சீரீன் இபாதி
துனீசியாவில் சீரீன் இபாதி (18 நவம்பர் 2005) | |
பிறப்பு | 21 சூன் 1947[1] அமதான், ஈரான் |
இருப்பிடம் | இலண்டன், இங்கிலாந்து |
தேசியம் | இரானியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தெகரான் பல்கலைக்கழகம்[2] |
பணி | வழக்கறிஞர், நீதிபதி |
அறியப்படுவது | மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு |
சமயம் | சியா இசுலாம் |
விருதுகள் | அமைதிக்கான நோபல் பரிசு (2003) |
சீரீன் இபாதி (பாரசீக மொழி:عبادی; ஆங்கிலம்: Shirin Ebadi; பிறப்பு: ஜூன் 21, 1947) என்பவர் ஈரானிய ஈரானிய வழக்கறிஞர், முன்னாள் நீதிபதி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ஆவார். இவர் ஈரானில் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மையத்தை (Defenders of Human Rights Center) நிறுவி செயற்பட்டார். 2003 ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவருக்கு இப்பரிசானது மக்களாட்சி மற்றும் மனித உரிமைக்காகப்போராடியதற்காக வழங்கியது. இப் பரிசைப் பெறும் முதலாவது ஈரானியர், இசுலாமியப் பெண் இவர் ஆவார். 2009 ஆம் ஆண்டில் ஈரானிய அதிகாரிகளால் இவ்விருது பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை ஈரானிய அரசாங்கம் மறுத்துள்ளது . [3] 2004 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் , "உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள்" பட்டியலில் இடம்பெற்றார்.[4] "அனைத்து காலத்திலும் மிகவும் செல்வாக்குள்ள 100 பெண்கள்." பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார் .[5]
நீதிபதியாக வாழ்க்கை மற்றும் ஆரம்ப வாழ்க்கை
[தொகு]ஈரானில் உள்ள ஹமதானில் 1947 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். இவரின் தந்தை சீரின் எபாடி ஒரு சட்டப் பேராசிரியர் ஆவார். இவரது குடும்பம் 1948 இல் தெகுரானுக்கு குடிபெயர்ந்தது. இவர் 1965 இல் தெகுரான் பல்கலைக்கழகத்தின் சட்டப் படிப்பில் சேர்ந்தார். 1969 இல் பட்டப்படிப்பு முடிந்ததும், நீதிபதி ஆவதற்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆறுமாத பயிற்சிக் காலத்திற்குப் பிறகு, மார்ச் 1969 இல் இவர் அதிகாரப்பூர்வமாக நீதிபதியாக ஆனார். 1971 இல் சட்டத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கு இதற்கிடையில் தெகுரான் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். 1975 இல், தெகுரான் நீதிமன்றத்தில் முதல் பெண் தலைவரானார். 1979 ஈரானியப் புரட்சி வரை பணியாற்றினார்.[6] ஈரானின் முதல் பெண் நீதிபதிகளில் இவரும் ஒருவர்.[7][6][8] ஈரானில் இசுலாமிய புரட்சி வெடித்தினால் அனத்து பெண் நீதிபதிகளும் பதவி நீக்கப்பட்டதனால் இவர் பதவி இழந்தார்.
இவரது விண்ணப்பங்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டதால், 1993 ஆம் ஆண்டு வரை இபாதியால் வழக்கறிஞராகப் பணியாற்ற முடியவில்லை, இவர் ஏற்கனவே சட்ட அலுவலக அனுமதி பெற்றிருந்தார். இந்த ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் ஈரானிய பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுத பயன்படுத்திக்கொண்டார்.[2]
வழக்கறிஞராக இபாதி
[தொகு]2004 வாக்கில், இபாதி ஈரானில் சட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தெகுரான் பல்கலைக்கழகத்தில் சட்ட விரிவுரையாற்றினார்.[6] இவர் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்களை வலுப்படுத்துவதற்கான பரபுபுரையாளராக இருந்தார். இவர் 1997 மேயில் சீர்திருத்தவாதியான முகமது கத்தாமியின் சனாதிபதித் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தார்.
