சாபி அப்டால்
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ; டத்தோ ஸ்ரீ பாங்லிமா சாபி அப்டால் Yang Berhormat YB Tuan Shafie Apdal | |
---|---|
15-ஆவது சபா முதலமைச்சர் | |
பதவியில் 12 மே 2018 – 29 செப்டம்பர் 2020 | |
மலேசிய தகவல் அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் | |
பதவியில் 1995–1999 | |
மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு துணை அமைச்சர் | |
பதவியில் 1999–1999 | |
மலேசிய தற்காப்பு துணை அமைச்சர் | |
பதவியில் 1999–2004 | |
மலேசிய உள்நாட்டு வணிகம் வாழ்க்கைச் செலவு அமைச்சர் | |
பதவியில் 2004–2008 | |
மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் | |
பதவியில் 2008–2009 | |
மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சர் | |
பதவியில் 2009–2015 | |
மக்களவை (மலேசியா) பாரிசான் நேசனல் வாரிசான் | |
பதவியில் 1995–2016 | |
சபா மாநில சட்டமன்றம் வாரிசான் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | Mohd. Shafie bin Apdal 20 அக்டோபர் 1956 செம்பூர்ணா, பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (இப்போது சபா, மலேசியா) |
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | ஐக்கிய சபா தேசிய அமைப்பு (USNO) (1983–1995) அம்னோ (UMNO) (1995–2016) வாரிசான் தலைவர் (2016 தொடக்கம்) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரிசான் நேசனல் (BN) (1983-2016) பாக்காத்தான் அரப்பான் (PH) (2016 தொடக்கம்) |
துணைவர் | சுரியானி சுவாய்ப் Shuryani Shuaib |
பிள்ளைகள் | 6 |
கல்வி | சபா கல்லூரி கோத்தா கினபாலு விக்டோரியா கல்விக்கழகம் |
முன்னாள் கல்லூரி | இசுடாபோர்ட்சயர் பல்கலைக்கழகம், லண்டன் (பொருளாதாரத்தில் இளங்கலை) |
வேலை | அரசியல்வாதி |
கையெழுத்து | |
டத்தோ ஸ்ரீ பாங்லிமா சாபி அப்டால் (ஆங்கிலம்; மலாய்: Mohd Shafie bin Apdal; சீனம்: 赛夫丁纳苏迪安; சாவி: محمد ساڤي بن أفضل; (பிறப்பு: 20 அக்டோபர் 1956) என்பவர் 2018 மே மாதம் முதல் 2020 செப்டம்பர் மாதம் வரை மலேசியா, சபா மாநிலத்தின் 15-ஆவது சபா முதலமைச்சர் பதவி வகித்தவர் ஆகும்.
சபா மாநிலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு 2016 அக்டோபர் 17-ஆம் தேதி சபா பாரம்பரிய கட்சி (ஆங்கிலம்: Sabah Heritage Party மலாய்: Parti Warisan Sabah) எனும் கட்சியை சாபி அப்டால் உருவாக்கினார். அந்தக் கட்சியின் தலைவராக தலைமை தாங்கி வருகிறார்.
1995-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து சபா, செம்பூர்ணா மக்களவைத் தொகுதியின் (Semporna Federal Constituency) மலேசிய மக்களவை உறுப்பினராக (MP) பொறுப்பு வகிக்கும் இவர் மலேசிய அமைச்சரவையில் பல்வேறு அமைச்சுகளிலும் பணியாற்றியவர் ஆவார்.
