மல்லாகம் தொடருந்து நிலையம்
Appearance
மல்லாகம் மல்லாகம் | |
---|---|
இலங்கைத் தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | இலங்கை |
ஆள்கூறுகள் | 9°45′46.50″N 80°01′57.00″E / 9.7629167°N 80.0325000°E |
உரிமம் | இலங்கை தொடருந்து போக்குவரத்து |
தடங்கள் | வடக்குப் பாதை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
வரலாறு | |
மறுநிர்மாணம் | 2 சனவரி 2015 |
மின்சாரமயம் | இல்லை |
மல்லாகம் தொடருந்து நிலையம் (Mallakam railway station) இலங்கையின் வடக்கே மல்லாகம் என்ற ஊரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இலங்கையின் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று மல்லாகம் தொடருந்து நிலையமும் 1990 முதல் 2015 வரை இயங்காமல் இருந்து வந்தது. வடக்குப் பாதையின் யாழ்ப்பாணத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையேயான போக்குவரத்து மல்லாகம் ஊடாக 2015 சனவரி 2 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1][2]
சேவைகள்
[தொகு]மல்லாகம் ஊடாகப் பின்வரும் தொடருந்து சேவைகள் இயங்கி வருகின்றன:[3]
« | சேவை | » | ||
---|---|---|---|---|
சுன்னாகம் கொழும்பு கோட்டையில் இருந்து |
4017 நகரிடை |
தெல்லிப்பழை காங்கேசன்துறை நோக்கி | ||
தெல்லிப்பழை காங்கேசன்துறையில் இருந்து |
4018 நகரிடை |
சுன்னாகம் கொழும்பு கோட்டை நோக்கி | ||
சுன்னாகம் யாழ்ப்பாணத்தில் இருந்து |
4442 உள்ளூர் |
தெல்லிப்பழை காங்கேசன்துறை நோக்கி | ||
தெல்லிப்பழை காங்கேசன்துறையில் இருந்து |
4882 உள்ளூர் |
சுன்னாகம் யாழ்ப்பாணம் நோக்கி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jaffna-KKS railway track roars again". Daily FT. 3 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150104195527/http://www.ft.lk/2015/01/03/jaffna-kks-railway-track-roars-again/.
- ↑ Balachandran, P. K. (3 சனவரி 2015). "Busy Rajapaksa Skips Maiden Run on India-built Jaffna Track". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/Busy-Rajapaksa-Skips-Maiden-Run-on-India-built-Jaffna-Track/2015/01/03/article2601276.ece.
- ↑ "Search Train". இலங்கை தொடருந்து போக்குவரத்து.