அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம்
அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம் Great Famine (an Gorta Mór) | |
---|---|
நாடு | அயர்லாந்து |
இடம் | அயர்லாந்து |
காலம் | 1845 - 1852 |
மொத்த இறப்புகள் | 1 மில்லியன் |
அவதானிப்புகள் | வளர்ச்சித் திட்டங்கள் தோல்வியுற்றது; உருளைக்கிழங்கு நோய்ப்பட்டது; சோள இறக்குமதிக் கட்டுப்பாடு |
நிவாரணம் | கீழே காண்க |
மக்கள்தொகைக்கு பாதிப்பு | சாவு, புலம்பெயர்தல் காரணமாக மக்கள் தொகை 20-25% குறைந்தது |
விளைவுகள் | அயர்லாந்தின் மக்கள் தொகை, அரசியல் மற்றும் கலாச்சார அமைப்பு வேரோட்டமாக மாறியது |
வலைத்தளம் | பெரும் பஞ்ச நினைவுச் சின்னங்கள் |
முன் | 1740–1741 அயர்லாந்து பஞ்சம் |
பின் | 1879 அயர்லாந்து பஞ்சம் (An Gorta Beag) |
அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம் (Irish Potato Famine) அல்லது பெரும் பஞ்சம் (Great Famine) என்பது 1845-1852 கால கட்டத்தில் அயர்லாந்து நாட்டில் பெரும் திரளான மக்கள் பட்டினியாலும் நோயாலும் மடிந்ததையும் வாழ்வுதேடி வெளிநாடுகளுக்குப் பெயர்ந்து சென்றதையும் குறிக்கும்.[1]
பெயர்
[தொகு]அயர்லாந்துக்கு வெளியே அயர்லாந்து உருளைக்கிழங்குப் பஞ்சம் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்ற இந்த நிகழ்வு அயரிய மொழியில் (Irish language) an Gorta Mór (IPA: [ənˠ ˈɡɔɾˠtˠə ˈmˠoːɾˠ] என்று அழைக்கப்படுகிறது. அதற்கு பெரும் பஞ்சம் (the Great Hunger) என்பது பொருள். இதைக் கெட்ட காலம் (the bad times) என்றும் (அயரிய மொழியில் an Drochshaol ([ənˠ ˈdˠɾɔxˌhiːlˠ]) என்றும் அழைப்பர்.
காரணங்கள்
[தொகு]அயர்லாந்தில் பெரும் பஞ்சம் ஏற்பட பல காரணங்கள் இருந்தன. நேரடிக் காரணமாக அமைந்தது உருளைக்கிழங்குச் சாகுபடியைத் தாக்கிய ஒருவகை நோய் ஆகும்.[2] "உருளைக்கிழங்கு நோய்" (potato blight) என்ற அந்த தாக்குதல் 1840களில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் அழிவை ஏற்படுத்தியது உண்மை. என்றாலும், அயரிய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் உருளைக்கிழங்கை நம்பியே பிழைத்தனர்.
மேலும், அயர்லாந்தில் அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலையும், அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியதும், சமூக, பொருளாதாரக் கூறுகளும் அயரிய பஞ்சத்தின் கொடுமையை இன்னும் கடுமை ஆக்கின. அயர்லாந்தின் பெரும் பஞ்சம் இவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தியதற்கு அரசியல், சமூக, பொருளாதாரக் கூறுகளைக் கட்டுப்படுத்திய ஆட்சியாளர்கள் எந்த அளவுக்குப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்பது பற்றிய விவாதம் இன்றும் தொடர்கிறது.[3][4]
பெரும் பஞ்சம் கடினமானதற்கு முக்கிய காரணங்கள்
[தொகு]இங்கிலாந்து நிலக்கிழார் ஆதிக்கம்
[தொகு]1541ஆம் ஆண்டிலிருந்து அயர்லாந்து நாடு முற்றிலுமாகப் பிரித்தானிய கட்டுபாட்டுக்கு உட்படலாயிற்று. இங்கிலாந்தின் நிலக்கிழார்கள் அயர்லாந்தின் நிலத்தில் பெரும்பண்ணைகளுக்கு உரிமையாளர் ஆனார்கள். அயர்லாந்தின் குடியானவர்கள் அப்பண்ணை நிலங்களில் குத்தகைத் தொழிலாளிகளாக வேலை செய்தார்கள். அவர்கள் சோளம், உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் பயிர்செய்ததோடு, ஓரளவுக்கு கால்நடைகளையும் வளர்த்தார்கள். நிலக்கிழார்களுக்குக் கொடுக்கவேண்டிய குத்தகைத் தொகையாக தானியங்களும் கால்நடைகளும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட பிறகு, அயரிய குடியானவர்களுக்கு எஞ்சியதெல்லாம் உருளைக்கிழங்கு மட்டுமே. அதைச் சிறிதளவு நிலத்திலும் பயிரமுடியும் என்பதாலும், அப்பயிர் எளிதாகவும் விரைவாகவும் பலனளிக்கும் என்பதாலும், உருளைக்கிழங்கே அயர்லாந்தில் சாமானியர்களின் அன்றாட உணவாக மாறிற்று.
