உள்ளடக்கத்துக்குச் செல்

பண்பலை ஒலிபரப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானொலிக்கான ஏ.எம், எஃப்.எம் பண்பேற்ற சமிக்கைகள்
அலை அதிர்வெண்களின் வகை

பண்பலை அல்லது எப்.எம். அதாவது Frequency Modulation; FM) என்பது வானொலித் தொழில்நுட்பத்தில், சைகைகளை (குறிப்பலைகளை) ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாகச் செய்து (ஏற்றி) அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும். வானொலியின் ஒலிபரப்பிலும், தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், உயர் அதிர்வெண் கொண்ட மின்காந்த அலைகள் குறை அதிர்வெண் கொண்ட ஒலி, ஒளி சமிக்கைகளைச் சுமந்து செல்லும் சுமப்பான்களாகப் பணிபுரிகின்றன. அவ்வாறு சுமந்து செல்லும்போது, மின்காந்த அலைகள், ஒலி, ஒளி அலைகளால் பண்பாக்கம் அல்லது பண்பேற்றம் பெறுகின்றன.

பண்பேற்றம் இரு வழிகளில் செய்யப்படலாம். அதிர்வெண் மாற்றத்தின் மூலமும், அலையின் வீச்சை மாற்றுவதன் மூலமும் செய்யலாம். முதலில் குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவது அதிர்வெண் பண்பேற்றம் (எஃப்.எம், FM) எனப்படும். அடுத்ததை வீச்சுப் பண்பேற்றம் (ஏ.எம், AM) என்பர். மின்னல், இடி போன்றவற்றால் ஏ.எம் ஒலிபரப்பில் கர கர ஒலி, ஒலி இடையூறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. ஆனால் எஃப்.எம் ஒலிபரப்பில் இத்தகைய இடையூறுகள் ஏதுமின்றி துல்லியமான ஒலியைக் கேட்கலாம். தொலைக் காட்சியில் எஃப்.எம் மூலம் ஒலியும், ஏ.எம் மூலம் ஒளியும் பரப்பப்படுகின்றன. FM மூலம் இயங்கும் வானொலியின் ஒலிபரப்பு பண்பலை ஒலிபரப்பாகும்

மேலும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]