உள்ளடக்கத்துக்குச் செல்

ஏவாசெராடொப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏவாசெராடொப்ஸ்
புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசியக் காலம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
துணைவரிசை:
பெருங்குடும்பம்:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
ஏவாசெராடொப்ஸ்

இனங்கள்
  • ஏ. லாம்மேர்சி டாட்சன், 1986 (வகை)

ஏவாசெராடொப்ஸ் என்பது செராடொப்சிட் தொன்மா எனும் பேரினத்தைச் சேர்ந்தது. இது இன்றைய வட அமெரிக்காவின் பிந்திய கிரீத்தேசியக் காலத்தில் பிந்திய கம்பானியக் காலத்தைச் சேர்ந்தது.

ஏவாசெராடொப்சின் முதலாவது புதைபடிவம் மொண்டானாவில் உள்ள ஜூடித் ஆற்று அமைவுப் பகுதியில் 1981 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இவை வரலாற்றுக்கு முந்தியகால ஆற்றுப் படுகையில் பாதுகாக்கப்பட்ட நிலையில் பரந்து காணப்பட்டது. இந்த ஏவாசிராடொப்ஸ் மாதிரி, இதன் உடல் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டு மண்படிவில் மூடப்பட்டிருக்கலாம்.

முதல் கண்டுபிடிப்பு எடீ கோல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, பீட்டர் டாட்சன் என்பவரால் 1986 ஆம் ஆண்டில் பெயரிடப்பட்டது. இதன் பெயர் எடியின் மனைவியான ஏவாவின் பெயரைத் தழுவியது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]