உள்ளடக்கத்துக்குச் செல்

பணம்

விக்கிமேற்கோள் இலிருந்து
இரு குன்றுகளுக்கிடையே கோவிலும் யானையும் பதித்த பாண்டியக் காசு, 1வது நூற்றாண்டு, இலங்கை, பிரித்தானிய அருங்காட்சியகம்

பணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும், கடன்களைத் திருப்பித்தரவும் ஈடான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • பணம் அல்லது உலகில் உள்ள மற்ற செல்வங்களுள் எதாவது மனித சமுதாயத்தின் மேம்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்குமா என்பது சந்தேகமே. வேண்டுமானால் சில விதிவிலக்குகள் இருக்கலாம். பணம் மனிதனுக்குரிய சுயநலப்பற்றையும், தீய குணத்தையும், அலட்சியப் போக்கையும் தரக்கூடியதாக இருக்கக்கூடும். ஆனால், பணம் மட்டுமே சகலவிதமான நன்மைகனை நல்கும் என்று நம்புவதற்கு இல்லை. -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்[1]
  • பணம் தன்னிடம் ஆசையைப் பிறப்பிக்கும் முன் அதைப் பிறர்க்கு உதவ ஆரம்பித்துவிடு. -ப்ரெளண்[2]
  • பணத்திற்கு நீ தலைவனாக இருந்தால் அதை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துவாய். அதற்கு நீ அடிமையாக இருந்தால் அது உன்னை தீய செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும். -ஆப்பிரிக்கப் பாதிரியார்.
  • பணமே வாழ்வின் லட்சியமானால் அது தீய வழியிலேயே தேடவும் செலவிடவும் படும். இருவிதத்திலும் வாழ்வு பாழே.-ரஸ்கின்[3]
  • கற்றோரும், அறிஞரும், வீரரும் பணத்தை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுதல் என்பது ஒருநாளும் முடியாத காரியம் -ரஸ்கின்[3]
  • பணத்தைத் தீயவழியில் இழப்பது குற்றம். ஆனால் தீயவழியில் தேடுவது அதைவிடப் பெரிய குற்றம். தீயவழியில் செலவிடுவதோ எல்லாவற்றிலும் பெரிய குற்றம். -ரஸ்கின்[3]
  • பணத்தை வீணாக அழிப்பதைவிட பணத்தில் பேராசை வைப்பதே மனிதனை நாசமாகச் செய்யும். -கோல்டன்[3]
  • பணத்தை மட்டும் தரும் தொழில்களைச் செய்தால், உண்மையில் சோம்பலாயிருத்தல் அல்லது அதற்குங்கீழாயிருத்தலேயாகும். -தோரோ[3]
  • பணம் தேடுவது ஒரு பெரிய காரியந்தான். ஆனால், அதைவிடப் பெரிய காரியம் ஒன்று உளது. அது யாதெனில் தேடிய பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதே. -டிஸ்ரேலி[3]
  • இழிஞன் ஏராளமாய்ப் பணம் படைத்திருப்பது இறைவன் ஒழுங்குமுறைக்கு இழுக்கன்றோ? இம்மியும் இழுக்கன்று. இழிஞன் அந்த லட்சியத்துக்காகவே தன்னை இழிஞன் ஆக்கிக்கொண்டான். அவன் அதற்காகவே ஆரோக்கியம், மனச்சான்று, சுதந்திரம் எல்லாம் இழந்துளான். அவற்றைக் கொடுத்துப் பணம் ல்ாங்கிக் கொண்டதற்காக நாம் பொறாமைப்படலாமோ? -பார்பால்ட்[3]
  • ஒருவன் பணத்தைத் தன் தேவைக்கு அதிகமாகத் தேடவும் தனவந்தன் என்ற பெயரோடு சாகவும் விரும்பினால், அது அவனுக்கும் அவன் சந்ததியார்க்கும் சாபமாகவே முடியும். - ரஸ்கின்[3]