கத்தோலிக்கருக்கு எதிரான சட்டம்
[தொகு]அயர்லாந்து மக்களுள் மிகப் பெரும்பான்மையோர் கத்தோலிக்க சமயத்தைக் கடைப்பிடித்தனர். 17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து புராட்டஸ்தாந்து சபையைத் தழுவியதும், அயர்லாந்து கத்தோலிக்கரின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அவர்கள் நிலத்தை உடைமையாகக் கொண்டிருக்க தடை விதிக்கப்பட்டது. நிலத்தை வாங்கினாலோ குத்தகைக்குக் கொடுத்தாலோ தண்டனை வழங்கப்பட்டது.
இங்கிலாந்தையும் இசுக்காந்துலாந்தையும் சார்ந்த புராட்டஸ்தாந்து சமயத்தவர்களுக்கு அயர்லாந்தின் விளைச்சல் நிலங்கள் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டன. இவ்வாறு வெளிநாட்டு நிலக்கிழார்கள்களின் கீழ் குத்தகை விவசாயிகளாக அயர்லாந்தது நாட்டவர் மாறினர்.
அயரிய கத்தோலிக்கருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. அவர்களுக்கு அரசு வேலைகள் கொடுக்கப்படவில்லை. நகரப் பகுதிகளில் அவர்கள் குடியேற உரிமை மறுக்கப்பட்டது. நகரங்களிலிருந்து 5 மைலுக்கு அப்பால்தான் அவர்கள் வீடுவைக்க முடிந்தது. அவர்கள் கல்வி பெற உரிமை கிடையாது. இவ்வாறு பலவகைகளில் கொடுமைப்படுத்தப்பட்ட அயரிய மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்தது "அயரிய விடுதலைச் சட்டம்" (Emancipation Act) வழியாகத்தான் (1778).[5]
குத்தகை முறையின் கொடுமை
[தொகு]அயரிய கத்தோலிக்கரும் நிலத்தை உடைமையாகக் கொள்ளலாம் என்று சட்டம் இயற்றப்பட்ட போதிலும், ஏழ்மையில் வாடிய அவர்களால் நிலத்தை விலைகொடுத்து வாங்க இயலவில்லை.
அயரிய மக்களில் 72% பேர் நிலத்தைப் பயிரிடுவதில் ஈடுபட்டிருந்தனர். எனவே குத்தகைக்கு எடுத்து பயிரிடுவதற்குப் போதுமான நிலமும் கிடைக்கவில்லை. குறைந்தது 8 ஏக்கர் நிலமாவது பயிரிட இருந்தால்தான் ஒரு குடும்பம் அதைக்கொண்டு வாழமுடியும் என்ற நிலையில், 65% குத்தகை நிலங்கள் ஒவ்வொன்றும் 5 ஏக்கருக்குக் குறைவாகவே இருந்தன.
பயிர்த்தொழிலை விடுத்து வேறு வேலை வாய்ப்புகள் அயரிய கத்தோலிக்கர்களுக்கு அளிக்கப்படவில்லை. வட அயர்லாந்தின் அல்ஸ்டர் பகுதியைத் தவிர வேறு ஓரிடத்திலும் தொழிற்சாலைகள் நிறுவப்படவுமில்லை. பிரித்தானிய அரசு கடைப்பிடித்த ஒருதலைச் சார்பான கொள்கைகளாலும் வரிவிதிப்புகளாலும் அயர்லாந்தில் தொழில்வளர்ச்சி தடைபட்டது என்று அதிகாரபூர்வமான ஒரு குழு அறிக்கை கூறியது. நிலச் சீர்திருத்தம், குத்தகைக் குடியானவர்களின் உரிமைப் பாதுகாப்பு, பொதுப்பணி செயல்பாடு, தொடருந்துப் பாதைகளை நிறுவுதல் போன்றவை செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியதை பிரித்தானிய அரசு கண்டுகொள்ளவில்லை.
