உள்ளடக்கத்துக்குச் செல்

தீநுண்ம எதிர்ப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனித இன்டெர்ஃபெரான்-ஆல்ஃபாவின் மூலக்கூற்று வடிவம்

தீநுண்ம எதிர்ப்பிகள் (அ) இன்டெர்ஃபெரான்கள் (interferons; IFNs) என்பவை தீ நுண்மங்கள், பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் அல்லது கட்டி (உயிரியல்) உயிரணுக்கள் போன்ற நோய்க்காரணிகளுக்கெதிராக ஓம்புயிரினால் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும் புரதங்களாகும்[1][2]. எடுத்துக்காட்டாக, தீநுண்மம் தாக்கப்பட்ட உயிரணு இன்டெர்ஃபெரான்களை வெளியிட்டு அருகிலுள்ள உயிரணுக்களைத் தூண்டி தீநுண்மத்திற்கெதிரானப் பாதுகாப்புகளை அதிகரிக்கச் செய்கிறது. இன்டெர்ஃபெரான்கள் நோய்க்காரணிகளை அழிக்க, நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் பாதுகாப்புச் செயற்பாடுகளைத் தூண்டும், உயிரணுக்களுக்கிடையேயானத் தொடர்பாடல்களுக்காக பயன்படுத்தப்படும் மூலக்கூறுகளான சைட்டோக்கைன்கள் எனப்படும் கிளைக்கோப்புரதப் பிரிவைச் சார்ந்தவையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]