உள்ளடக்கத்துக்குச் செல்

கோர் விரப்

ஆள்கூறுகள்: 39°52′42″N 44°34′34″E / 39.878333°N 44.576111°E / 39.878333; 44.576111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோர் விரப்
அரராத் மலையை பின்னனியாக் கொண்ட கோர் விரப்
கோர் விரப் is located in ஆர்மீனியா
கோர் விரப்
Shown within Armenia
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்லுசராட், ஆராத் மாகாணம்
ஆர்மீனியா ஆர்மீனியா
புவியியல் ஆள்கூறுகள்39°52′42″N 44°34′34″E / 39.878333°N 44.576111°E / 39.878333; 44.576111
சமயம்ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை
வழிபாட்டு முறைஆர்மீனியம்
மாநிலம்ஆர்மீனியா
மாகாணம்அரராத்
ஆட்சிப்பகுதிஅட்டசாத்
நிலைநன்று
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது

கோர் விரப் (Khor Virap; ஆர்மீனியம்: Խոր Վիրապ, "ஆழமான குழி" அல்லது "ஆழமான கிணறு" எனப் பொருள்) என்பது துருக்கி எல்லைக்கு அருகில், ஆராத் மாகாணத்தின் அட்டசாத்தின் தெற்கில் கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர்கள் (5.0 mi) தூரத்தில் ஆர்மீனியாவிலுள்ள ஆராத் சமவெளியில் அமைந்துள்ள ஓர் ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை துறவியர் மடம் ஆகும்.[1][2] இந்த துறவியர் மடம் இறையியல் குருமடமாகவும் ஆர்மீனிய கத்தோலிக்கசுகளின் வசிப்பிடமாகவும் இருந்தது.[3]

முன்பு கிரிகர் லுசாவோரிச் எனப்பட்டவர் பின்னர் புனித கிரகரி என்ற பெயர் பெற்றவருடைய இடம், துறவியர் மடம் என்பவற்றால் கோர் விரப் குறிப்பிடத்தக்கமை பெற்றுள்ளது. இவர் முதலில் அரசர் மூன்றாம் டிரிடோட்சினால் 14 வருடங்கள் சிறை வைக்கப்பட்டார். பின்னர் புனித கிரகரி அரசரின் சமய ஆலோசகராக இருந்து, அவர்கள் சமயம் மாறுபவர்களுக்கான நடவடிக்கையை நாட்டில் மேற்கொண்டனர். 301 ஆம் ஆண்டில், கிறித்தவ நாடு என்று அறிவித்த உலகில் முதல் நாடாக ஆர்மீனிய இருந்தது.[1][4][5]

ஆரம்பத்தில் சிறிய கோயில் ஒன்று புனித கிரகரியின் திருநிலைப்படுத்தலைக் குறிக்கும் விதமாக கி.பி 642 இல் கட்டப்பட்டது. பல நூற்றாண்டுகளான இது பலதடவைகள் மீள்கட்டுமானத்திற்குள்ளானது. 1662 இல், பழைய சிறு கோயில் இடுபாட்டுப் பகுதியில் பெரியளவில் "கடவுளின் பரித்தத் தாய்" எனும் பெயரில் கட்டப்பட்டது. தற்போது வழமையான தேவாலய வழிபாடுகள் இதில் நடைபெறுகிறது. ஆர்மீனியாவில் இது ஒரு மிகவும் பார்வையிடப்படும் இடமாகவுள்ளது.[5]

புவியியல்

[தொகு]

கோர் விரப் பிரதான நெடுஞ்சாலையில் இருந்து 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) தூரத்தில் போகர் வேடியிலுள்ள சிறுகுன்றின் மேல் அமைந்துள்ளது. தலைநகரும் ஆர்மீயாவில் பெரிய நகருமான யெரெவான் வடக்கில் 30 கிலோமீட்டர்கள் (19 mi) தூரத்தில் உள்ளது. இது துருக்கிய - ஆர்மீனிய எல்லையிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் (330 அடி) தூரத்தில் உள்ளது. முள்ளுக் கம்பி வேலியினால் அமைந்த அச்சிக்கல் நிறைந்த எல்லைப் பிரதேசத்தில் இராணுவ நிலைகள் உள்ளன.[4][6][7]

துறவியர் மடம் பச்சை புல்வெளி நிலங்களாலும் திராட்சைத் தோட்டங்களாலும் அரராத் சமவெளியில் சூழப்பட்டுள்ளதோடு அரராத் மலையின் காட்சியும் உள்ளது. ஆராஸ் ஏரி துருக்கியின் ஆராலிக்கிற்கு எதிர்ப்பக்கத்தில் துறவியர் மடத்திற்கு அண்மையில் ஒடுகிறது.[8]

வரலாறு

[தொகு]
முதலாம் ஆர்ட்ஸ்சஸ் புனித கிரகரியினால் திருமுழுக்குப் பெறுதல்.