அரசியல் காரணங்கள்
[தொகு]ஆண்டு | உருளைக்கிழங்கு சாகுபடி (கணிப்பு) (ஆயிரம் டன் கணக்கில்)[6] |
---|---|
1844 | 14,862 |
1845 | 10,063 |
1846 | 2,999 |
1847 | 2,046 |
1848 | 3,077[1] |
1849 | 4,024 |
1855 | 6,287 |
1856 | 4,419 |
1859 | 4,321 |
[1] 1848ஆம் ஆண்டுக்கான கணிப்பு, முழுமையற்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அமைந்தது.
லைன்ஸ்டர் | மூன்ஸ்டர் | அல்ஸ்டர் | கோனாட் | அயர்லாந்து |
---|---|---|---|---|
15.3 | 22.5 | 15.7 | 28.8 | 20 |
Table from Joe Lee, The Modernisation of Irish Society (Gill History of Ireland Series No.10) p. 2 |
இழப்புகள்
[தொகு]அயர்லாந்தின் பெரும் பஞ்சத்தின்போது ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்கள் பட்டினியாலும் நோயாலும் இறந்தார்கள். பட்டினிக்குத் தப்புவதற்காகவும், வாழ்வு தேடியும் மற்றும் ஒரு மில்லியன் அயரிய மக்கள் தம் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.[7]இதனால் அயர்லாந்து நாட்டின் மக்கள் தொகை 20-25% வீழ்ச்சியடைந்தது.[8]
தாக்கம்
[தொகு]அயர்லாந்தின் வரலாற்றில் பெரும் பஞ்சம் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.[9] அப்பஞ்சத்தின் விளைவாக, அயர்லாந்தின் மக்கள் தொகையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அந்நாட்டின் அரசியலில் அடிப்படையான திருப்பம் நிகழ்ந்தது. அயரிய கலாச்சாரத்திலும் ஆழ்ந்த தாக்கம் உண்டாயிற்று.
"பஞ்சத்திற்கு முந்திய காலம்", "பஞ்சத்திற்குப் பிந்திய காலம்" என்று அயரிய வரலாற்றைப் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு அந்த நிகழ்ச்சி அயரிய மக்களின் நினைவில் பதிந்துபோயிற்று.
பஞ்சத்தைத் தொடர்ந்து அயர்லாந்தில் தங்கியவர்களும் சரி, பிழைப்புக்காக வெளிநாடு பெயர்ந்தவர்களும் சரி, அயர்லாந்தின் பெரும் பஞ்சத்தைத் தங்கள் வரலாற்றின் முக்கியதொரு கட்டமாகக் கருதுகின்றார்கள்.[10]
பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் அயர்லாந்து நாடு "பிரித்தானிய மற்றும் அயரிய ஐக்கிய இராச்சியம்" (United Kingdom of Great Britain and Ireland) என்ற அரசியல் அமைப்பின் பகுதியாக இருந்தது. எனவே, அயரிய பெரும் பஞ்சம் அயரிய மக்களிடையே தேசிய உணர்வைத் தூண்டி எழுப்பி, அவர்கள் பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துக் குரல்கொடுக்க உந்துதல் அளித்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kinealy 1995, ப. xvi–ii.
- ↑ Ó Gráda 2002, ப. 7.
- ↑ Woodham-Smith 1991, ப. 19.
- ↑ Kinealy 1994, ப. xvi–ii, 2–3.
- ↑ MacManus 1979, ப. 458–459.
- ↑ Bourke, P. M. Austin (1960), "The Extent of the Potato Crop in Ireland at the time of the Famine" (PDF), Dublin: Journal of the Statistical and Social Inquiry Society of Ireland, Dublin, அயர்லாந்து: Statistical and Social Inquiry Society of Ireland, XX, Part III: 1–35, பன்னாட்டுத் தர தொடர் எண் 0081-4776, பார்க்கப்பட்ட நாள் 2011-04-10.
- ↑ Ross 2002, ப. 226.
- ↑ Kinealy 1994, ப. 357.
- ↑ Kinealy 1995, ப. xvii.
- ↑ Kinealy 1995, ப. 342.
ஆதாரங்கள்
[தொகு]- American University (1996), Irish Potato Famine and Trade, American University, பார்க்கப்பட்ட நாள் September 24, 2010
- Association of Medical Journal (1856), The Census of Ireland for the Year 1851. Part III. Report on the Status of Disease, BPP, 1854, lviii; part V, Tables of Deaths, vol. I, BPP, 1856, [2087-I], xxix, vol.II, 1856 [2087-II], xxx.