  • பணம் தேடுவது முட்டாளுக்கு முடியும். ஆனால், அதைச் செலவு செய்வது அறிஞருக்குத்தான் தெரியும். அநேகர் கையிலுள்ள பணம் தீரப்போகும் பொழுதுதான் அதைச் சிக்கனமாகச் செலவு செய்ய ஆரம்பிப்பர். அது போல் தான் அநேகர் நேரத்தைச் செலவு செய்வதிலும். -கதே[3]
  • சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தையே. -கோல்ட்டன்[3]
  • எந்த மனிதனும் யோக்கியமான முறையில் வாழ்வதற்கு வேண்டிய பணத்தைத் தேடமுடியுமே யன்றி ஏராளமான பணத்தைக் குவித்து விட முடியாது. -ரஸ்கின்[3]
  • பணம் வாழ்வின் லட்சியமாக ஆகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்; தவறான வழியிலே தான் செலவழிக்கப்படும். அது தேடும்பொழுதும் செலவு செய்யும்பொழுதும் தீமையே பயக்கும். - ரஸ்கின்[3]
  • தேவைக்குப் போதுமான பணமிருந்தும் செல்வன் என்ற பெயருடன் சாக விரும்பிப் பணத்தைத் தேடுபவன் பணத்தையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டவன் ஆவான். -ரஸ்கின்[3]
  • கையிலிருக்கும் பணம் அலாவுதீனுடைய விளக்கைப் போன்றது. -பைரன்[4]
  • பணம் சமூகத்தின் ஜீவாதாரமான உதிரம். - ஸ்விஃப்ட்[4]
  • பணம். பணத்தைப் பெறும் அதன் குட்டிகளும் பணம் பெறும். இவ்வாறு சேர்ந்துகொண்டேயிருக்கும். -ஃபிராங்க்லின்[4]
  • பணம் உரத்தைப் போன்றது. அதை நன்றாகச் சிதறுவதைத் தவிர அதனால் வேறு பயனில்லை. -பேக்கன்[4]
  • முடிந்த அளவுக்குத் தேடு. முடிந்த அளவுக்குச் சேமித்துவை, முடிந்த அளவுக்குச் செலவழி. -ஜே. வெஸ்லி[4]
  • பணம், அடித்தளம் தெரியாத ஒரு கடல், அதில் கௌரவம், மனச்சாட்சி, உண்மை ஆகியவையெல்லாம் மூழ்கிவிடக்கூடும். -கோஸ்லே[4]
  • பணத்தை மட்டும் தரும் தொழில்களைச் செய்தால், உண்மையில் சோம்பலாயிருத்தல் அல்லது அதற்குங்கீழாயிருத்தலேயாகும். -தோரோ[3]
  • ஆன்மாவுக்குத் தேவையான ஒன்றை வாங்கக்கூடப் பணம் தேவையில்லை. -தோரோ[4]
  • பணத்தை இழித்து வெறுப்பது. ஓர் அரசனை அரியணையிலிருந்து இறக்குவது போன்றது. - சாம்ஃபோர்ட்[4]
  • உன் நம்பிக்கையைப் பணத்தின்மீது வைக்காதே பணத்தை நம்பிக்கையான இடத்தில் வைத்துவிடு. -ஹோம்ஸ்[4]
  • பணம் நல்ல பணியாள்; ஆனால், மோசமான எசமானன். -டி. பௌஹர்ஸ்[4]

பழமொழிகள்

[தொகு]
  • பணத்தை விட உயர்ந்தவை பலவுள. ஆனால் அவற்றைப் பெறப் பணமே தேவை. -பழமொழி[3]
  • பணம் பத்தும் செய்யும்
  • பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

மேற்கோள்கள்

[தொகு]
  1. என். வி. கலைமணி (1999). ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 9-41. பாரதி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
  2. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஈகை. நூல் 141-143. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 252-253. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் பணம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பணம்&oldid=22196" இலிருந்து மீள்விக்கப்பட்டது