உள்ளடக்கத்துக்குச் செல்

ஓடில்லா நத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/ஓடில்லா நத்தை|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஓடில்லா நத்தை
Various species of British land slugs, including (from the top) the larger drawings: Arion ater, Kerry slug, Limax maximus and Limax flavus
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): ஓடில்லா நத்தை

ஓடில்லா நத்தை(அ) தரைவாழ் ஓடில்லா நத்தை, என்பது ஓடில்லாத தரை வாழ் மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த வயிற்றுக்காலி ஆகும். ஓடில்லா நத்தை என்பது முற்றாக ஓடில்லாத, ஓடு குறைக்கப்பட்ட நத்தைகளையும் குறிக்கும்.

பாகுபாடு

[தொகு]

பல்மோனாட்டா(Pulmonata) இல் அடக்கும் ஆறு வகுப்புகளில் ஒன்சிடியேசியே (Onchidiacea) மற்றும் சோலியோலீஃபேரா(Soleolifera) ஆகியவை தனியே ஓடில்லா நத்தைகளை அடக்கும். மற்றைய குடும்பமான சிக்முரேத்திரா (Sigmurethra) ஓடில்லா நத்தைகளுடன் நத்தைகளையும் உள்ளடக்கும்.[1]

விபரிப்பு

[தொகு]
Drawing of slug with labels for the foot (bottom side), the foot fringe that surrounds it, the mantle behind the head, the pneumostome for breathing, and the optical and sensory tentacles
ஓடில்லா நத்தையின் புறத்தோற்ற உடற்கூறுகள்

ஓடில்லா நத்தையின் புறத்தோற்ற உடற்கூறுகள் :

உணர்கொம்புகள் சுவாசப்பைக்குரிய தரைவாழ் வயிற்றுக் காலிகளான தரைக்குரிய ஓடில்லா நத்தைகள் இரண்டு சோடி உணர்கொம்புகளை தலையில் கொண்டிருக்கும். மேலே உள்ள உணர்கொம்பு ஒளிக்கு உணர்திறன் கொண்டது. அதன் அடியில் கட்புள்ளி காணப்படும். கீழாகக் காணப்படும் ஊணர் கொம்பு மண நுகர்ச்சிகுரியது. இரண்டு உணர்கொம்புகளையும் உள்ளிளுக்கும் தன்மை காணப்படும்.

மேற்கவசம் ஓடில்லா நத்தையின் மேலே தலைக்குப் பின்னாக சேணத்தை போன்ற வடிவத்தில் மேற்கவசம் காணப்படும். இதற்குக் கீழாக பிறப்புறுப்பு மற்றும் குதம் காணப்படும். ஒரு பக்கமாக பொதுவாக வலது புறமாக சுவாச உறுப்பு (துளை) காணப்படும்.

வால் மேற்கவசத்திற்குப் பின்னான பாகங்கள் வால் எனப்படும்.

ஏரா சில இனங்களில் (எ.கா:Tandonia budapestensis) வாலின் நடுவிலிருந்து முதுகின் மேலாக உயரமான பகுதி காணப்படும். இது ஏரா எனப்படும்.

பாதம் ஓடில்லா நத்தையின் தட்டையான கீழ்ப்பாகம் 'பாதம்' எனப்படும். மற்றைய குடற்காலிகளைப் போலவே ஓடில்லா நத்தையும் பாதத்தின் கீழாகக் காணப்படும் தசைகளின் சுருக்கம் காரணமான சந்தம் பொருந்திய அசைவின் மூலம் இடம் பெயரும். ஏக காலத்தில் சுரக்கப்படும் சளியத்தின் மூலம் பாத இழையங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் பயணிக்கும்.[2]

உடற்றொழிலியல்

[தொகு]
அம்பியோலிமக்சு வகையைச் சேர்ந்த ஓடில்லா நத்தை, பிரீமொன்ட், கலிபோணியா

ஓடில்லா நத்தைகளின் உடல் பெரும்பாலும் நீரைக் கொண்டிருக்கும்,ஓடு முழுமையற்றுக் காணப்படும் அதன் மென்மையான உடல் உலர்வைத் தடுக்கும். தப்பிவாழ்தலுக்காக பாதுகாப்புச் சளியப் பதார்த்தத்தை உருவாக்கும். பெரும்பாலுமான குலவகைகள் மழை பெய்த பின்னர் நிலம் ஈரலிப்படைவதால் செயல் திறன் மிக்கதாக மாறும். உலர்வான காலங்களில் மறைப்பான இடங்களான மரப்பட்டை, விழுந்த மரக்கிளை, குன்றுகள், ஏனைய ஈரலிப்பான இடங்களில் உடலை வைத்துக் கொண்டிருக்கும்.[2]

