காலாசு
Appearance
காலாசு (greave) என்பது போர்த்தொழிலின் பொழுது போர்மறவரின் கணைக்கால் (shin) என்ற காலின் முற்பக்கத்தை அடிகாயம் விழாமே மறைக்கும் ஆசு அல்லது கவசம் ஆகும்.
சொல்வழக்கமும் மூலமும்
[தொகு]காலாசு என்ற இச்சொல் காற்கவசமென்ற பொருளிலே தமிழில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டினதான சீவகசிந்தாமணி என்ற நூலில் வழங்ககியுள்ளதைக் காண்கின்றோம்.
சென்னைப் பேரகராதி[1] அதனைச் சான்றாகக் காட்டிப் பொருள்விளக்குகிறது:
காலாசு kālācu , n. < கால்¹ + ஆசு¹. Greaves; காற்கவசம். காலாசோ டறவெறிந்த கனைகழற்கால் (சீவக. 2236).
ஆசு[2] என்ற சொற்குப் பொருள் கவசம், பற்றுக்கோடு என்பதாகும்.