உள்ளடக்கத்துக்குச் செல்

மிசெல் இயோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசெல் இயோ
Michelle Yeoh
楊紫瓊
2017 இல் இயோ
தாய்மொழியில் பெயர்楊紫瓊
பிறப்புமிசெல் இயோ சூ கெங்
6 ஆகத்து 1962 (1962-08-06) (அகவை 62)
ஈப்போ, பேராக், மலாயா கூட்டமைப்பு (த்ற்போது மலேசியா)
மற்ற பெயர்கள்மிசெல் கான்
படித்த கல்வி நிறுவனங்கள்நடனத்திற்கான இராயல் அகாதமி (இளங்கலை)
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1983–தற்காலம்
பட்டம்மலேசிய அழகி (1983)
துணைவர்ஜீன் டாட் (2004–தற்காலம்)
வாழ்க்கைத்
துணை
டிக்சன் பூன்
(தி. 1988; வி. 1992)
Chinese name
நவீன சீனம் 杨紫琼
பண்டைய சீனம் 楊紫瓊

மிசெல் இயோ சூ கெங் (ஆங்கிலம்: Michelle Yeoh Choo Kheng, PSM (/ˈj/ YOH; பிறப்பு - 6 ஆகத்து 1962)[1] ஒரு மலேசிய நடிகை ஆவார். மிசெல் கான் என்று சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் டுமாற்றோ நெவர் டைசு (1997) மற்றும் ஆங் லீயின் திரைப்படம் குரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் (2000), குங் பூ பாண்டா 2 (2011; குரல்), குரேசி ரிச் ஏசியன்சு (2018), மார்வெல் திரைப் பிரபஞ்சம் திரைப்படம் சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் (2021) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் இவர் எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு என்னும் அறிவியல் புனைவுத் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

2008 இல் அழுகிய தக்காளிகள் இணையதளம் இவரை திரையுலகின் மிகச்சிறந்த ஆக்சன் நடிகையாக பட்டியலிட்டது.[2] 1997 இல் பீப்பிள் இதழ், உலகின் 50 மிக அழகிய நபர்களில் ஒருவராக மிசெல் இயோவின் அறிவித்தது.[3] 2022 இல், டைம் இதழ் இவரை உலகின் அதிக செல்வாக்குடைய 100 நபர்களில் ஒருவராக அறிவித்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Encyclopædia Britannica Almanac 2010, p. 75
  2. "Total Recall: The 25 Best Action Heroines of All Time". Rotten Tomatoes. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2011.
  3. "35 All-Time Screen Beauties". People. 28 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2021. {{cite web}}: Check date values in: |date= (help)

மேலும் படிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Michelle Yeoh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.