- Akay, Latifa (2012-01-29), Ottoman aid to the Irish to hit the big screen, Zaman, archived from the original on 2013-10-17, பார்க்கப்பட்ட நாள் 2012-05-04
- Aymaz, Abdullah (October–December 2007), Gratitude to the Ottomans, archived from the original on 2017-06-12, பார்க்கப்பட்ட நாள் 2012-05-04
{{citation}}
: Cite has empty unknown parameter:|7=
(help)CS1 maint: date format (link) - Blake, Robert (1967), Disraeli, University paperbacks, St. Martin's Press, LCCN 67011837
- Clark, Dennis (1982), "Dennis Clark: The Irish in Philadelphia", Temple University, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87722-227-4, archived from the original on ஜூன் 17, 2010, பார்க்கப்பட்ட நாள் September 24, 2010
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - Cousens, S. H (1960), Regional death rates in Ireland during the Great Famine from 1846 to 1851, Population Studies, vol. 14
- Corrigan, Sir Dominic (1846), On famine and fever as cause and effect in Ireland: with observations on hospital location, and the dispensation in outdoor relief of food and medicine, J. Fannin & Co.
- Doheny, Michael (1951), The Felon's Track, M.H. Gill & Son, LTD
- Ranelagh, John O'Beirne (2000), Fearful Realities: New Perspectives on the Famine, Chris Morash & Richard Hayes, Colourbooks Ltd, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7165-2566-6
- Donnelly, James S (2005), The Great Irish Potato Famine, Sutton Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7509-2632-5
- Donnelly, James S., Jr. (1995), Poirteir, Cathal (ed.), Mass Eviction and the Irish Famine: The Clearances Revisited", from The Great Irish Famine, Dublin, Ireland: Mercier Press
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - McDonald, Brian (2010), British fail to attend Famine ceremony, பார்க்கப்பட்ட நாள் September 24, 2010
- Medical Science (1849), Report upon the recent epidemic fever in Ireland, Dublin Quartly Journal of Medical Science [DQJMS], vol. vol. 7 (1849), 64–126, 340–404, vol. 8, 1–86, Medical Science, பார்க்கப்பட்ட நாள் September 24, 2010
{{citation}}
:|volume=
has extra text (help) - Mitchel, John (1869), The history of Ireland: from the Treaty of Limerick to the present time, James Duffy
- Duffy, Peter (2007), The Killing of Major Denis Mahon, HarperCollins, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-084050-1
- Duffy, Sir Charles Gavan (1888), Four Years of Irish History 1845–1849, Cassell, Petter, Galpin & Co
- EMILE (2000), Early Emigrant Letter Stories, பார்க்கப்பட்ட நாள் September 20, 2010
- Foster, R.F (1988), Modern Ireland 1600-1972, Penguin Group
- Gallagher, Thomas (1987), Paddy's Lament, Ireland 1846-1847: Prelude to Hatred, Houghton Mifflin Harcourt, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-15-670700-8, பார்க்கப்பட்ட நாள் September 24, 2010
- Gash, Norman (1961), Mr. Secretary Peel: The Life of Sir Robert Peel to 1830, London: Longmans
- Ghabhann, Gillian Ní (1997), A Critical Examination of a selection of travel writing produced during the Great Famine, Cork
- Black '47 and Beyond: The Great Irish Famine in History, Economy, and Memory, Princeton University Press, 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-07015-5, பார்க்கப்பட்ட நாள் September 2, 2010
- Gray, Peter (1995), The Irish Famine, London: Thames and Hudson
- Gray, Peter (1995), The Irish Famine, Discoveries, New York: Harry N. Abrams, Inc
- Hayden, Tom (1998), Hayden, Tom; O'Connor, Garrett; Harty, Patricia (eds.), Irish hunger: personal reflections on the legacy of the famine, Roberts Rinehart Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57098-233-0
- History of Ireland (2008), History Ireland, Volume, vol. 16, archived from the original on 2013-03-20, பார்க்கப்பட்ட நாள் 2012-05-04
