கிங்காகு ஜி
கிங்காகு ஜி 鹿苑寺 | |
---|---|
கிங்காகு ஜி அல்லது பொற் கூடாரக் கோயிலின் தோற்றம் | |
தகவல்கள் | |
குன்றின் பெயர் | கோகுசான் |
மதப்பிரிவு | சென் புத்தமதம், ரின்சாய் பிரிவு, சோகுகூ பள்ளி |
Venerated | அவலோகிதர் |
நிறுவல் | 1397 |
நிறுவனர்(கள்) | அசிங்ககா யோகிமிட்சு |
நிறுவிய மதகுரு | முசோ சொசிகி |
முகவரி | 1 கின்ககுஜி சோ, கிட்டாகு, கியோத்தோ, கோயோடோ[1] |
நாடு | சப்பான் |
இணையத்தளம் | http://www.shokoku-ji.jp/k_about.html# |
கிங்காகு ஜி (Kinkaku-ji (金閣寺? அர்த்தம்: "பொற் கூடாரக் கோயில்"), அலுவலகப் பெயர் Rokuon-ji (鹿苑寺? அர்த்தம். "மான் பூந்தோட்டக் கோயில்") இது சப்பானின் கியோத்தோவில் உள்ள சென் புத்தமதக் கோயில் ஆகும்.[2] இது சப்பானிலுள்ள புகழ் வாய்ந்த கட்டடங்களில் ஒன்றாகவும், அதிகளவு வருகையாளர்களைக் கவரும் ஒன்றாகவும் உள்ளது.[3] இது சப்பானின் தேசிய சிறப்பு வரலாற்று இடமாகவும், தேசிய சிறப்பு நிலத் தோற்றமாகவும், 17 பண்டைய கேயோடோ வரலாற்று நினைவுச் சின்னங்களின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் உள்ளது.[4]
வரலாறு
[தொகு]கிங்காகு ஜி பகுதி தொடக்கத்தில் கிராம மாளிகையாக, ஆற்றல் மிக்க அரசியல் மேதையான "சயோன்ஜி" என்பவருக்குச் சொந்தமாக இருந்தபோது "கிட்டாயமா டாய்" (Kitayama-dai) என அழைக்கப்பட்டது.[5] கின்ககு-ஜியின் வரலாறு 1397 இற்குரியதாக இருந்தபோது கிராம மாளிகை சயோன்ஜி குடும்பத்தினரால் வாங்கப்பட்டு, பின்னர் கிங்காகு ஜி தொகுதியாக மாற்றப்பட்டது[5] . யோகிமிட்சு இறந்ததும் அவருடைய மகன் சென்னிற்கு மாற்றிவிட்டதாக அவருடைய மனைவி கூறியிருந்தார்.[3][6]
ஒனின் போரின்போது (1467–1477), கூடாரம் முதல் கட்டிடத் தொகுதி வரையான முழுக் கட்டடமும் தீக்கிரையாகியது.[5]
சூலை 2, 1950 அன்று 2:30 மு.ப. வேளையில், 22 வயதான புதிய பிக்குவால் கூடாரம் தீக்கிரையாக்கப்பட்டது. பிறகு, அவர் அக்கட்டடத்திற்குப் பின்னால் உள்ள மலையில் தற்கொலை செய்ய முயற்சித்தார். ஆனாலும் அவர் காப்பாற்றப்பட்டுப் பாதுகாப்பில் வைக்கப்பட்டார். பிக்கு ஏழு வருட சிறைவாச தண்டனை பெற்றாலும், அவருக்கிருந்த மனவியாதி (தொல்லை கொடுக்கும் மனப்பான்மை, மனப்பித்து) காரணமாக செப்டம்பர் 29, 1955 இல் விடுதலை செய்யப்பட்டார். காச நோய் காரணமாக அவர் இறந்தார்.[7] தீயினால் அசிங்ககா யோகிமிட்சுவின் சிலை அழிந்தது. பின்னர் புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1956 ஆம் ஆண்டு புனைகதையான "பொற் கூடாரக் கோயில்" என்ற நூலில் அச்சம்பவம் மையமாகவுள்ளது.
தற்போதைய கூடாரக் கட்டுமானம் புதிதாக 1955 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.[2] இது 12.5 மீ. உயரம் கொண்ட மூன்று மாடிகளை உடையது.[8] புனரமைப்பானது மூலத்தின் நகலாகவுள்ளது என்று கூறப்பட்டாலும், மூலக் கட்டமைப்பில் பரந்த பொன் இலைப் போர்வை அல்லது பூச்சு காணப்பட்டது என்ற சில சந்தேகங்கள் உள்ளன.[3] 1984 இல், சப்பானிய அரக்கு சாயப் பூச்சு சிறிது அழுக்காகியதும், புதிய பூச்சுடன் பொன் இலைக்கு பொன் மூலாம் ஆகியன மூலப் பூச்சைவிட (0.1 மைக்ரோமீட்டருக்குப் பதில் 0.5 மைக்ரோமீட்டர்) அதிக கனத்தில் பூசப்பட்டு, 1987 இல் வேலை நிறைவுற்றது. மேலதிகமாக, உட்புறக்கட்டம், ஓவியங்கள், அசிங்ககா யோகிமிட்சுவின் சிலை என்பன புதுப்பிக்கப்பட்டன. இறுதியில், 2003 இல் கூரை புதுப்பிக்கப்பட்டது.
