2-ஆம் நூற்றாண்டு
ஆயிரமாண்டுகள்: | 1-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு - 3-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 100கள் 110கள் 120கள் 130கள் 140கள் 150கள் 160கள் 170கள் 180கள் 190கள் |
2ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 101 தொடக்கம் கிபி 199 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.
இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரோமப் பேரரசு அதன் பேரரசன் திராசானின் ஆட்சியின் கீழ் மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டிருந்தது. ஆனாலும் திராசானின் மறைவிற்குப் பின்னர் (117) அதன் மிகுதியான வரலாறு வெறுமனே ஆட்சியைக் காப்பாற்றும் வகையிலான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டிருந்தது. இக்காலப்பகுதியில் ஏட்ரியன் என்பவனின் ஆட்சியில் ஜெருசலேமில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் மார்க்கசு அவுரேலியசு என்ற ரோமப் பேரரசனின் இறப்புக்குப் பின்னர் அமைதி மற்றும் செழுமையான காலப்பகுதி மறைய ஆரம்பித்தது.
சீனா கான் வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து இருந்து வந்தது. இந்நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் நடு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தைப் பரவலாக்கியது. ஆனாலும் இரண்டாம் அரைப்பகுதியில் ஊழல், மற்றும் கிளர்ச்சி காரணமாக இவ்வாட்சி ஆட்டம் காணத் தொடங்கியது. முடிவில் கிபி 220 ஆம் ஆண்டில் ஹான் ஆட்சி முடிவுக்கு வந்தது.
நிகழ்வுகள்
[தொகு]- 96 – 180: ரோமப் பேரரசை ஐந்து சிறந்த பேரரசர்கள் (நேர்வா, திராசான், ஏட்ரியன், அந்தோனியசு பயசு, மார்கசு அவுரேலியசு) ஆட்சி புரிந்தார்கள்.
- ஆக்சம் இராச்சியம் (எதியோப்பியாவில்) உருவானது.
- 122 – 132: பிரித்தானியாவுக்குக் குறுக்கே ஏட்ரியனின் சுவர் கட்டப்பட்டது.
- 132 – 135: ரோமப் பேரரசுக்கு எதிராக யூதர்களின் கிளர்ச்சி
- 144: ரோம் தேவாலயத்திற்கெதிராக மார்க்கியோனிசம் உருவானது.
- 184 – 205: சீனாவில் கான் பேரரசுக்கு எதிராக கிளர்ச்சி
கண்டுபிடிப்புகள்
[தொகு]- சீனா பத்திரிகைத் தாளைக் கண்டுபிடித்தது (105)
- தொலெமி கண்ணுக்குத் தெரியக்கூடிய விண்மீன்களின் தொகுப்பை எழுதினார்.
- 132: நிலநடுக்கத்தின் திசையைக் கண்டறியும் கருவியை முதன் முதலாக சீனர்கள் கண்டுபிடித்தனர்.
- யுனானி மருத்துவம் அறிமுகம்
வேறு
[தொகு]- பதிற்றுப்பத்து நூல் எழுதப்பட்டது.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- புளூட்டாக், (கிபி 46 - கிபி 120)
- தொலெமி (கிபி 90 - 168)