உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் சிலுவைப்போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் சிலுவைப்போர்
சிலுவைப் போர்கள் பகுதி
14th-century miniature of Peter the Hermit leading the People's Crusade
கெர்மிட்டின் பீட்டர் மக்கள் சிலுவைப் போரை வழிநடத்தியது ஓவியம் (14 ஆம் நூற்றாண்டு)
நாள் 15 ஆகத்து 1096 – 12 ஆகத்து 1099[upper-alpha 1]
இடம் லெவண்ட், அனத்தோலியா
சிலுவைப்போர் வீரர்களின் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
* நைசியாக் கைப்பற்றுவதில் சிலுவைப் போர் உதவுகிறது. மேற்கு அனடோலியாவின் பெரும்பகுதியை பைசாந்தியப் பேரரசு மீட்டெடுக்கிறது.
பிரிவினர்
சிலுவைப்போர் படைகள்
புனித-கில்லெசின் உரேமண்ட் இராணுவம்
காட்ஃப்ரே இராணுவம்
ரொபர்ட் கர்தோசின் இராணுவம்
இரண்டாம் பிளாண்டர்சின் ரொபர்ட் இராணுவம்
ஹக் இராணுவம்
டராண்டோவின் போகெமண்டின் இராணுவம்
மக்கள் சிலுவைப்போர் படைகள்
பைசாந்தியப் பேரரசு
முஸ்லிம் நாடுகள்
செல்யூக் பேரரசு
உரூம் சுல்தானகம்
டேனிசுமென்ட்சு
பாத்திம கலீபகம்
பலம்
சிலுவைப்போர் வீரர்
கணக்கீடு 130,000 to 160,000[1]
* 80,000 - 120,000 காலாட்படை
* 17,000 - 30,000 வீரத்திருத்தகை
முஸ்லிம்கள்
தெரியவில்லை
இழப்புகள்
மிதமான அல்லது கனமான (மதிப்பீடுகள் மாறுபடும்) மிகவும் கனமானது

முதலாம் சிலுவைப்போர் (1096–1099) என்பது சமயப் போர்கள் அல்லது சிலுவைப் போர்களில் முதன்மையானது ஆகும். இது இடைக்காலத்தில் இலத்தீன் திருச்சபையால் தொடங்கப்பட்டடும் ஆதரிக்கப்பட்டடும் சில நேரங்களில் அதனால் இயக்கப்பட்டதுமாகும். இஸ்லாமிய ஆட்சியில் இருந்து புனித பூமியை மீட்பதே அதன் நோக்கமாக இருந்தது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எருசலேம் முஸ்லீம் ஆட்சியின் கீழ் இருந்தபோது, 11 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியின் செல்யூக் பேரரசு கட்டுப்படுத்தல் உள்ளூர் கிறிஸ்தவ மக்களையும், மேற்கிலிருந்த யாத்திரைகளையும், பைசாந்தியப் பேரரசையும் அச்சுறுத்தியது. முதல் சிலுவைப்போருக்கான ஆரம்ப முயற்சி 1095 இல் தொடங்கியது. பைசாந்திய பேரரசர் முதலாம் அலெக்ஸியோஸ் கொம்னெனோஸ், செல்யூக் தலைமையிலான துருக்கியர்களுக்கு எதிராக பியாசென்சா சபையிடம் இருந்து இராணுவ ஆதரவைக் கோரினார். இது ஆண்டின் பிற்பகுதியில் கிளெர்மான்ட் சபையால் பின்பற்றப்பட்டது. இதன் போது திருத்தந்தை இரண்டாம் அர்பன் இராணுவ உதவிக்கான பைசாந்திய கோரிக்கையை ஆதரித்தார். அத்துடன் விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களை எருசலேமுக்கு ஆயுதம் ஏந்திய யாத்திரை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

குறிப்புகள்

[தொகு]
  1. Pope Urban II established the Feast of Assumption (15 August 1096) as the official start date of the holy war, but the forces of the People's Crusade began to march months before, in April.[2]

உசாத்துணை

[தொகு]
  1. Asbridge 2012, ப. 42, The Call of the Cross.
  2. Carey, Allfree & Cairns 2023, ப. 18-22.

வெளி இணைப்புகள்

[தொகு]