உள்ளடக்கத்துக்குச் செல்

இரசாவி கொராசான் மாகாணம்

ஆள்கூறுகள்: 36°17′53″N 59°36′21″E / 36.2980°N 59.6057°E / 36.2980; 59.6057
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரசாவி கொரசான் மாகாணம்
Razavi Khorasan Province
استان خراسان رضوی
இரசாவி கொரசானின் தலைநகரான மசுகத்தில் இமாம் ரெசாவின் சமாதி
இரசாவி கொரசானின் தலைநகரான மசுகத்தில் இமாம் ரெசாவின் சமாதி
இரசாவி கொரசான் மாகாண மாவட்டங்கள்
இரசாவி கொரசான் மாகாண மாவட்டங்கள்
ஈரானில் இரசாவி கொரசான் மாகாணத்தின் அமைவிடம்
ஈரானில் இரசாவி கொரசான் மாகாணத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 36°17′53″N 59°36′21″E / 36.2980°N 59.6057°E / 36.2980; 59.6057
நாடு ஈரான்
வட்டாரம்வட்டாரம் 5
தலைநகரம்மசுகது
மாவட்டங்கள்28
பரப்பளவு
 • மொத்தம்1,18,884 km2 (45,901 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்59,94,402
 • அடர்த்தி50/km2 (130/sq mi)
நேர வலயம்ஒசநே+03:30 (IRST)
 • கோடை (பசேநே)ஒசநே+04:30 (IRST)
மொழிகள்பாரசீகம்

இரசாவி கொரசான் மாகாணம் (Razavi Khorasan Province (Persianபாரசீக மொழி: استان خراسان رضوی‎, Ostâne Xorâsâne Razavi) என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்று ஆகும். இந்த நிலப்பகுதியானது, ஈரானின் வடகிழக்குத் திசையில் அமைந்துள்ள, ஒரு மாகாணம் ஆகும். மசுகது என்ற நகரமானது, இம்மாகாணத்தின் நடுவில் அமைந்து, இதன் தலைநகரமாகத் திகழ்கிறது. மாகாணத்தில் உள்ள பிற நகரங்கள் குவான், டர்காஸ், செரன், சரக்ஸ், ஃபரிமானன், டோர்பட்-இ ஹேடிரிஹே, டோர்பட்-இ ஜாம், டபத், கஃப், ரோஷ்தகர், காஷ்மீர், பர்தாஸ்கன், நிஷாபூர், சபாஸ்வர், கோனாபாத், கலட் ஆகியவை ஆகும். இரசாவி கொரசான் மாகாணத்தின் மாவட்டங்களாக கலிலாபாத் கவுண்டி, மஹவெத் கவுண்டி, சேனாரன் கவுண்டி, டர்காஸ் கவுண்டி, கலாட் கவுன்ட், கச்சான் கவுண்டி, மஷ்காட் கவுண்டி, சரசஸ் கவுண்டி, நிஷப்பூர் கவுண்டி, ஃபிரூசே கவுண்டி, கோசாப் கவுண்டி, ஜொய்ய்ய்ன் கவுண்டி, ஜோகாத்தி கவுண்டி, தாவாரான் கவுண்டி, சாப்சேவர் குவாந்தான் கவுன்ட், ரோஷ்கார்க் கவுண்டி, டப்பாட் கவுண்டி, பாக்ஸ்ஜ் கவுண்டி, ஜவேக் கவுண்டி, ஃபரிமின் கவுன்ட், டோர்பாட்-ஜாம் கவுண்டி, டோர்பட்-இ ஹேடரிஹெய்ன் டவுன் & டார்பேபே மற்றும் ஷான்சிஸ் கவுண்டி போன்றவையாகும். இந்த ஈரான் மாகணத்தின் சில முக்கிய நகரங்களாக, குச்சன், தர்காசு, செனரன், சரக், பாஃரிமன், டொர்பட்-இ கெய்தாரீ, டொர்பாட்-இ யாம், டெய்பாத், காஃப், ஈரான், ரோசுத்கர், காசுசுமர், பர்தாசுகன், , சசேவர், கோனாபாத், கலத், ரசாவி கோரசன் போன்றவற்றைக் கூறலாம். ஈராக்கின் மிகப் பெரிய மாகாணமான கொராசானாக இருந்து 2004 செப்டம்பர் 29 அன்று பிரிக்கப்பட்ட மூன்று மாகாணங்களில் இரசாவி கொரசான் மாகாணமும் ஒன்று ஆகும். இந்த மாகாணமானது 2014 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தால் ஈரானின் ஐந்தாம் வட்டாரத்தின் ஒரு பகுதிகாக ஆக்கப்பட்டது.[2]மசுகது என்ற நகரானது, நிருவாகப் பகுதிகளின் தலைமைச் செயலகமாகச் செயற்படுகிறது.

