உள்ளடக்கத்துக்குச் செல்

இழூல்சு பியான்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இழூல்சு பியான்கி
2012இல் பியான்கி
பிறப்பு(1989-08-03)3 ஆகத்து 1989
இறப்பு17 சூலை 2015(2015-07-17) (அகவை 25)
பார்முலா ஒன் உலக போட்டித்தொடர் வாழ்வழி
நாடுபிரான்சு பிரான்சியர்
செயல்படும் ஆண்டுகள்20132014
அணிகள்மரூசியா F1
பந்தயங்கள்34 (34 starts)
பெருவெற்றிகள்0
வெற்றிகள்0
உயர்மேடை முடிவுகள்0
மொத்த புள்ளிகள்2
துருவநிலை தொடக்கங்கள்0
அதிவேக சுற்றுகள்0
முதல் பந்தயம்2013 ஆத்திரேலிய கிராண் பிரீ
கடைசி பந்தயம்2014 சப்பானிய கிராண் பிரீ
2014 நிலை17th (2 pts)

இழூல்சு பியான்கி (Jules Bianchi, 3 ஆகத்து 1989 – 17 யூலை 2015) மரூசியா பார்முலா 1 அணிக்காக பார்முலா 1 போட்டிகளில் பங்கேற்ற பிரெஞ்சு தானுந்துப் பந்தய ஓட்டுநர் ஆவார்.

முன்னதாக பியான்கி பார்முலா ரெனோ 3.5, கிராண் பிரீ2 தொடர், பார்முலா 3 ஆகிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டில் பார்முலா 1 இல் சோதனையோட்டியாக பெர்ராரி அணியில் இணைந்தார். பின்னர் அதேபோன்ற நிலையில் போர்ஸ் இந்தியா அணியில் அடுத்தாண்டு பங்கேற்றார். 2013இல் ஆத்திரேலியாவில் நடந்த பந்தயத்தில் மரூசியா அணிக்காக அறிமுகமான பியான்கி, தனது முதல் போட்டியில் 15ஆவது இடத்தில் வந்தார். அவ்வாண்டுத் தொடரின் இறுதியில் 19ஆவது இடத்தை எட்டினார். ஆனால் புள்ளிகள் எதுவும் எடுக்கவில்லை. மலேசியாவில் 13ஆவது இடத்தை எட்டியதே அவரது அந்தாண்டின் சிறந்த சாதனையாக இருந்தது. அக்டோபர் 2013இல், அடுத்துவரும் பருவப் பந்தயத்திலும் அதே அணிக்காக ஓட்டுவார் என அந்த அணியினரால் உறுதி செய்யப்பட்டார். 2014 தொடரில், மொனாக்கோவில் தனது முதல் புள்ளிகளைப் பெற்றார்.[1]

விபத்தும் மரணமும்

[தொகு]

அக்டோபர் 5, 2014 அன்று நடந்த சப்பானிய கிராண் பிரீ போட்டியில் ஈரத்தடத்தில் தனது வண்டிக் கட்டுப்பாட்டை இழந்து மீட்பு வண்டி மீது மோதினார்; இந்த விபத்தில் அவரது மூளைக்குப் பலத்த அடிபட்டது.[2][3] சப்பானிலுள்ள மருத்துவமனைக்கு முதலில் எடுத்துச் செல்லப்பட்ட பியான்கி, காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வேதிப்பொருட்கள் மூலம் ஆழ்மயக்கத்திற்கு தூண்டப்பட்டார். பின்னர் அவரது சொந்த நாடான பிரான்சிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு யூலை 17, 2015 அன்று ஆழ்மயக்க நிலையிலேயே மரணமடைந்தார்.[4] 1994ஆம் ஆண்டில் சான் மரீனோ போட்டியில் விபத்தின் மூலம் இறந்த அயர்ட்டன் சென்னாவின் மரணத்திற்குப் பின்னர் இவ்வாறு கிராண் பிரீ போட்டியில் விபத்தில் இறக்கும் முதல் ஓட்டுநராக பியான்கி உள்ளார்.[5]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Straw, Edd; Noble, Jonathan (25 May 2014). "Jules Bianchi says Marussia's first F1 points not luck". Autosport (Haymarket Publications). http://www.autosport.com/news/report.php/id/114141. பார்த்த நாள்: 26 May 2014. 
  2. "Bianchi undergoes surgery after Suzuka crash". Formula 1. 5 October 2014. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
  3. "Bianchi suffered brain injury in crash". F1 Fanatic. 7 October 2014.
  4. DiZinno, Tony (17 July 2015). "Jules Bianchi dies at age 25, his family confirms". NBC Sports. பார்க்கப்பட்ட நாள் 2015-07-18.
  5. "F1 driver Bianchi dies 9 months after Suzuka crash". Reuters (CNN Phillipines). 18 July 2015. http://cnnphilippines.com/sports/2015/07/17/F1-driver-Jules-Bianchi-dies-9-months-after-Suzuka-crash.html. பார்த்த நாள்: 18 July 2015. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]