ஆகா கான் அரண்மனை
ஆகா கான் அரண்மனை | |
---|---|
அமைவிடம் | எரவடா, புனே, இந்தியா |
பரப்பளவு | 19 ஏக்கர்கள் (77,000 m2) |
கட்டப்பட்டது | 1892 |
நிர்வகிக்கும் அமைப்பு | காந்தி தேசிய நினைவுச் சங்கம் |
மகாராஷ்டிராவில் ஆகா கான் அரண்மனையின் அமைவிடம் |
ஆகா கான் அரண்மனை (Aga Khan Palace) இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் புனே நகரத்தில் எரவடா பகுதியில் அமைந்துள்ளது. 1892இல் இவ்வரண்மனையை கட்டியவர் சுல்தான் மூன்றாம் முகமது ஷா ஆகா கான் ஆவார். இவ்வரண்மனையின் மொத்தப் பரப்பளவு 19 ஏக்கர் ஆகும்.
இந்திய விடுதலைப் போராட்டம்
[தொகு]இந்திய விடுதலை இயக்கக் காலத்தில், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான மகாத்மா காந்தி, கஸ்தூரிபாய் காந்தி, மகாதேவ தேசாய் மற்றும் சரோஜினி நாயுடு ஆகியவர்களை பல முறை பிரித்தானிய இந்திய அரசு ஆகா கான் அரண்மனையில் வீட்டுக் காவலில் வைத்திருந்தது.
நினைவிடம்
[தொகு]ஆகா கான் அரண்மனையில் கஸ்தூரிபாய் காந்தி மற்றும் மகாத்மா காந்தியின் நேர்முகச் செயலாளர் மகாதேவ தேசாயின் இறப்பிற்குப் பின்னர் அவர்களது நினைவிடங்கள் ஆகா கான் அரண்மனையில் நிறுவப்பட்டுள்ளன.[1]
அருங்காட்சியகம்
[தொகு]இந்திய விடுதலைக்குப் பின்னர் ஆகா கான் அரண்மனை 2003இல் இந்தியாவின் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் அருங்காட்சியகமாக செயல்படுகிறது.[2]
அமைவிடம்
[தொகு]புனே – எரவாடா சாலையில், புனே நகரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஆகா கான் அரண்மனை அமைந்துள்ளது.
ஆகா கான் அரண்மனைக் காட்சிகள்
[தொகு]-
இந்திய விடுதலைக்கு முன்னர் ஆகா கான் அரண்மனையின் தோற்றம்
-
தூர நோக்குக் காட்சி
-
மகாத்மா காந்தி சாம்பல்
-
முன்பக்கத் தோற்றம்
-
பக்கவாட்டுத் தோற்றம்
-
முழுத் தோற்றம்
-
மகாத்மா காந்தி தொடர்பான நினைவுக் குறிப்புகள்
-
தகவல் பலகை
-
பக்கவாட்டுக் காட்சி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Respecting our legacy". Deccan Herald. 29 April 2012. http://www.deccanherald.com/content/245537/respecting-our-legacy.html. பார்த்த நாள்: 10 May 2012.
- ↑ "On Gandhi Heritage Sites list, Aga Khan Palace, Yerawada jail". The Indian Express. 5 September 2010. http://www.indianexpress.com/news/on-gandhi-heritage-sites-list-aga-khan-palace-yerawada-jail/677604/0. பார்த்த நாள்: 10 May 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
[தொகு]
வார்ப்புரு:புனே மாவட்டம்