வரலாறு

[தொகு]

குராசான் பகுதிகளானது, வரலாற்றுப் பக்கங்கள் முழுவதும் தெரியப்படுத்துவது என்னவென்றால், இதன் நிலப்பகுதிகள் முழுவதும், பல்வேறு அரசப் பரம்பரைகளும், அரசாங்கங்களின் எழுச்சியும், வீழ்ச்சிகளுமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, அரேபியர்கள், துருக்கியர்கள், குர்துகள்,[3] பஷ்டூன்கள், துர்க்மென்சுகளும், மங்கோலியர்களும் இந்நில எல்லைகளை மாறி, மாறி ஆண்டு, பல்வகை மாற்றங்களை, இம்மக்களிடையே, நேரத்திற்கு நேரம் கொண்டு வந்தனர்.

ஈரானின் பண்டையப் புவியியலாளர்கள் ஈரானை("சாசானியப் பேரரசு-Ēranshahr"), எட்டு பிரிவுகளாகப் பிரித்து இருந்தனர். அவற்றுள் குராசன்-இன் நிலப்பரப்பு, மிகவும் செழிப்பானதும், மிகப்பெரியதுமாக இருந்தது. ஈரானுக்குள் நுழைந்த, ஆரிய பழங்குடியினர் வசிப்பதற்கான நடுப்பகுதிகளில் ஒன்றாக, ஈசுபரயென் (Esfarayen), மாகாணம், பிற நகரங்களுக்கு நடுவில் திகழ்ந்தது.

வரலாற்றின் பார்த்தியாப் பேரரசு, கோரசன் பகுதியில் இருந்த மெரி (Merv) நிலப்பகுதியில் பல ஆண்டுகள் இருந்தது. சாசானியப் பேரரசு காலத்தில், இந்த நிலப்பகுதியானது, சாபோத்து (Spahbod-Lieutenant General) என்று அழைக்கப்பட்டவர் ஆட்சி செய்தார். அவருக்கு கீழ் இருந்த நான்கு நிலப்பகுதிகளும், தனித்தனி 'மார்கிரேவ்சு' என்னும் தளபதிகளால் (பாட்கோஸ்பான்" )கட்டுப்படுத்தப்பட்டு, இந்த மாகாணங்கள் நிருவகிக்கப்பட்டன.

பாரசீகத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமித்த போது கொராசான் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் இங்கு இருந்த நான்கு பெரிய நகரங்களான நிஷாபர், மெர்வ், ஹெரட், பால்க் போன்றவற்றின் பெயர்களால் அழைக்கப்பட்டன.

651ஆம் ஆண்டில் இஸ்லாமிய அரேபியப் படைகளால் கொராசனை கைப்பற்றப்பட்டது. இப்பகுதி 820 வரை அப்பாசிய மரபினரின் கையில் இருந்தது. அதன்பிறகு 896 ஆம் ஆண்டு ஈரானிய தாஹீத் குலத்தின் ஆட்சியிலும், 900 இல் சாமனித்து வம்சத்தாலும் ஆளப்பட்டது.

கசினியின் மகுமூது 994 இல் கொரசானை வென்றார். 1037ஆம் ஆண்டு செல்யூக் பேரரசின் ஆட்சியாளரான முதலாம் துர்கூல் பேக், நிஷாபூரை வெற்றி கொண்டார்.

1507இல், கொராசான் உஸ்பெக் பழங்குடியினரால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1747இல் நாதிர் ஷாவின் மரணத்திற்குப் பிறகு இப்பகுதியை ஆப்கானிய துரானியப் பேரரசு கைப்பற்றியது.

கஜார்பரம்பரைக் காலத்தில், இங்கிலாந்தும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியம், ஆப்கானியர்களைத் தங்கள் கிழக்கிந்திய கம்பெனியைப் பாதுகாக்க ஆதரவளித்தனர். இவ்வாறு தான், ஏறாத் நகரமானது, பெர்சியாவிலிருந்து பிரிக்கப்பட்டது. நாசர்-அல்-தின் ஷா, ஏறாத் நகரத்தினைத் திரும்பப் பெற, ஆங்கிலேயர்களைப் போரில் தோற்கடிக்க முடியவில்லை. இறுதியாக, 1903 ஆம் ஆண்டில் 'பாரிஸ் ஒப்பந்தம்' முடிவுக்கு கொண்டு வந்தது. ஹெராத் மற்றும் இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதிகளையும், ஏறாத் நகரத்தினையும் ஆட்சி செய்ய ஆங்கிலேயர்கள், ஈரானுடன் பிணக்கு ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

பின்னர் பாரசீகர்களின் கைகளுக்கு வந்த இப்பகுதிகள் ஈராக்கின் மிகப் பெரிய மாகாணமான கொராசானாக இருந்தது. பெரிய குராசான் எனப்பட்ட இது 2004 செப்டம்பர் 29 அன்று இரசாவி கொரசான் மாகாணம், வடக்கு கொரசான் மாகாணம், தெற்கு கொரசான் மாகாணம் என மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டது.

