முப்புளோரோநைத்திரசோமெத்தேன்
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
முப்புளோரோ(நைத்திரசோ)மெத்தேன் | |
வேறு பெயர்கள்
முப்புளோரோ-நைத்திரசோமெத்தேன்
முப்புளோரோ-நைத்திரசோ-மெத்தேன் நைத்திரசோமுப்புளோரோமெத்தேன் | |
இனங்காட்டிகள் | |
334-99-6 | |
ChemSpider | 60949 |
EC number | 206-383-2 |
InChI
| |
பப்கெம் | 67630 |
பண்புகள் | |
CF3NO | |
வாய்ப்பாட்டு எடை | 99.01 g·mol−1 |
தோற்றம் | ஆழ்ந்த நீல நிற வளிமம் ஊதா நிறத் திண்மம் |
உருகுநிலை | −196.6 °C (−321.9 °F; 76.5 K) |
கொதிநிலை | −85 °C (−121 °F; 188 K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
முப்புளோரோநைத்திரசோமெத்தேன் (Trifluoronitrosomethane) CF3NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நச்சு வேதிப்பொருளான இதில் முப்புளோரோமெத்தில் குழுவானது நைட்ரசோ குழுவுடன் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டிருக்கும். முப்புளோரோநைத்திரசோமெத்தேனின் தனித்துவமான ஆழ்ந்த நீல நிறம் வாயுக்களில் அசாதாரணமான நிறமாகும்.
வரலாறு
[தொகு]முப்புளோரோநைத்திரசோமெத்தேன் முதன் முதலில் 1936 ஆம் ஆண்டு ஓட்டோ ரஃப் மற்றும் மன்ஃபிரெட்டு கீசு ஆகியோரால் போலந்து நாட்டின் உரோக்லா பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்டது. [1] வெள்ளி நைட்ரேட்டு மற்றும் வெள்ளி ஆக்சைடு முன்னிலையில் வெள்ளி சயனைடை புளோரினேற்றம் செய்து அப்போது இதை உருவாக்கினர்.
தயாரிப்பு
[தொகு]சாதாரண அழுத்தத்தில் புற ஊதா ஒளியில் முப்புளோரோ அயோடோமெத்தேனுடன் நைட்ரிக் ஆக்சைடைச் சேர்த்து முப்புளோரோநைத்திரசோமெத்தேன் பெருமளவில் கிட்டத்தட்ட 90 சதவீதம் அளவிற்கு தயாரிக்கமுடியும். இவ்வினைக்கு வினையூக்கியாக சிறிதளவு பாதரசம் தேவைப்படுகிறது. வினையின் விளைவாக அயோடின் ஓர் உடன் விளைபொருளாக உருவாகிறது. [2][3][4]
பண்புகள்
[தொகு]முப்புளோரோநைத்திரசோமெத்தேன் அடர் நீல நிறத்திலான ஒரு வாயுவாகும். [5] புளோரின் பதிலீடுகள் காரணமாக இச்சேர்மம் இயக்க ரீதியாக ஓரளவு நிலைத்தன்மையுடன் இருந்தாலும், மற்ற நைட்ரோசோ சேர்மங்களைப் போலவே முப்புளோரோநைத்திரசோமெத்தேன் பலவீனமான 39.9 கிலோகலோரி/மோல் மட்டுமே C-N பிணைப்பைக் கொண்டுள்ளது. [6]
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Otto Ruff; Giese, Manfred (1936). "Das Trifluor-nitroso-methan, CF3.NO (III.)". Ber Dtsch Chem Ges 69 (4): 684–689. doi:10.1002/cber.19360690411.
- ↑ Senning, Alexander (1964). "N-, 0-, and S-trihalomethyl compounds". Chemical Reviews 65 (4): 385–412. doi:10.1021/cr60236a001.
- ↑ Taylor, C. W.; Brice, T. J.; Wear, R. L. (1962). "The Preparation of Polyfluoronitrosoalkanes from Nitrosyl Polyfluoroacylates". Journal of Organic Chemistry 27 (3): 1064–1066. doi:10.1021/jo01050a523.
- ↑ Park, J. D.; Rosser, R. W.; Lacher, J. R. (1962). "Preparation of Perfluoronitrosoalkanes. Reaction of Trifluoroacetic Anhydride with Nitrosyl Chloride". Journal of Organic Chemistry 27 (4): 1642. doi:10.1021/jo01051a519.
- ↑ Griffin, C. E.; Haszeldine, R. N. (1960). "279. Perfluoroalkyl derivatives of nitrogen. Part VIII. Trifluoronitrosoethylene and its polymers". Journal of the Chemical Society (Resumed): 1398–1406. doi:10.1039/JR9600001398.
- ↑ Luo, Yu-Ran (2007). Comprehensive Handbook of Chemical Bond Energies. Boca Raton, Fl.: CRC Press. p. 406. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-7366-4.
புற இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் முப்புளோரோநைத்திரசோமெத்தேன் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.