உள்ளடக்கத்துக்குச் செல்

சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுண்டெலி
புதைப்படிவ காலம்:பிந்தைய மியோசின் முதல்
வீட்டு சுண்டெலி, மசு மசுகுலசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெருங்குடும்பம்:
முரோயிடே
குடும்பம்:
துணைக்குடும்பம்:
முரினே
பேரினம்:
மசு

இனம்

30 சிற்றினங்கள்

சுண்டெலி (mouse) கூரான நீள்மூக்கு, சிறிய வட்டமான காதுகள், நீண்ட முடியில்லாத வாலைக் கொண்ட பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு கொறிணியாகும்[1]. சாதரணமாக வீடுகளில் காணப்படும் சுண்டெலி (Mus musculus) நன்கு அறியப்பட்ட இனமாகும். சுண்டெலி ஒரு பிரபலமான வளர்ப்பு விலங்காகும். சில இடங்களில், குறிப்பிட்ட வகையான வயல் சுண்டெலிகளும் (Apodemus) பொதுவாகக் காணப்படுகின்றன. பருந்து, கழுகு முதலிய பெரிய பறவைகள் சுண்டெலிகளை உணவாக உட்கொள்கின்றன. உணவிற்காகவும், சிலவேளைகளில் பாதுகாப்பிற்காகவும் வீடுகளில் இவை புகுந்து விடுகின்றன.

உணவு

[தொகு]

இயற்கையில், எலிகள் பெரும்பாலும் தாவரவகைகள், தாவரங்களிலிருந்து கிடைக்கும் பழங்கள் அல்லது தானியங்களை உண்ணும்.[2] இருப்பினும், எலிகள் நகர்ப்புறங்களில் அங்குள்ள நிலைக்கு நன்கு பொருந்தி வாழ்கின்றன. இப்பகுதிகளில் கிடைக்கும், கிட்டத்தட்ட அனைத்து வகையான உணவு கழிவுகளையும் சாப்பிடுவதாக அறியப்படுகின்றன. வளரிடங்களில் உள்ள எலிகள் பொதுவாக வணிக ரீதியாக கிடைக்ககூடிய உணவுகளை உண்ணுகின்றன. இந்த உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்தவை, ஆனால் இத்துடன் இவைகளுக்கு பல வகையான காய்கறிகளும் தேவை. பெரும்பாலான எலிகள் பாலாடைக்கட்டியினை உணவாக உண்பதில்லை, ஆனால் வேறு எவ்வித உணவும் இல்லையெற்றால்தான் பாலாடைக் கட்டியினைச் சாப்பிடும்.[3][4]

உணர்ச்சி

[தொகு]

மாக்ஸ் பிளாங்க் நரப்பியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் எலிகள் பலவிதமான முகபாவனைகளைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இன்பம், வெறுப்பு, குமட்டல், வலி ​​மற்றும் பயம் போன்ற பழக்கமான மனித உணர்ச்சிகளைக் கண்டறிய அவர்கள் இயந்திரத்தின் உதவியுடன் இதனை உறுதிப்டுத்தினர்.[5][6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rodent". Encyclopedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Mouse Info". பார்க்கப்பட்ட நாள் 15 August 2016.
  3. "Do mice really love cheese?". HowStuffWorks (in ஆங்கிலம்). 2015-04-15. பார்க்கப்பட்ட நாள் 2020-02-27.
  4. "What Kind of Food Should Your Pet Mouse Eat?". The Spruce Pets (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
  5. "The facial expressions of mice". Max-Planck-Gesellschaft. 2 April 2020.
  6. "The face of a mouse reveals its emotions: study". Phys.org (in ஆங்கிலம்). 2 April 2020.
  7. "Mice have facial expressions, AI finds" (Video). Amaze Lab (in ஆங்கிலம்). 3 April 2020.