ஒரு வழக்கறிஞராக, இவர் மனித உரிமை வழக்குகளைக் கையாள்வதில் தூணிந்து செயல்பட்டார். தனது வீட்டில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு அதிருப்தி அறிவ்வுஜீவியும் அரசியல்வாதியுமான டேரியுஷ் ஃபோரௌஹரின் குடும்பத்துக்காக வழக்காடினார். அவரது மனைவி பர்வனே எஸ்கந்தாரியும் அதே நேரத்தில் கொல்லப்பட்டார்.
ஈரானின் அறிவுஜீவி சமூகத்தை பயமுறுத்திய கொடூரமான கொலைகளில் இறந்த பலரில் இந்த இணையரும் அடங்குவர். பேச்சு சுதந்திரத்தை ஆதரித்த ஜனாதிபதி கந்தால் வளர்க்கப்பட்ட மிகவும் தாராளவாத சூழலை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்த தீவிரவாத கடும்போக்காளர்கள் மீது சந்தேகம் எழுந்தது. ஈரானிய உளவுத்துறை அமைச்சகத்தின் ஊழியர்களின் குழுவால் இந்த கொலைகள் செய்யப்பட்டன, அதன் தலைவரான சயீத் இமாமி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
1999 சூலையில் ஈரானிய மாணவர் போராட்டங்களில் கொல்லப்பட்ட எசாத் இப்ராகிம்-நெஜாட்டின் குடும்பத்தின் சர்பிலும் இவர் வழக்காடினார். இதுபோன்ற பல்வேறு மனித உரிமை வழக்குளில் ஈடுபட்டதால் இவர் மீது கோபமுற்ற அதிகார வர்கம் அரசுக்கு எதிராக பொய்களை பரப்பி வருகிறார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். மேல் முறையீடு மற்றும் பன்னாட்டு அழுதங்களின் காரணமாக இவரது சிறைத் தண்டனை அபராதமாக மாற்றப்பட்டது.
நோபல் பரிசு
[தொகு]மனித உரிமை மீட்டெடுப்பதற்கு குறிப்பாக பெண்கள் குழந்தைகளின் உரிமைக்காக பாடுபட்ட இவரின் சேவைக்காக 2003 ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை மனித உரிமை பாதுகாவலர்களுக்கும், அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு உதவவும் பயன்படுத்தினார். பின்னர் ஈரானில் இவருக்கு எதிரான செயல்பாடுகள் வளுத்ததால் இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் புகுந்தார்.
மேற்கோள்
[தொகு]- ↑ Daniel P. O'Neil (2007). Fatima's sword: Everyday female resistance in post-revolutionary Iran. ProQuest. pp. 55–61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-549-40947-2. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 Karen L. Kinnear (22 சூலை 2011). Women in Developing Countries: A Reference Handbook. ABC-CLIO. p. 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59884-425-2. பார்க்கப்பட்ட நாள் 15 January 2012.
- ↑ Reuters (27 November 2009). "Iran Denies It Confiscated Ebadi's Nobel Medal". The New York Times. http://www.nytimes.com/reuters/2009/11/27/world/international-uk-norway-iran-nobel.html. பார்த்த நாள்: 15 நவம்பர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Forbes.com: Forbes 100 Most Powerful Women in the World 2004". Archived from the original on 2012-07-30. பார்க்கப்பட்ட நாள் 2012-07-30.
- ↑ Britannica Educational Publishing (1 October 2009). The 100 Most Influential Women of All Time. The Rosen Publishing Group. pp. 330–331. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61530-058-7. பார்க்கப்பட்ட நாள் 15 நவம்பர் 2013.
- ↑ 6.0 6.1 6.2 "2004–2005 Lecture – Shirin Ebadi", University of Alberta Visiting Lectureship in Human Rights, Edmonton, Alberta, 21 October 2004, archived from the original on 27 April 2017, பார்க்கப்பட்ட நாள் 26 April 2017
- ↑ "Profile: Shirin Ebadi". BBC News. 27 November 2009. http://news.bbc.co.uk/2/hi/middle_east/3181992.stm.
- ↑ Porochista Khakpour (25 April 2017). "Shirin Ebadi: 'Almost a fourth of the people on Earth are Muslim. Are they like each other? Of course not'". https://www.theguardian.com/global-development-professionals-network/2017/apr/25/shirin-ebadi-outside-of-iran-i-knew-id-be-more-useful-i-could-speak.
வெளி இணைப்புகள்
[தொகு]www.nobel.se பரணிடப்பட்டது 2003-12-05 at the வந்தவழி இயந்திரம்