- Irish Famine Curriculum Committee (1998), The Great Irish Famine, பார்க்கப்பட்ட நாள் September 21, 2010
- Kee, Robert (1993), The Laurel and the Ivy: The Story of Charles Stewart Parnell and Irish Nationalism, Hamish Hamilton, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-241-12858-9
- Kennedy, Henry (1847), Observations on the connexion between famine and fever in Ireland, and elsewhere, Hodges and Smith
- Kennedy, Liam; Ell, Paul S; Crawford, E. M; Clarkson, L. A (1999), Mapping The Great Irish Famine, Four Courts Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85182-353-0
- Killen, Richard (2003), Gill and Macmillan Ltd
{{citation}}
: Missing or empty|title=
(help); Unknown parameter|unused_data=
ignored (help) - Killen, John (1995), The Famine decade, contemporary accounts 1841-1851, Blackstaff
- Kinealy, Christine (1995), This Great Calamity: The Irish Famine 1845-52, Gill & Macmillan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57098-034-9
- Kinealy, Christine (1994), This Great Calamity, Gill & Macmillan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7171-4011-3
- Laxton, Edward (1997), The Famine Ships: The Irish Exodus to America 1846-51, Bloomsbury, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7475-3500-0
- Lee, Joseph (1973), The Modernisation of Irish Society, Gill and Macmillan
- Lengel, Edward G. (2002), The Irish through British eyes: perceptions of Ireland in the Famine era, Greenwood Publishing Group, pp. 12, 48, 104, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-275-97634-7
- Levi-Bacci, M (1991), 'Population and nutrition: an essay on European demographic history, Cambridge
- Library of Congress (2007), Irish immigration to America, archived from the original on மார்ச் 15, 2011, பார்க்கப்பட்ட நாள் September 20, 2010
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - Litton, Helen (1994), The Irish Famine: An Illustrated History, Wolfhound Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86327-912-0
- Litton, Helen (2006), The Irish Famine: An Illustrated History, Wolfhound Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86327-912-0
- Lyons, Francis Stewart Leland (1973), Ireland since the famine, Fontana
- McCorkell, John (2010), McCorkell Line, பார்க்கப்பட்ட நாள் September 20, 2010
- MacArthur, Sir William Porter; Edwards, R. Dudley (Robert Dudley); Williams, Thomas Desmond (1957), Medical history of the famine, Russell & Russell
- MacManus, Seamus (1979), The Story of the Irish Race, The Irish Publishing Company, பார்க்கப்பட்ட நாள் September 20, 2010
- Makyr, Joel (1983), Why Ireland staved, A quantitative and analytical history of the Irish economy 1800–1850
- Mitchel, John (2005), Last Conquest of Ireland (Perhaps), Lynch, Cole & Meehan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-904558-36-4
- Mitchel, John (1996), Jail Journal of Five Years in British Prisons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1 85477 218
{{citation}}
: Check|isbn=
value: length (help) - Ó Gráda, Cormac (1993), Ireland before and after the Famine, explorations in economic history, Manchester, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 18001925
{{citation}}
: Check|isbn=
value: length (help) - Ó Gráda, C. (1975), A Note on Nineteenth Emigration Statistics, Population Studies, vol. Vol. 29
{{citation}}
:|volume=
has extra text (help) - Ó Gráda, Cormac (2006), Ireland's Great Famine: Interdisciplinary Perspectives, Dublin Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-904558-57-6
- O'Neill, Joseph R. (2009), The Irish Potato Famine, ABDO, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60453-514-3
- O'Sullivan, T. F (1945), Young Ireland, The Kerryman Ltd.
