்பட்டு கால் விரல் வரை தொங்குகிறது. பொதுவாக இதன் கீழ்ப்பாகத்தில் தங்க சரிகையுடன் இருக்கும்.

தென் இந்தியாவில் இருக்கும் பெண்கள் பட்டுப் பாவாடையை பாரம்பரிய விழாக்களின் பொழுது அணிகின்றனர். ராஜஸ்தான் பெண்கள் இந்த ஆடையை திருமணத்திற்கு முன்பு வரை அணிகிறார்கள்.

தாவணி/லங்கா வோணி

[தொகு]

தாவணி தென் இந்திய இளம் பெண்கள் அணியும் ஆடை ஆகும். இவ்வாடை பாவாடை, சட்டை மற்றும் தாவணி என்று மூன்று பகுதிகளாக கொண்டது. பாவாடை சட்டையை உடுத்தி அதன் மேல் தாவணி என்னும் நீண்ட துணியால் உடலைச் சுற்றி கட்டப்படுகிறது.

முண்டும் நெரியதும்

[தொகு]
ஓவியத்தில் ஒரு பெண் முண்டும் நெரியதும் உடுத்தியிருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது

முண்டும் நெரியதும் என்பது உடலின் கீழ்ப் பாகத்தை மறைக்கும் புராதன உடை ஆகும். இது தென் இந்தியாவில் இருக்கும் கேரள மாநிலத்தின் பெண்கள் உடுத்தும் உடை.[32][33]

அடிப்படை பாரம்பரிய துணி பகுதி முண்டு அல்லது உடலின் கீழ்ப் பாகத்தில் உடுத்தும் உடை என்பது பண்டைய புடவையின் ஒரு வடிவம் ஆகும். இதை மலையாளத்தில் 'துணி' என்பர். அதுவே நெரியதும் என்பது உடலின் மேல் பாகத்தை மறைக்கும் ஆடை ஆகும்.[32][33]

