உள்ளடக்கத்துக்குச் செல்

சார்லி எப்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்லி ஹெப்ஃடோ
சார்லி ஹெப்டோ வாராந்தரியின் சின்னம்
வகைவாராந்திர அங்கத
செய்தி இதழ்
வடிவம்இதழ்
நிறுவியது1970,[1] 1992
அரசியல் சார்புஇடதுசாரி அரசியல்
தலைமையகம்பாரிஸ், பிரான்சு
விற்பனை45,000
ISSN1240-0068
இணையத்தளம்charliehebdo.fr

சார்லி எப்டோ (Charlie Hebdo, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[ʃaʁli ɛbdo]; மாற்று ஒலிப்பு: சார்லி ஹெப்ஃடோ, பொருள்: வாராந்திர சார்லி) பிரான்சிய அங்கத வாராந்தர செய்தியிதழாகும். பல கேலிச்சித்திரங்களும் அறிக்கைகளும் சமய நம்பிக்கைகளுக்கு எதிரான வாதங்களும் நகைச்சுவைத் துணுக்குகளும் இதில் வெளியாகின்றன. வழிபாடுகளற்ற, வழமைகளுக்கெதிரான தொனியுடன் இந்த இதழ் இடது-சாரி மற்றும் சமயங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றது.[2] பிரான்சிய அரசியலில் மிகுந்த வலதுசாரி கருத்துக்கள், கத்தோலிக்கம், இசுலாம், யூதம், பண்பாடு குறித்த விமர்சனக் கட்டுரைகளை வெளியிடுகின்றது. முன்னாள் ஆசிரியர் இசுடெபானெ சார்போன்னியெ (சார்பு) கூற்றுப்படி "இடதுசாரி பன்முகத்தின் அனைத்துக் கூறுகளையும், விடுபட்டவைகளையும் கூட" இந்த இதழின் பார்வைக்கோணம் கொண்டுள்ளது.[3]

1970இல் துவங்கிய இந்த இதழ் 1981இல் மூடப்பட்டது; 1992இல் மீண்டும் வெளிவரத்தொடங்கியது. 2009இலிருந்து சார்பு இதன் ஆசிரியராக பொறுப்பிலிருந்தார்; 2015இல் இதழின் அலுவலகங்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். இவருக்கு முன்னதாக பிரான்சுவா கவன்னாவும் (1969–1981) பிலிப்பு வாலும் (1992–2009) ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.

இது ஒவ்வொரு புதன் கிழமையும் வெளியாகின்றது; சிறப்புப் பதிப்புகள் நடுநடுவே வெளியிடப்படுகின்றன.

சனவரி 7, 2015 அன்று செய்தி இதழின் பாரிசு அலுவலகத்தில் வாராந்தர ஆசிரியக்குழு சந்திப்பின்போது இசுலாமியத் தீவிரவாதிகள் என ஐயுறப்படும் நபர்கள் பல ஒருங்கிணைப்பாளர்களையும் வருகையாளர்களையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்; இரண்டு காவல்துறையினரையும் சுட்டுக் கொன்றனர்.[4][5][6]

இந்த இதழ் மீது இரண்டு முறை தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன: 2011இல் தீக்குண்டு, 2015இல் துப்பாக்கிப் படுகொலை.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. McNab 2006, ப. 26: "Georges Bernier, the real name of 'Professor Choron', [... was] cofounder and director of the satirical magazine Hara Kiri, whose title was changed (to circumvent a ban, it seems!) to Charlie Hebdo in 1970."
  2. Charb. "Non, "Charlie Hebdo" n'est pas raciste !". Le Monde. பார்க்கப்பட்ட நாள் 4 March 2014.
  3. «Charlie Hebdo, c'est la gauche plurielle» [archive] sur lecourrier.ch du 9 avril 2010
  4. ஷார்லி எப்டோ தாக்குதலுக்கு யேமன் அல்கயீதா பொறுப்பேற்பு
  5. "Deadly attack on office of French magazine Charlie Hebdo". BBC News.
  6. Bremner, Charles (7 January 2015). "Islamists kill 12 in attack on French satirical magazine Charlie Hebdo". தி டைம்ஸ். {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]