கிங்காகு எனும் பெயரின் மூலம் கூடாரத்தை மூடியிருந்த பொன் இலைகளினால் பெறப்பட்டது. பொன் நிறம் கூடாரத்திற்கு அதன் அர்த்தத்தினால் முக்கியத்துவம் பெறுகிறது. பொன் மாசுபடுதலில் இருந்து தூய்மைப்படுத்தி தணிக்கும் அல்லது மரணத்திலிருந்து மறையான சிந்தனையிலிருந்து தூய்மைப்படுத்தும் என்ற கருத்தினைக் கொண்டுள்ளது.[9] பொன் இலைக்காக இந்த அர்த்தத்தைவிட, முரோமச்சி காலம் பாரியளவில் மிகையளவுப் பார்வையில் தங்கியிருந்தது.[10]
வடிவமைப்பு விபரம்
[தொகு]பொற் கூடாரம் (金閣 Kinkaku?) தரையிலுள்ள ரோகூன் கோயிற் தொகுதியிலிருந்து மூன்று மாடிக் கட்டத்தைக் கொண்டது.[11] உச்சியிலுள்ள இரு கூடாரங்களும் தூய பொன் இலைகளினால் மூடப்பட்டுள்ளது.[11] இப்பகுதி புத்தரின் (புத்தரின் சாம்பல்) புனிதப் பொருட்களை வைத்திருக்கும் இடமாகவுள்ளது. இக்கட்டம் அப்பகுதியிலுள்ள இரு கோயில்களுக்கு (வெள்ளிக் கூடாரக் கோயில், சொகோசு) முக்கிய மாதிரியாகத் திகழ்கிறது.[2] அக்கோயில்கள் கட்டப்பட்டபோது, கிங்காகு ஜிவின் வடிவம் பயன்பட்டதோடு, அதன் இரண்டாம், மூன்றாம் மாடிகளின் பெயரையும் இவற்றுக்குப் பாவிக்கப்பட்டது.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ "Tourist Facilities of Japan – Kinkaku-ji Temple Garden". Japan National Tourism Organization. பார்க்கப்பட்ட நாள் 2010-07-15.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Kinkakuji Temple - 金阁寺, Kyoto, Japan". Oriental Architecture. பார்க்கப்பட்ட நாள் 2010-07-13.
- ↑ 3.0 3.1 3.2 Bornoff, Nicholas (2000). The National Geographic Traveler: Japan. National Geographic Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7922-7563-2.
- ↑ "Places of Interest in Kyoto (Top 15 most visited places in Kyoto by visitors from overseas)". Asano Noboru. Archived from the original on 2017-08-16. பார்க்கப்பட்ட நாள் 2010-07-15.
- ↑ 5.0 5.1 5.2 "Kinkaku-ji in Kyoto". Asano Noboru. Archived from the original on 2017-12-13. பார்க்கப்பட்ட நாள் 2010-07-15.
- ↑ Scott, David (1996). Exploring Japan. Fodor's Travel Publications, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-03011-5.
- ↑ Albert Borowitz (2005). Terrorism for self-glorification: the Herostratos syndrome. Kent State University Press. pp. 49–62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87338-818-4. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2011.
- ↑ Young, David, and Michiko Young. The art of Japanese Architecture. North Claredon, VT: Turtle Publishing, 2007. N. pag. Print.
- ↑ Gerhart, Karen M. The material culture of Death in medieval Japan. N.p.: University of Hawaii Press, 2009. N. pag. Print.
- ↑ “Pregil, Philip, and Nancy Volkman. Landscapes in HIstory: Design and Planning in the Eastern and Western tradition. Hoboken, NJ: John Wiley & Sons Inc., 1992. N. pag. Print.”.
- ↑ 11.0 11.1 Eyewitness Travel Guides: Japan. Dorling Kindersley Publishing (2000). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7894-5545-5.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official site of Kinkaku-ji (Japanese language)
- Live camera feed of Kinkaku-ji (Japanese language) பரணிடப்பட்டது 2012-10-05 at the வந்தவழி இயந்திரம்
- Oriental Architecture – Kinkakuji Temple
- Kinkaku-ji video
- Kinkaku-ji பரணிடப்பட்டது 2016-03-26 at the வந்தவழி இயந்திரம் Photosynth view of Kinkaku-ji (requires Silverlight)