ஓடில்லா நத்தைகள் இரண்டு வகையான சளியத்தைச் சுரக்கும்: ஒருவகை மெல்லய நீர்த்தன்மையானது மற்றையது தடித்த ஒட்டுந்தன்மையானது. இரண்டும் நீர் உறுஞ்சும் தன்மையானது. மெல்லிய சளியம் பத்தின் நடுப்பகுதியில் இருந்து அதன் விளிம்பு வரைப் பரவும். தடியத்த சளியம் பின்னிருந்து முன் நோக்கிப் பரவும். ஓடில்லா நத்தையால் சுரக்கப்படும் தடித்த சளியம் விலங்கின் உடல் முழுவதும் பரந்திருக்கும்.[2] பாதத்தல் சுரக்கப்படும் சளியம் நிலைக்குத்து சுவர்களின் வழுக்காமல் இருக்க நார் பதார்த்தங்களைக் கொண்டிருக்கும்.

இனப்பெருக்கம்

[தொகு]
சளிய இழை மற்றும் திட்டில் மிதந்தபடி சுவரில் இருக்கும் ஓடில்லா நத்தை.

ஓடில்லா நத்தைகள் இருபால் தன்மைக்குரியது. ஆகவே ஆண், பெண் பாகங்கள் ஒன்றாகக் காணப்படும்.[3] ஓடில்லா நத்தை இனச்சேர்க்கை ஒன்றை ஏற்படுத்தும்போது ஒன்றை ஒன்று சுற்றிக் கொள்ளும். இதன் போது நீட்டிகொண்டிருக்கும் பாலுறுப்பு மூலம் விந்து பரிமாறப்படும். சில நாட்களின் பின்னர் ஏறக்குறைய 30 முட்டைகள் வீதம் தரையில் குழியிட்டு அல்லது மறைவான இடத்தில் இடும்.

சூழலியல்

[தொகு]

ஓடில்லா நத்தைகள் பிரிகையுறும் தாவரங்களையும் பூஞ்சணங்களையும்உண்பதால் சூழலியல் முக்கியத்துவம் உடையது. [4] ஊனுண்ணி ஓடில்லா நத்தைகளும் இறந்த உடற்பாகங்களை ஊண்ணும்.

உணவு வழக்கம்

[தொகு]
பெரிய ஓடில்லா நத்தை, மனாலி, இந்தியா

ஓடில்லா நத்தையின் பல்வேறு குலவகைகள் பெரு வாரியான உணவு வகைகளான இலைகள், இலைக்கன், லைக்கன்கள் என்பவற்றை உண்ணக்கூடியது.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "How to be sluggish", Tuatara, 25 (2): 48–63
  2. 2.0 2.1 2.2 Denny, M. W.; Gosline, J. M. (1980). "The physical properties of the pedal mucus of the terrestrial slug, Ariolimax columbianus". Journal of Experimental Biology 88 (1): 375–393. http://jeb.biologists.org/content/88/1/375.full.pdf. 
  3. "Perverted cannibalistic hermaphrodites haunt the Pacific Northwest! " The Oyster's Garter". Theoystersgarter.com. 24 March 2008. Archived from the original on 13 April 2008. பார்க்கப்பட்ட நாள் 15 August 2016.
  4. 4.0 4.1 "What Do Slugs Eat?". animals.mom.me. பார்க்கப்பட்ட நாள் 15 August 2016.
  5. Keller, H. W.; Snell, K. L. (2002). "Feeding activities of slugs on Myxomycetes and macrofungi". Mycologia 94 (5): 757–760. doi:10.2307/3761690. பப்மெட்:21156549. http://www.mycologia.org/content/94/5/757.full. பார்த்த நாள்: 15 August 2016.