குறிப்புகள்

[தொகு]
  1. இவை பொதுவாக துணிகளுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிச் சாயங்கள். கைரிகா (சிவப்பு காவி), சிந்தூரம் (சிவப்பு ஈயம்), மை (விளக்குக்கறி), இரும்பு சல்பேட், ஆண்டிமனியை மற்றும் கார்மைன் சல்பேட் பயன்படுத்தப்பட்ட காய்கறி அல்லாத சாயங்கள்.[12]
  2. ரிக் வேதம், மண்டல 10, பாடல் 75, சிந்து பள்ளத்தாக்கை சுவஸ உர்ணாவதி என குறிப்பிடுகிறது அதாவது ஏராளமான செம்மெறியாட்டின் முகப்பு[சான்று தேவை]
  3. பெரிபிளஸ் கங்கை சமவெளியை உட்பட பல்வேறு பகுதிகளில் துணி உற்பத்தி செய்ததாக கூறுகிறது. பண்டைய ரோமர்கள் இந்திய ஆடைகளை "கேஞ்ச்செடிகா (gangetika)", நெபுலா மற்றும் காற்றால் நெய்த "வெண்டி" என்று அழைத்தனர். மார்கோ போலோவின் உலக விளக்கம் குசராத் உலகின் சிறந்த துணிகள் கொண்டது என்கிறக் குறிப்பு அக்கால ஆடை வணிகத்தைப் மார்கோ போலோ 'ன் உலக விளக்கம் குசராத் உலகின் சிறந்த துணிகள் கொண்ட ஒரு குறிப்பும் கொண்டு, நேரம் ஜவுளி வர்த்தக பற்றிய ஒரு கருத்தை கொடுக்கிறது.[17]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Weaving in Ancient India". http://www.textileasart.com. பார்க்கப்பட்ட நாள் 5 July 2012. {{cite web}}: External link in |publisher= (help)
  2. "Herodotus on indian Cotton – Primary sources". www.thenagain.com. பார்க்கப்பட்ட நாள் 5 July 2012.
  3. "Introduction to the Saree". Alvia Malik. பார்க்கப்பட்ட நாள் 20 Dec 2013.
  4. "Megasthenes' indica". Tuepflis Global Village Library. பார்க்கப்பட்ட நாள் 5 July 2012.
  5. "Rethinking Silk's origins". www.nature.com. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
  6. "Indica(Arrian) on indian clothing". Sam Houston State University – TX. Archived from the original on 25 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 5 July 2012.
  7. Benjamin Rowland, Jr. "Gandhara and Early Christian Art: Buddha Palliatus". American Journal of Archaeology. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012.
  8. "Silk Princess painting". British museum paintings. British Museum. Archived from the original on 1 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 July 2012.
  9. "The removal of thorns" (PDF). Arthashastra. South Dakota State University. Archived from the original (PDF) on 12 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 10 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. Indian Embassy Russia. "Indian Textile Art". Indian Chronicle. http://indianembassy.ru/indiachronicle/jul08/culture.html. பார்த்த நாள்: 2014-04-23. 
  11. "Vishnudharmottara purana" (PDF). பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
  12. 12.0 12.1 "Dies used in Ancient india". DePaul university. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
  13. "Mordant dyeing in ancient india". Victoria and Albert museum. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
  14. 14.0 14.1 Omacanda Hāṇḍā. Textiles, costumes and ornaments of Western Himalayas. Indus Publishing house. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8173870764.
  15. "Kashmir shawl". Brittanica. அணுகப்பட்டது 12 July 2012. 
  16. "Summary of Ctesias' Indica". www.liviticus.org. pp. section 39. Archived from the original on 1 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
  17. 17.0 17.1 "Periplus of the Erythraean Sea". p. 42. பார்க்கப்பட்ட நாள் 15 July 2012.
  18. "Indian textiles in Europe". The Hindu – Magazine. The Hindu. 14 August 2005 இம் மூலத்தில் இருந்து 20 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140120004140/http://www.hindu.com/mag/2005/08/14/stories/2005081400190400.htm. பார்த்த நாள்: 15 July 2012. 
  19. "Indian trade with EIC". Victoria and Albert Museum. பார்க்கப்பட்ட நாள் 15 July 2012.
  20. THE RAMAKRISHNA MISSION INSTITUTE OF CULTURE. "The Swadeshi Movement". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 15 July 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  21. A companion to the Anthropology of India. Wiley- Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405198929.
  22. Kalman, Bobbie (1 August 2009). India: The Culture. Crabtree Publishing Company. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7787-9287-1. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012.
  23. fuck this shitBanerjee, Mukulika; Miller, Daniel (15 August 2008). The Sari. Berg Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84788-314-8. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012.
  24. 24.0 24.1 Alkazi, Roshan (1983) "Ancient Indian costume", Art Heritage; Ghurye (1951) "Indian costume", Popular book depot (Bombay); Boulanger, Chantal; (1997)
  25. http://www.culturalindia.net/indian-clothing/sari.html
  26. Chantal Boulanger (December 1997). Saris: an illustrated guide to the Indian art of draping. Shakti Press International. பார்க்கப்பட்ட நாள் 15 July 2012.
  27. Geeta Kochhar, Radha Seethapalli. Environmental Education. Frank Brothers. pp. 31–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7170-946-5. பார்க்கப்பட்ட நாள் 15 July 2012.
  28. Kelting, Mary Whitney (2 August 2001). Singing to the Jinas: Jain Laywomen, Maṇḍaḷ Singing, and the Negotiations of Jain Devotion. Oxford University Press. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-514011-8. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012.
  29. 29.0 29.1 29.2 Lise Winer (16 January 2009). Dictionary of the English/Creole of Trinidad & Tobago: On Historical Principles. McGill-Queen's Press – MQUP. pp. 808–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7735-3406-3. பார்க்கப்பட்ட நாள் 8 July 2012.
  30. Tarlo, Emma (1996). Clothing Matters: Dress and Identity in India. Hurst. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85065-176-5. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012.
  31. The Times of India annual. 1954. பார்க்கப்பட்ட நாள் 9 July 2012.
  32. 32.0 32.1 Boulanger, C (1997) Saris: An Illustrated Guide to the Indian Art of Draping, Shakti Press International, New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9661496-1-0
  33. 33.0 33.1 Ghurye (1951) "Indian costume", Popular book depot (Bombay); (Includes rare photographs of 19th century Namboothiri and nair women in ancient saree with bare upper torso)

வெளி இணைப்புகள்

[தொகு]