உள்ளடக்கத்துக்குச் செல்

இராப்பட்டீச்சரம் சேசபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராப்பட்டீச்சரம் சேசபுரீசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

கும்பகோணம் திருவாரூர் பேருந்துச் சாலையில் மணக்காலுக்கு அருகில் உள்ளது.

இறைவன்,இறைவி

[தொகு]

இங்குள்ள இறைவன் சேசபுரீசுவரர் ஆவார். இறைவி அந்தப்புர நாயகி ஆவார். [1]

சிறப்பு

[தொகு]

மூலவர் திருமேனியில் பாம்பு வடிவம் உள்ளது. பைரவர் இங்கு சிறப்பாக வழிபடப்படுகிறார். கோஷ்டத்தில் இருக்கவேண்டிய தட்சிணாமூர்த்தி மண்டபத்தில் காணப்படுகிறார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009