நியூ ஹேவென், கனெடிகட்
நியூ ஏவன், கனெக்டிகட் | |
---|---|
நியூ ஏவன் நகரம் | |
அடைபெயர்(கள்): எல்ம் நகரம் | |
நியூ ஏவன் நகரின் நிகழ்ஊடக நிலப்படம் | |
ஆள்கூறுகள்: 41°18′36″N 72°55′25″W / 41.31000°N 72.92361°W | |
Country | ஐக்கிய அமெரிக்கா |
கவுன்ட்டி | நியூ ஏவன் |
பெருநகர பகுதி | பெரும் நியூ ஏவன் |
குடியமர்வு (ஊர்) | ஏப்ரல் 3, 1638 |
நிறுவப்பட்டது (நகரம்) | 1784 |
ஒருங்கிணைப்பு | 1895 |
பெயர்ச்சூட்டு | ஓர் புதிய ஏவன், துறைமுகம் என்ற பொருளில் |
அரசு | |
• வகை | மேயர்-நகரவை |
• நகரத்தந்தை | ஜஸ்டின் எலிக்கர் (D) |
பரப்பளவு | |
• மாநகரம் | 20.13 sq mi (52.15 km2) |
• நிலம் | 18.69 sq mi (48.41 km2) |
• நீர் | 1.44 sq mi (3.74 km2) |
ஏற்றம் | 59 ft (18 m) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு) | |
• மாநகரம் | 1,29,779 |
• மதிப்பீடு (2019)[1] | 1,30,250 |
• அடர்த்தி | 6,968.97/sq mi (2,690.72/km2) |
• பெருநகர் | 8,62,477 |
மெட்ரோ என்பது நியூ ஏவன் கவுன்ட்டியைக் குறிக்கும் | |
நேர வலயம் | ஒசநே−5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே−4 (கிழக்கு) |
சிப் குறியீடுகள் | 06501–06540 |
இடக் குறியீடு(கள்) | 203/475தொலைபேசிக் குறியீடு |
FIPS code | 09-52000 |
GNIS feature ID | 0209231 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | |
இணையதளம் | www |
நியூ ஏவன் (New Haven, நியூ ஹேவென்) ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும். இது நீள் தீவு இடைக்கடலின் வடக்கு கரையோரத்திலுள்ள துறைமுக நகரம். 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 134,023.[2] கனெக்டிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட், இசுடாம்போர்டு நகரங்களை அடுத்து மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகின்றது.
நியூ ஏவன் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டு உருவான முதல் நகரமாகும்.[3][4][5] 1638இல் ஆங்கில சீர்திருத்தவாதிகள் நிறுவி ஓராண்டிற்குப் பின்னர் எட்டு சாலைகள் நான்குக்கு நான்கு வலைவடிவமாக திட்டமிடப்பட்டன; இது தற்போது "ஒன்பது சதுரத் திட்டம்" என அறியப்படுகின்றது.[6] நடுவில் அமைந்த பொதுச் சதுரத்தில் நியூ ஏவன் கிரீன் என்ற பூங்கா உள்ளது; இது நியூ ஏவனின் மையநகரப்பகுதியில் 16-ஏக்கர் (6 ha) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா தற்போது தேசிய வரலாற்று அடையாளமாகவும், "ஒன்பது சதுரத் திட்டம்" தேசிய திட்டமிடல் அடையாளமாகவும் ஏற்கப்பட்டுள்ளன.[7][8]
நியூ ஏவன்யேல் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம். நகரத்தின் பெருமளவில் வரி கட்டுபவராகவும் முதன்மை வேலை வாய்ப்பு நல்குபவராகவும் [9] விளங்கும் யேல்பல்கலைக்கழகம்,நியூ ஏவன் நகரத்தின் பொருளாதாரத்தின் ஆணிவேராக உள்ளது.
இந்த நகரம் 1701 முதல் 1873 வரை கனெக்டிகட் மாநிலத்தின் இணை தலைநகரமாக விளங்கியது; 1873க்குப் பின்னரே மாநிலத்தின் மையத்தில் அமைந்திருந்த ஹார்ட்பர்டிற்கு தலைநகரம் மாறியது. இங்குள்ள கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், இசையரங்கங்கள் காரணமாக நியூ ஏவன் கனெக்டிகட்டின் பண்பாட்டுத் தலைநகரம் என அறியப்படுகின்றது.[10] அமெரிக்காவின் முதல் மரம் நடுவிழா இங்குதான் நடைபெற்றது; எல்ம் என்ற வகை மரங்கள் அதிகமாக நடப்பட்டு இந்த நகரத்திற்கு "எல்ம் நகரம்" என்ற சிறப்புப் பெயரை பெற்றுத் தந்தது.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "2019 U.S. Gazetteer Files". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் July 2, 2020.
- ↑ {{https://www.census.gov/quickfacts/fact/table/newhavencityconnecticut/POP010220#POP010220
- ↑ Mason, Betsy. "Strange, Beautiful, and Unexpected: Planned Cities Seen From Space" (in en-US). WIRED. https://www.wired.com/2012/11/planned-cities-from-space/.
- ↑ Garvan, Anthony (1951). Architecture and Town Planning in Coastal Connecticut. New Haven, CT: Yale University Press. p. 41.
- ↑ Boyle, Molly (2014). "The Failure of America's First City Plan: Why New Haven, the Colonies'First Planned City, Would Have Been Better Left Unplanned". Urban Lawyer 46: 507.
- ↑ "New Haven: The Elm City". Towngreens.com. பார்க்கப்பட்ட நாள் 2011-09-28.
- ↑ "National Planning Landmark Award". planning.org. Archived from the original on 2017-03-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-04.
- ↑ "New Haven, CT – News Details". Newhavenct.gov. 2017-07-24. Archived from the original on 2018-08-10. பார்க்கப்பட்ட நாள் 2019-05-16.
- ↑ "Yale University > Office of New Haven and State Affairs > About Yale and New Haven". Yale.edu. 2003-04-15. Archived from the original on September 7, 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-28.
- ↑ "In New Haven, Art Almost Everywhere You Look" (in en-US). The New York Times. 2007-04-06. https://www.nytimes.com/2007/04/06/travel/escapes/06trip.html.
- ↑ "They're Putting The "Elm" Back In "Elm City"". Newhavenindependent.org. பார்க்கப்பட்ட நாள் 2011-09-28.