பொது
மலேசிய நாடாளுமன்றம்; மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் ஆகியவற்றில் சாபி அப்டால் வகித்த பதவிகள்:
சபா முதலமைச்சர் பதவி
- 2018 மே 12-ஆம் தேதி தொடங்கி 2020 செப்டம்பர் 29-ஆம் தேதி வரையில் 15-ஆவது சபா முதலமைச்சர் (Chief Minister of Sabah)[1]
நாடாளுமன்றச் செயலாளர் பதவி
- 1995 தொடங்கி 1999 வரையில் தகவல் அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் (Parliamentary Secretary of Ministry of Information)
துணை அமைச்சர் பதவிகள்
- 1999-இல் மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சின் துணை அமைச்சர் (Deputy Minister of Housing and Local Government)
- 1999 தொடங்கி 2004 வரையில் மலேசிய தற்காப்பு அமைச்சின் துணை அமைச்சர் (Deputy Minister of Defence)
அமைச்சர் பதவிகள்
- 2004 தொடங்கி 2008 வரையில் மலேசிய உள்நாட்டு வணிகம் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர் (Minister of Domestic Trade and Consumerism)
- 2008 தொடங்கி 2009 வரையில் மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர் (Minister of National Unity, Arts, Culture and Heritage)
- 2009 தொடங்கி 2015 வரையில் மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சர் (Minister of Rural and Regional Development)
மலேசிய மக்களவை
- 1995 ஏப்ரல் தொடங்கி 2023 வரையில் சபா மாநிலத்தின் செம்பூர்ணா மக்களவைத் தொகுதி (Semporna Federal Constituency) மலேசிய மக்களவை உறுப்பினர் (MP)
சபா மாநில சட்டமன்றம்
- 2018 மே மாதம் தொடங்கி 2023 வரையில் சபா மாநிலத்தின் சபா மாநில சட்டமன்றத்தின் (Sabah State Legislative Assembly) செனாலாங் (Senallang State Constituency) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் (MLA)
வாழ்க்கை வரலாறு
முகமது சாபி அப்டால் 1956-ஆம் ஆண்டு மலேசியா, சபா, செம்பூர்ணா மாவட்டம், செம்பூர்ணாவில் (Semporna) பஜாவு மக்கள் (Bajau) வம்சாவளி குடும்பத்தில் பிறந்தார். சபாவின் எட்டாவது முதலமைச்சராகவும்; அதன் முன்னாள் ஆளுநராகவும் இருந்த சக்காரான் டன்டாய் (Sakaran Dandai) என்பவரின் ஒன்றுவிட்ட மகன் (Nephew) ஆவார்.[2]
சாபி அப்டால் தன் இடைநிலைக் கல்வியை கோலாலம்பூரில் உள்ள விக்டோரியா கல்விக் கழகத்தில் (Victoria Institution) முடித்தார். மேலும் தன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை கோத்தா கினபாலுவில் உள்ள சபா கல்லூரியில் பயின்றார். பின்னர் லண்டன் வணிகக் கல்லூரியில் (London Business College) கப்பல் மேலாண்மைத் துறையில் பட்டயம் படிப்பைப் பெற்றார். 1992 இல், இங்கிலாந்தின் இசுடாபோர்ட்சயர் பல்கலைக்கழகத்தில் (Staffordshire University), பொருளாதாரத்தில் இளங்கலை பெற்றார்.
அரசியல்
சாபி அப்டால் தன் அரசியல் வாழ்க்கையை ஐக்கிய சபா தேசிய அமைப்பு கட்சியின் (USNO) மூலம் தொடங்கினார். அந்தக் கட்சி 1994-இல் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் சாபி அப்டால் அம்னோவில் இணைந்தார்.
1995-இல் அவர் செம்பூர்ணா மக்களவைத் தொகுதி (Semporna Federal Constituency) அம்னோ உறுப்பினராக மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
விருதுகள்
மலேசிய விருதுகள்
- மலாக்கா :
- சபா மாநில ஆளுநர் விருது (SPDK) - Datuk Seri Panglima (2011)[6]
மேற்கோள்கள்
- ↑ "Shafie to hold Finance Minister post temporarily". The Borneo Post. 18 May 2018. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
- ↑ "Sokong saya bukan kerana saya orang Bajau - Shafie Apdal". Astro AWANI. 17 November 2018. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
- ↑ "Pahang royalty heads state honours list". The Star (Malaysia). https://www.thestar.com.my/news/nation/2003/10/25/pahang-royalty-heads-state-honours-list.
- ↑ "Datuk Seri title for Perlis MB". Bernama. The Star (Malaysia). 17 May 2008. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
- ↑ "Highest state award for eight". Sandra Sokial. Borneo Post. 1 October 2011. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
- ↑ "Highest state award for eight". Sandra Sokial. Borneo Post. 1 October 2011. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
- ↑ "Implementation of project to be expedited". Marilyn Ten. Borneo Post. 3 December 2014. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
மேலும் காண்க
- செம்பூர்ணா
- செம்பூர்ணா மாவட்டம்
- செம்பூர்ணா மக்களவைத் தொகுதி
- பஜாவு மக்கள்
- மலேசிய தேர்தல் தொகுதிகள்
- சபா முதலமைச்சர்
வெளி இணைப்புகள்
- பொதுவகத்தில் Shafie Apdal தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- முகநூலில் சாபி அப்டால்