உள்ளடக்கத்துக்குச் செல்

போப்லெட் மடாலயம்

ஆள்கூறுகள்: 41°22′51″N 1°04′57″E / 41.380833°N 1.0825°E / 41.380833; 1.0825
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போப்லெட் மடாலயம்
போப்லெட் மடாலயம் is located in காத்தலோனியா
போப்லெட் மடாலயம்
Shown within Spain Catalonia
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்விம்போடி இ போப்லெட், காத்தலோனியா, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்41°22′51″N 1°04′57″E / 41.380833°N 1.0825°E / 41.380833; 1.0825
சமயம்கத்தோலிக்க திருச்சபை
தலைமைஅபோட் ஜோஸ் அலேக்ரே
இணையத்
தளம்
www.poblet.cat
Official name: Poblet Monastery
வரையறைகள்:i, iv
கொடுக்கப்பட்ட நாள்:1991[1]
மேற்கோள் எண்.518
Official name: Monasterio de Poblet
Designated:13 சூலை 1921
Reference No.(R.I.)-51-0000197-00000[2]

சாந்தா மரியா தெ போப்லெட்டின் அரச ஆசிரமம் (காட்டலான்: Reial Monestir de Santa Maria de Poblet) என்பது ஒரு சிஸ்டேர்சியன் மடாலயம் ஆகும். இது 1151ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. எசுப்பானியாவில் காத்தலோனியா எனும் இடத்தில் பிரதேஷ் மலைகளின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்சில் இருந்து வந்த சிஸ்டேர்சியன் மதகுருமார்களால் சோனகர்களிடம் இருந்து வெற்றிகொண்ட நிலத்தில் அமைக்கப்பட்டது. இதை அமைத்த தலைமை கட்டடக்கலைஞர் ஆர்னோ பார்குவேஸ்.

இந்த மடாலயம் சிஸ்டேர்சியன் முக்கோணம் என அழைக்கப்படுகின்ற மடாலயங்களில் முதன்மையானது ஆகும். இந்த சிஸ்டேர்சியன் முக்கோணமானது காத்தலோனியாவின் பலத்தை 12ஆம் நூற்றாண்டுகளில் வெளிக்காட்டின. (சிஸ்டேர்சியன் முக்கோணத்தில் அடங்கிய மற்றவைகள்: வல்போனா மடாலயம் மற்றும் சண்டேஸ் கிரூஸ்)

முக்கியத்துவம்

[தொகு]

போப்லெட் ஆனது அரசர்களின் மடாலயமாக இருந்ததுள்ளது. சில முக்கியமான அரச கல்லறைகளில் அளபச்டேரின் சிலைகள் மேலே காணப்படுகின்றன. அரசர்களின் காலடியில் சிங்க சிலைகளும் அரசிகளின் காலடிகளில் நாய்களின் சிலைகளும் இந்த மடாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[3]

அரகொனின் நான்காம் பீட்டர் (1319 – 1387) ஆட்சிக்கு வரும்போது ஒரு நிபந்தனையை ஏற்படுத்தினார். அதாவது அரகொனின் அரசர்கள் யாவரும் போப்லெட் மடாலயத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும். அரகோனின் இரண்டாம் பெர்டினன்ட் இந்த இந்த நிபந்தனையை அவரது இராச்சியம் காஸ்டிலே இராச்சியத்துடன் இணைக்கப்பட்ட போது உடைத்தார். அதன் பின் அரச உடல்கள் கிரனாதாவில் அடக்கம் செய்யப்பட்டது.[4]

அடக்கம் செய்யப்பட்டவர்கள்

[தொகு]

அரகொனின் பின்வரும் அரசர்கள் மற்றும் அரசிகள் போப்லெட் மடாலயத்தில் இறந்த பின் அடக்கம் செய்யப்பட்டனர்.

உலகப் பாரம்பரியக் களம்

[தொகு]

போப்லெட் மடாலயம் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களமாக 1991 ஆண்டு பிரகடனப் படுத்தப்பட்டது.

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Poblet Monastery". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2011-01-10.
  2. "Monasterio de Poblet". Patrimonio Historico - Base de datos de bienes inmuebles (in Spanish). Ministerio de Cultura. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
  3. "Tombes reials". Archived from the original on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2014-10-05.
  4. Màrius Domingo & Antoni Borau, Muntanyes de Prades. Paisatge i fauna, Cossetania Editions, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-89890-06-4

வெளி இணைப்புகள்

[தொகு]