உள்ளடக்கத்துக்குச் செல்

அரிவட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிவட்டி என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில் அரிசிவடிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பனை ஓலைக் கூடையாகும். இது அரிசி வடிக்கும் பெட்டியாதலால் ‘அரிவட்டி’ என அழைக்கப்படுகிறது. இது குமரி மாவட்டத்தில் மட்டும் செய்யப்படும் ஒரு பெட்டி வகை ஆகும். பெரும்பாலும் குருத்தோலைகளிலிருந்து பெறப்படும் ஈர்க்கில்களைக் கொண்டு செய்யப்பட்டுவந்தது. குருத்தோலைகள் கிடைப்பது அரிதானத தற்காலத்தில் சாரோலை ஈர்க்கில்களைக் கொண்டு செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் புட்டு (பிட்டு) செய்ய அரிசியைத் தண்ணீரில் ஊறப்போட்டுப் பின்னர் உரலில் இட்டுக் குத்தி மாவைச் சலித்தெடுப்பார்கள். ஊறப்போட்ட அரிசியை வடித்து உலர்த்தி எடுப்பதற்காக அனைத்து வீடுகளிலும் அரிவட்டி தவறாது இடம்பெற்றிருக்கும். திருமண வீடுகளின் அரிசியைக் கழுவி நீர் வடித்து உலையில் போட அரிவட்டியைப் பயன்படுத்துவர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. காட்சன் சாமுவேல் (14 சூலை 2018). "அன்னமிடும் அரிவட்டி". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2018.