கேட்புலத்தொகுதி
கேட்புலத்தொகுதி (auditory system) கேட்டல் என்னும் ஒலியை உணர்வதற்கான உணர்வுத் தொகுதி ஆகும். இதற்குரிய புலனாக செவி விளங்குகிறது.
செவியின் அமைப்பு
[தொகு]புறச்செவி
[தொகு]செவிக் குழாயினைச் சுற்றி அமைந்துள்ள குருத்தெலும்பு மடிப்புக்கள் புறச்செவி ஆகும். இவை காது மடல் எனப்படுகின்றன.
நடுச்செவி
[தொகு]ஒலி அலைகள் செவிக் குழாயின் ஊடாக செவிப்பறையில் அறைகின்றன. சம்மட்டியுருவெலும்பு, பட்டடையுருவெலும்பு, அங்கவடி எலும்பு என்ற மூன்று சங்கிலி போன்ற எலும்புகள் இந்த ஒலி அலைகளை உயரழுத்த அதிர்வுகளாக மாற்றுகின்றன. இவை பின்னர் காக்ளியா எனப்படும் நத்தை எலும்பில் நரம்புத் தூண்டல்களாக மாற்றப்படுகின்றன.
உட்செவி
[தொகு]உட்செவியின் பெரும்பங்காக நத்தை எலும்பு உள்ளது.
நத்தை எலும்பு
[தொகு]நத்தை எலும்பு அல்லது உட்செவிச் சுருள் மூன்று பகுதிகளால் ஆனது. இதில் நீர்மம் நிரப்பப்பட்டுள்ளது. இங்குதான் ஒலி அலைகள் மின் சமிக்ஞைகளாக நரம்பணுக்களில் மாற்றப்படுகின்றன.
மைய கேட்புணர்வுத் தொகுதி
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Promenade 'round the cochlea பரணிடப்பட்டது 2007-08-27 at the வந்தவழி இயந்திரம்
- Washington University Neuroscience Tutorial - Auditory system பரணிடப்பட்டது 2006-02-05 at the வந்தவழி இயந்திரம்