சுற்றுலா

[தொகு]
நிசாப்பூரின் கல்லறை

இந்த மாகாணத்தில் பல்வேறு வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடங்களும், இயற்கைச் சூழல் இடங்களும் உள்ளன. அதில் குறிப்பிட்ட தக்கன யாதெனில், கனிம நீர் நீரூற்றுகள், சிறிய ஏரிகள், பொழுதுபோக்கு இடங்கள், குகைகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள், பல்வேறு நடைபயணம் பகுதிகள் என்பன ஆகும். இவை தவிர, கோரசன் ஏராளமான மத அடிப்படையிலானக் கட்டிடங்களையும், புனித யாத்திரைகளுக்கு உரிய இடங்களையும் உள்ளடக்கி உள்ளது. இதில் இமாம் ரேசாவும், கோஹர்ஷாத் மசூதியும், பல கல்லறைகளும், இமாம்சாதேக்களும் முக்கிய காணவேண்டிய இடங்களுள் அடங்கும். ஈரானின் கலாச்சாரப் பாரம்பரியம், கோராசனின் மூன்று மாகாணங்களிலும் விட வரலாற்றிலும், கலாச்சாரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள் ஆகும். இம்முக்கியம் வாய்த இடங்கள் என, 1179 தளங்களை பட்டியலிடப் பட்டுள்ளது.

காப்பியக் கவிஞர் பிர்தௌசியின் சிலை

இடுசு(Tus) நகரில், கி.பி 935–1025 ஆண்டுகளில் வாழ்ந்த, அக்கீம் அபு ஈ-காசின் பிர்தௌசி துசி அல்லது பிர்தௌசி (Hakim Abu ʾl-Qasim Ferdowsi Tusi Firdawsi) என்பவர், ஒரு புகழ்பெற்ற பாரசீகக் கவிஞரும், சாநாமா("Shahnameh";"Book of Kings") என்னும் தேசியப் பெருங்காப்பியம் (epic poem) இயற்றியனார். இந்த பெருங்காப்பியமே உலகின் நீளமான, காவியமாகக் கருதப்படுகிறது. இவர் பாரசீகப் பெரும்பாவலரும் ஆவார். எ சாமனிதுப் பேரரசின் காலத்திலும் காசனாவிதுப் பேரரசின் காலத்திலும், அவர் புரவலராக இருந்தபொழுது, இது எழுதப்பெற்றது.[4]

கோகர்சாத் மசூதி

ஈரானின், மாசாத்தில், திமுரிட் காலத்தில் கட்டப்பட்ட, ஒரு பெரிய மசூதி இருக்கிறது. இது இப்போது இமாம் ரேசா சன்னதி வளாகத்திற்குள் உள்ள, வழிபாட்டு அரங்குகளில் ஒன்றாக செயற்படுகிறது. கி.பி 1418 இல், திமுரிட் பரம்பரையைச் சேர்ந்த, சாருக்கின் மனைவி, பேரரசர் கோஹர்ஷாத்தின் உத்தரவின் பேரில், இதனை கட்டி எழுப்பினார். இந்த மசூதியை, கட்டிடக் கலைஞர் கவாமெடின் சிராசி என்ற பன்னாட்டு அரசக் கட்டிடக் கலைஞரின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. இந்த மசூதிக்குள், கண்கவர் மொசைக் ஓடுகளின் வேலைகளும்,பல்வேறு கல்வெட்டுகளும், அதன் முற்றத்தில், ஷா அப்பாஸ், ஷா சொல்தான் ஹுசைன், ஷா சோலிமான் சபாவிட் போன்ற சஃபாவிட் ஷாக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, அவர்கள் சன்னதி மீதான பக்தியையும், அந்த மசூதிக் கட்டிடத்தை செம்மையாக கட்டி எழுப்ப, அவர்கள் செய்த பங்களிப்புகளையும் குறித்த விவரங்கள் காணப்படுகின்றன.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Selected Findings of National Population and Housing Census 2011 பரணிடப்பட்டது 2014-11-14 at the வந்தவழி இயந்திரம்
  2. "همشهری آنلاین-استان‌های کشور به ۵ منطقه تقسیم شدند (Provinces were divided into 5 regions)" (in Persian). Hamshahri Online. 22 June 2014 (1 Tir 1393, Jalaali) இம் மூலத்தில் இருந்து 23 June 2014 அன்று. பரணிடப்பட்டது.. http://www.hamshahrionline.ir/details/263382/Iran/-provinces. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-01. பார்க்கப்பட்ட நாள் 2018-11-24.
  4. Hamid Dabashi (2012). The World of Persian Literary Humanism. Harvard University Press.
  5. Upham Pope, Arthur (1965). Persian Architecture: The Triumph of Form and Color. New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8076-0308-6.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)