உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கோலியாவில் பௌத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கோலியாவில் பெரும்பான்மையானவர்களால் பின்பற்றப்படும் சமயம் பௌத்தம் ஆகும். 2010ஆம் ஆண்டு மங்கோலிய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி, இச்சமயத்தை அங்கு 51.7% மக்கள் பின்பற்றுகின்றனர்.[1] மங்கோலியாவில் பௌத்தம் அதன் தற்போதைய தனிப் பண்புக் கூறுகளைத் திபெத்தியப் பௌத்தத்தின் கெளுக்கு மற்றும் கக்குயு பிரிவுகளில் இருந்து பெறுகிறது. எனினும் மங்கோலியப் பௌத்தம் தனித்துவமானதாகவும் உள்ளது. அதற்கெனத் தனிச்சிறப்புப் பண்புகளும் காணப்படுகின்றன.

யுவான் அரசமரபுப் பேரரசர்கள் திபெத்தியப் பௌத்தத்திற்கு மாறியதிலிருந்து மங்கோலியாவில் பௌத்தம் ஆரம்பமானது. மங்கோலியப் பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு மங்கோலியர்கள் ஷாமன் மதப் பாரம்பரியங்களுக்கு திரும்பினர். எனினும், 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் பௌத்தம் மீண்டும் மங்கோலியாவில் வளர்ச்சியடந்தது.

கிதான் நகரமான பார்சு கோத்தில் தாதுக் கோபுரம்
16ஆம் நூற்றாண்டில் கல்காவின் மையப் பகுதியில் அபுதை கானால் எர்தின் சூ துறவி மாடத்தில் நிறுவப்பட்ட ஒரு பௌத்தக் கோயில்
1920கள் வரை சமய மற்றும் அரசுத் தலைவராக போகடு கான் இருந்தார்.
உர்காவில் ஒரு ஆலயத்தில் வழிபடும் மங்கோலியன்.
அவலோகிதேஸ்வரரின் (மங்கோலியப் பெயர்: மிக்சித் ஜன்ரைசிக்) மங்கோலியச் சிலை, கன்டன்தெக்சின்லன் துறவி மாடம். கட்டடத்தின் உட்புறமுள்ள உலகின் மிகப்பெரிய சிலை, உயரம் 26.5 மீ, 1996ல் மீண்டும் உருவாக்கப்பட்டது. (முதலில் 1913ல் உருவாக்கப்பட்டது, ஆனால் 1937ல் அழிக்கப்பட்டது)

உசாத்துணை

[தொகு]