காட்சி விளைவுகள்
வி.எஃப்.எக்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் காட்சி விளைவுகள் என்பது கணினியைப் பயன்படுத்தி ஒரு காணொலியின் படங்களை மாற்றி அமைப்பதோ தேவைக்கேற்ப புதிய படங்களை உருவாக்கி எண்ணிம நிகழ்த்தலின் மூலம் அவற்றைக் காணொலியில் சேர்ப்பதோ ஆகும்.[1][2]
திரைப்படத் தயாரிப்பின் போது படம்பிடிக்கப்பட்ட காணொலி பதிவுகளையும் கணினி வரைகலை அம்சங்களையும் முறையே இணைத்து ஒரு மெய்நிகர் படத்தை உருவாக்கவதே காட்சி விளைவுகள் பயன்படுத்துவதன் நோக்கமாகும்.
பயன்படும் நுட்பங்கள்
[தொகு]- சிறப்பு விளைவுகள் :
சிறப்பு விளைவுகள் அல்லது எஸ்.எஃப்.எக்ஸ் என்பது கணினி நுட்பங்களையும் பார்வைத் திறனையும் ஒப்பிட்டு அதற்கேற்றவாறு சில காட்சி தந்திரங்கள் செய்வது ஆகும்.
இயக்கம் கைப்பற்றல் எனப்படுவது குறித்த ஒரு நபர் அல்லது பொருளின் அசைவை பதிவு செய்து கணினியில் உருவாக்கப்பட்ட எண்ணிய மாதிரி ஒன்றிற்கு மாற்றீடு செய்தல் ஆகும்.
இயங்குபடம் என்பது சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட பல படங்களை வேகமாக இயக்கப்படுவதன் மூலமாக உருவாக்கப்படுவதாகும்.இயக்கமூட்டல் என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குவதாகும்.