பண்டைய ஆர்மீனிய அரசின் நிறுவனர் முதலாம் ஆர்ட்ஸ்சஸ் தன்னுடைய ஆர்மீனியத் தலைநகரை அட்டசாத்தில் கி.மு 180 இல் உருவாக்கினார். உரோமினால் துன்பத்திற்குள்ளான கத்தேயின் தளபதி ஹன்னிபால் அட்டசாத் உருவாக்கத்தில் செயல்பட்டதாக நம்பப்படுகிறது.[4] மூன்றாம் கொஸ்ரோவ் ஆட்சியில் (330–339) அரச தலைநகராக திவின் மாற்றப்படும் வரை அட்டசாத் தலைநகராகத் திகழ்ந்தது.[9] பின்னர், பாரசீக அரசன் இரண்டாம் சாபுரினால் அட்டசாத் அழிக்கப்பட்டது.[7] அட்டசாத் கோர் விரப்பின் சிறு குன்றுக்கு அருகில் உள்ளது.[10] இங்கு சிறு கோயில் கட்டப்படுவரை, கோர் விரப் அரச சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டது.

மூன்றாம் டிரிடேட்ஸ் அரசர் ஆர்மீனியாவை ஆழும்போது, அவருடைய உதவியாளர் கிறித்தவராகவும் (கிரகரி) கிறித்தவத்தை போதிப்பவராகவும் இருந்தார். ஆயினும், டிரிடேட்ஸ் ஒரு பாகால் சமயத்தை சார்ந்தவராகவும், கிரகரியின் சமயத்தை விரும்பாமலும், அதன் விளைவாக கிரகரியை மிகவும் சித்திரவதைக்கு உள்ளாகினார். கிரகரியின் தந்தைதான் அரசரின் தந்தையின் கொலைக்குக் காரணம் என்ற செய்தியை அரசர் அறிந்ததும், கிரகரியின் கைகளையும் கால்களையும் கட்டி அட்டசாத்தில் அமைந்துள்ள இருளான இருட்டறையில் இறக்கும்படி கோர் விரப்பினுள் எறியப்பட்டார். மேலும், கிரகரி அனகிட்டா என்ற தேவதைக்கு பலி செலுத்த மறுத்தமை அரசரை எரிச்சலுக்கு உள்ளாக்கி கிரகரியை சித்திரவதை செய்து கோர் விரப் சிறையிலடைக்கச் செய்தது.[11] பின்பு அவர் மறக்கப்பட்டு, அரசர் போரையும் கிறித்தவர்களைச் சித்திரவதை செய்வதையும் தொடர்ந்தார்.[12]

ஆயினும், கிரகரி சிறையிலிருந்த 13 ஆண்டுகளில் இறக்கவில்லை. அவருடைய உயிர்வாழ்தலுக்கு ஒரு கிறித்தவ விதவைப் பெண் காரணமாயிருந்தாள். உள்ளூர் நகரத்தில் வசித்த அவள் விசித்திர கனவுக் காட்சியால் செல்வாக்கு பெற்றதோடு, தொடர்ச்சியாக குழியினுள் புதிய வெதுப்பியை போட்டு கிரகரிக்கு உணவளித்தாள்.[12]


உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 "Armenica.org: Khor Virap". Official web site of Armenia. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "The Main Sightseeings of Armenia:Khor Virap Monastery" (PDF). Portfolio Enterprise. Archived from the original (pdf) on 2011-07-06. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Ararat Landmarks – Khor Virap Monastery". advantour.com. பார்க்கப்பட்ட நாள் 18 February 2011.
  4. 4.0 4.1 4.2 "Khor Virap Monastery". Armenian Travel Bureau. பார்க்கப்பட்ட நாள் 15 February 2011.
  5. 5.0 5.1 Noble, pp. 176–
  6. Julie Hill (18 December 2006). The Silk Road Revisited: Markets, Merchants and Minarets. AuthorHouse. pp. 253–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4259-7280-6. பார்க்கப்பட்ட நாள் 13 February 2011.
  7. 7.0 7.1 "Cities and sites". Khor Virap Monastery. Plant Genetic Sources in Central Asia and Caucasus. Archived from the original on 22 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 16 February 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. Mabdesian, Arshng (1921). The New Armenia. The New Armenia Pub. Co. pp. 8–. பார்க்கப்பட்ட நாள் 18 February 2011.
  9. Nicholas Holding (1 October 2006). Armenia: with Nagorno Karabagh. Bradt Travel Guides. pp. 120–122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84162-163-0. பார்க்கப்பட்ட நாள் 13 February 2011.
  10. Brady Kiesling; Raffi Kojian (April 2001). Rediscovering Armenia: an archaeological/touristic gazetteer and map set for the historical monuments of Armenia. Tigran Mets. பார்க்கப்பட்ட நாள் 13 February 2011.
  11. Mircea Eliade; Charles J. Adams (1987). The Encyclopedia of religion. Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-909750-2. பார்க்கப்பட்ட நாள் 13 February 2011.
  12. 12.0 12.1 Christian History Project. By this sign: A.D. 250 to 350 : from the Decian persecution to the Constantine era.

நூல் குறிப்பு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Khor Virap
என்பதில் ஊடகங்கள் உள்ளன.