- Paddock, W. C (1992), Our Last Chance to Win the War on Hunger
- Póirtéir, Cathal (1995), The Great Irish Famine, RTÉ/Mercier Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85635-111-4
- Rifkin, Jeremy (1993), Beyond Beef, Plume, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-452-26952-1
- The History Place (2000), Irish Potato Famine Coffin Ships Coffin Ships
{{citation}}
: Check|url=
value (help) - TheShipList (2007), Passenger List - Agnes, Cork Ireland to Quebec, 1847, archived from the original on பிப்ரவரி 10, 2012, பார்க்கப்பட்ட நாள் September 20, 2010
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - The Register Office (2005), History, பார்க்கப்பட்ட நாள் September 21, 2010
- Trevelyan, Charles E (1848), The Irish Crisis, London
- Ross, David (2002), Ireland: History of a Nation, New Lanark: Geddes & Grosset, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84205-164-4
- The Nation Newspaper (November 1, 1884),
{{citation}}
: Missing or empty|title=
(help) - The Nation Newspaper (1846),
{{citation}}
: Missing or empty|title=
(help) - Sen, Amartya (2001), Farrukh Iqbal; Jong-Il You (eds.), Democracy, market economics, and development: an Asian perspective, World Bank Publications, pp. 12–14, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8213-4862-8
- Shaw, George Bernard (1903), "Act IV", Man and Superman
- Society of Friends. Central Relief Committee (1852), Transactions of the Central Relief Committee of the Society of Friends during the Famine in Ireland in 1846 and 1847, Dublin
- Uris, Jill; Uris, Leon (2003), Ireland: Terrible Beauty, Bantam Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-553-01381-8
- Vaughan, W.E; Fitzpatrick, A.J (1978), W. E. Vaughan; A. J. Fitzpatrick (eds.), Irish Historical Statistics, Population, 1821/1971, Royal Irish Academy
- Ward, Mike (2002), Irish Repay Choctaw Famine Gift:March Traces Trail of Tears in Trek for Somalian Relief, American-Stateman Capitol, archived from the original on மே 11, 2011, பார்க்கப்பட்ட நாள் September 20, 2010
- Woodham-Smith, Cecil (1962), The Great Hunger
- Woodham-Smith, Cecil (1991), The Great Hunger
- Webb, Alfred (1868), Unpublished Biography
- Woodham-Smith, Cecil (1964), The Great Hunger: Ireland 1845-1849, Signet: New York
- Wilde, Jane, The 1851 Census
மேல் ஆய்வுக்கு
[தொகு]- Mary E. Daly, The Famine in Ireland
- R. Dudley Edwards and T. Desmond Williams (eds.), The Great Famine: Studies in Irish history 1845-52
- Peter Gray, The Irish Famine
- Joseph O'Connor, Star of the Sea
- Cormac Ó Gráda, An Economic History of Ireland
- Robert Kee, Ireland: A History (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-349-10678-9)
- Christine Kinealy, This Great Calamity: The Irish Famine 1845 - 1852, history.ac.uk
- John Mitchel, The Last Conquest of Ireland (1861) (University College Dublin Press reprint, 2005 paperback) ISBN I-904558-36-4
- Marita Conlon-McKenna, Under the Hawthorn Tree
- Canon John O'Rourke, The Great Irish Famine (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85390-049-4 Hardback) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85390-130-X Paperback) Veritas Publications 1989. First published in 1874.
- Liam O'Flaherty, Famine
- Colm Tóibín and Diarmaid Ferriter, The Irish Famine, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86197-249-1 (first edition, hardback)
- Kevin Baker, Paradise Alley
- Several books by Young Irelanders make reference to the Great Irish Famine
வெளி இணைப்புகள்
[தொகு]- New Jersey Commission on Holocaust Education 1996
- The History of the Irish Famine by Rev. John O'Rourke
- Irish National Archives information on the Famine
- Quinnipiac University's An Gorta Mor site - includes etexts பரணிடப்பட்டது 2005-11-03 at the வந்தவழி இயந்திரம்
- Ireland's Great Famine பரணிடப்பட்டது 2008-11-22 at the வந்தவழி இயந்திரம் (Cormac Ó Gráda) from EH.Net Encyclopedia of Economic History
- Irishholocaust.org
- American.edu, History
- Ireland: The hunger years 1845-1851 பரணிடப்பட்டது 2012-02-07 at the வந்தவழி இயந்திரம்
- Kids History Website about the Famine பரணிடப்பட்டது 2008-12-06 at the வந்தவழி இயந்திரம்
- Hunger on Trial: An Activity on the Irish Potato Famine and Its Meaning for Today A free downloadable lesson for high school social studies classrooms from the Zinn Education Project.
- Cork Multitext Project article on the Famine, by Donnchadh Ó Corráin
- For more on the pathogen see bobit.botany.wisc.edu
- Karp, Ivan. Museum Frictions: Public Cultures/Global Transformations. books.google.com
- Seamus P. Metress, Richard A. Rajner. The Great Starvation: An Irish Holocaust. books.google.com
- Books.google.com
- Irish Repay Choctaw Famine Gift:March Traces Trail of Tears in Trek for Somalian Relief பரணிடப்பட்டது 2007-10-25 at the வந்தவழி இயந்திரம்
- President of Ireland Mary Robinson Addresses the Choctaw People பரணிடப்பட்டது 2009-02-07 at the வந்தவழி இயந்திரம்
- Views of the Famine
- Sligoheritage.com, Famine on the Gore-Booth and Palmerston estates in Sligo, Ireland
- The Famine in Doon co.Limerick
- What Caused the Irish Potato Famine?
- Genome of Irish potato famine pathogen decoded, physorg.com]